குறையொன்றுமில்லை (முதல் பாகம்)
அத்தியாயம் - 41
அர்த்த பஞ்சகம் - இது ராமாயணம் உணர்த்தும் இன்னொரு தர்மம். வேத, சாஸ்திர புராணங்கள் எல்லாமே அதன் மேல்தான் நிற்கின்றன.
நாம் அடைய வேண்டிய பரப்ரும்மத்தினுடைய ரூபம், வடிவழகு என்ன என்பது நமக்கு நன்றாகத் தெரிய வேண்டும். அதன் ஸ்வரூப, ரூப, குண விசே-ஷங்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.
அந்த பரப்ரும்மத்தை அடைய வேண்டிய ஆத்ம ஸ்வரூபத்தையும் - அதாவது நாம் யார் என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
அவனை அடைய வேண்டிய வழி எது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
அவ்வாறு அடைந்த பிறகு ஏற்படக்கூடிய பலன் என்ன என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
அவனை அடையவிடாமல் எது என்றும் தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்த ஐந்து விஷயங்களின் (அர்த்த பஞ்சகம்) மேல்தான் வேதமே நிற்கிறது.
இந்த உலகம் இருக்கிறதே... ப்ரக்ருதி - இது பகவானைத் தெரிய விடாமல் கண்ணை மறைக்கிறது.
கோயிலில் திரை போடுவதற்குக் காரணம் என்ன? அவனுக்கும் நமக்கும் ப்ரக்ருதி தடையாக இருக்கிறது என்பதைக் காட்டத்தான்.
அதனால்தான் "தெரதீயகராதா" என்று அந்த ஏழுமலையான் சன்னதியிலே நின்று பாடினார் தியாக ப்ரும்மம். அந்தத் திருவேங்கடமுடையான் உருவத்தை மறைத்த திரையைச் சொல்லலை அவர்.. அவனுக்கும் நமக்கும் ப்ரக்ருதியாகிய திரையைச் சொல்கிறார். அந்தத் திரையைத் திறக்கக் கூடாதா? "உன்னை நான் என்னுள்ளே பார்க்கும் காலம் வருமா" என்று கேட்டார்.
ஆகவே, நாம் எம்பெருமானைப் பார்ப்பதற்குப் பெரிய தடையாக இருக்கிறது இந்த ப்ரக்ருதி சம்பந்தம்.
அவனை அடைவதற்கான உபாயம் பக்தி, சரணாகதி.. அவனை அடைந்த பிற்பாடு அவன் திருவடியிலேயே நித்ய கைங்கர்யம் பண்ணும் தன்மை உண்டாகும்.
சூரியன் இருக்கிறான். ஒளிக்கற்றையை உடையவனாகவும் இருக்கிறான். ஒளியே அவனாகவும் இருக்கிறான். அந்த மாதிரி இங்கே ஆத்மா, அறிவுடையதாகவும் இருக்கிறது - அறிவாகவும் இருக்கிறது. அதற்கு இருக்கும்படியான ஞானம் மிகவும் உயர்ந்தது. அந்த ஞானம் பரவி மோக்ஷத்தை அடைந்துவிட்டால், எல்லாவற்றையும் இருக்கிற இடத்தில் இருந்தபடியே ஆத்மா உணர ஆரம்பிக்கும்.
ஆகவே ஆத்ம ஸ்வரூபத்தை உணர வேண்டும். அதைத்தான் ராமாயணம் நமக்கு நன்கு விளக்கிக் காட்டுகிறது. (அர்த்த பஞ்சகம்)
ஆகிஞ்சன்யம் என்பதும் ஒரு தர்மம். எவ்வளவு தான் நாம் செய்தாலும் அது பகவானுடைய காருண்யத்துக்கு எதிரில் செல்லாது. ஒரு எலுமிச்சம் பழத்தைக் கொடுத்து விட்டு ராஜ பதவி கேட்கிற மாதிரிதான் அது! மேலும், பகவானிடத்திலே போய், "நான் அதைக் கொடுத்தேனே.. நீ இதைத் தரக்கூடாதா" என்று கேட்கலாமா? "அன்றைய தினம் நூறு தேங்காய் உடைச்சேனே" என்று ஞாபகப் படுத்தலாமா..!
நாம் எதைத்தான் செய்தாலும் அவன் காருண்யத்திடத்திலே விலை செல்லாது. அதை நாம் உணரவேண்டும்.
தொண்டரடிப் பொடியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார் - இவர்கள் எல்லோரும் சொல்லக்கூடிய விஷயத்தை நாம் பார்த்தோமானால், அந்தப் பாசுரங்களைப் படித்தோமானால், பகவானுக்கெதிரிலே நாம் எதையும் விசே-ஷமாகச் சொல்ல முடியாது என்பதுதான் தெரிகிறது. பெரியாழ்வார் சொல்கிறார் பாருங்கள்: "நின்னருளே புரிந்திருந்தேன்" "உன் தயைக்கே நான் பாத்திரம்.. உன் கிருபைக்கே நான் பாத்திரம். இப்படி சொல்ல வேண்டுமே ஒழிய, நான் அதைச் செய்தேன், இதைச் செய்தேன்" என்றெல்லாம் பகவானிடத்திலே பேரம் பண்ணக் கூடாது.
ஆகிஞ்சன்யம் என்பதையும் ராமாயணம் விளக்கிக் காட்டுகிறது. சரித்திரத்தில் அது காணக் கிடைக்கிறது. விபீஷணன் அதை எடுத்துச் சொல்கிறான். பரதன் அதை எடுத்துச் சொல்கிறான். இவர்கள் இருவருமே தங்களிடம் எதுவுமே கைமுதல் இல்லை என்று பகவானுடைய சரணாரவிந்தத்தை ஆச்ரயித்தவர்கள். அது ஆகிஞ்சன்யம் எனப்படுகிறது.
ஆகிஞ்சன ஈசலாபம் என்பது மற்றும் ஒரு தர்மம். பரமாத்மாவை அடைதல் ஒரு தர்மம் என்று சொன்னேன். அது அவ்வளவு சுலபத்தில் கிடைக்காது. இடையிலே ஒருத்தர் இருக்க வேண்டும். அவர்தான் ஆசார்யர்.
ஆசார்யரின் துணையால் தான் அவன் நமக்குக் கிடைப்பான்; நாம் அவனைச் சென்றடையலாம்.
ஆஞ்சநேயனுக்கு இங்கே ஆசார்ய ஸ்தானம் இருக்கிறது என்று சுவாமி தேசிகன் விவரிக்கிறார்.
ராமன் தன் திருக்கையில் அணிந்திருக்கும்படியான கணையாழி மோதிரத்தை ஆஞ்சநேயன்தான் எடுத்துப் போய் சீதா பிராட்டியின் கையிலே வைக்கிறான்.
சீதையை அங்கே ஜீவனாக நம் மனத்திலே உருவகப்படுத்திக் கொள்ள வேண்டும். பகவத் அனுக்ரஹம் அந்த ஜீவனுக்குப் பூரணமாய் இருக்கிறது.
மோதிரத்தை ஆஞ்சநேயன் அங்கு கொண்டுபோய்க் கொடுத்தவுடன், சீதாபிராட்டி என்கிற ஜீவனை எம்பெருமான் திருவடியிலே சேர்க்கும் பொறுப்பும் அவனுடையதாகிறது.
ஜீவனானது எப்போதும் பரமாத்மா திருவடியிலே தலைவணங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்பதைக் காட்டத்தான் சீதாதேவி தன் சிரோபூஷணத்தை (தலை ஆபரணம்) ஆஞ்சநேயனிடம் கொடுத்து அனுப்பினாள்.
ராமனின் கைவிரல் மோதிரம் பரமாத்மாவின் அபய ஹஸ்தத்தைக் குறிக்கிறது.
சீதையின் சூடாமணி, தலைவணங்கிய நிலையைக் குறிக்கிறது.
இரண்டையும் நடத்தி வைத்தவன் ஆஞ்சநேயன்.
ராமாயணத்திலே மூன்று இடங்களிலே சீதா கல்யாணம் நடக்கிறது!
இப்படிச் சொன்னால் ஆச்சர்யம் ஏற்படுகிறதல்லவா!
பால காண்டத்தில் நடந்த கல்யாணத்தை வால்மீகி விவரித்தார்.
அயோத்தியா காண்டம் முடிகிற பகுதியில், இன்னொரு கல்யாணம்!
எங்கே என்றால்.. அனுசூயையிடம் சீதா பிராட்டி தன்னுடைய வாக்கினாலேயே வர்ணிக்கிறாள். தன் கல்யாணம் நடந்த விதத்தைச் சொல்கிறாள். அங்கே இரண்டாவது தடவையாக சீதா கல்யாணத்தைக் கேட்கிறோம்.
இந்த இரண்டு கல்யாணமும் யாருக்கு வேண்டுமானாலும் நடக்கும். ஒருத்தருக்குக் கல்யாணம் நடப்பதும் ஒருத்தர் தம் கல்யாணத்தை மற்றவரிடம் விவரிப்பதும் அதிசயமில்லை.
ஆனால், சுந்தர காண்டத்திலே நடந்த கல்யாணம் ஆத்ம விவாகம். இந்த ஆத்மா அவனுடையது என்று சமர்ப்பிக்கிற நிலை. அதை ஓர் ஆச்சார்யர் பக்கத்திலே இருந்துதான் நடத்த வேண்டும். அதைக் காட்டத்தான் சுந்தர காண்டத்திலே சீதாத்மாவை எம்பெருமானின் திருவடியிலே சேர்த்து வைத்தான்.
கிருதக்ருத்யத்வம் என்கிற ஓர் உயர்ந்த விஷயமும் ராமாயணத்திலே சொல்லப்படுகிறது. கிருதக்ருத்யான் யாரென்றால் தனக்கு விதிக்கப்பட்ட கடமையைச் செய்து முடித்தவர்கள். விபீஷண பட்டாபிஷேகம் முடிந்த பிறகு, கிருதக்ருத்யஸ்ததோ ராம: என்று பகவான் அழைக்கப்படுகிறார்.
ராமபிரான் கிருதக்ருத்யன் ஆனான். நான் சொன்ன உயர்ந்த தர்மத்தை நடத்திக் காட்டியவனான்.
இன்னுமொரு தர்மம் - இப்படியிப்படி இரு.. இப்படியிப்படி இராதே என்று எடுத்துச் சொல்கிறது.
அதாவது, வாலி-சுக்ரீவன் போல் இராதே; ராம-லக்ஷ்மணரைபோல் இரு என்கிறது!
வாலி-சுக்ரீவ யுத்தம் நடக்கிறது. அதைப் பார்த்துவிட்டு லக்ஷ்மணன் சகிக்க முடியாமல் தமையனிடம் வந்து கேட்கிறான். இப்படி அண்ணன்-தம்பி சண்டை போடறாளே.. இது நன்றாகவா இருக்கு?
அதற்கு ராமன் சொல்கிறான் பாருங்கள்: நீ இவர்கள் சண்டை போடுவதை பார்த்து என்னிடம் வந்து கிட்கிறாயா? இந்த குரங்கின் நிலை-விலங்கின் நிலை உனக்குப் பெரிதாகத் தெரிகிறதே.. இதைப் போல் மனிதர்களும் உண்டு என்பது உனக்குத் தெரியாதா?
சொன்னவன் ஒரு படி மேலே போய்ப் பேசுகிறான்: நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்? எல்லாத் தம்பியும் பரதனைப் போல் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா? அப்படி கிடையாது என்கிறான்.
உண்மையில் லக்ஷ்மணனிடம் பேசும்போது என்ன சொல்ல வேண்டும் பரமாத்மா?
எல்லோரும் உன்னைப் போல் என்று நினைத்தாயா? என்றல்லவா கேட்க வேண்டும்.
உன்னைப் போல் ஒரு தம்பி உண்டோ? என்று லக்ஷ்மணனை பரமாத்மா ஏன் ஸ்தோத்திரம் பண்ணவில்லை? எங்கேயோ இருக்கிற பரதனைப் பற்றி ஏன் லக்ஷ்மணனிடத்திலே சொல்கிறான்?
லக்ஷ்மணனும், பரதனுடைய பெருமையை ராமன் பேசும்போது ஆனந்தமாய்க் கேட்கிறான். கொஞ்சம் கூட பொறாமையின்றிக் கேட்கிறான்.
கூடவே இருந்து இவ்வளவு கைங்கர்யம் பண்ணியிருக்கிறோம். நம்மைச் சொல்லாமல், எங்கோ இருக்கிற பரதனைச் சொல்கிறானே..! என்றொரு எண்ணம் லக்ஷ்மணனுக்கு வரவில்லை.
அந்த பரதனுடைய நிலை என்ன? அந்தக் குழந்தை எத்தனை சிரமப்படுகிறான்? பழிச் சொல்லுக்கு ஆளான பரதன், அர்த்த ராத்திரியில் சரயுவில் போய் ஸ்நானம் பண்ணிவிட்டு வருவானாம்!
ஏனென்றால், பகலில் மற்றவர்கள் ஸ்நானம் செய்யும் நேரத்தில் போனால், அண்ணாவைக் காட்டுக்கு அனுப்பினவனுக்கு இந்த மகாபாவிக்கு - ஸ்நானம் ஒரு கேடா? என்று யாராவது பேசி விடுவார்களோ என்கிற பயமாம்!
அப்படிப்பட்ட பரதனை நினைத்து நினைத்து பரமாத்மா பஞ்சவடியிலே உருகினான். அவனையே உதாரணமாகச் சொன்னான்.
அந்தக் காலத்திலே ஒரு வழக்கம். அண்ணன் தம்பிகள் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டு மத்தியஸ்தத்துக்கு வந்தால் மத்யஸ்தம் செய்பவர்கள் என்ன சண்டை என்று கேட்க மாட்டார்களாம். ராமயணத்திலிருந்து ஒரு சுலோகத்தைச் சொல்வார்களாம். சொன்னவுடனேயே, சண்டை போட்ட இரண்டு சகோதர்களும் கட்டிக்கொண்டு ஒற்றுமையாய்ப் போய்விடுவார்களாம்!
ராமாயணம் அந்த அளவுக்கு நம்மை காக்கிறது. இப்படி இப்படி இரு.. என்று மட்டுமல்லாமல் இப்படியெல்லாம் இராதே என்றும் கற்றுத் தருகிறது.
(தொடரும்)

No comments:
Post a Comment