குறையொன்றுமில்லை (முதல் பாகம்)
அத்தியாயம் -40
அத்தியாயம் -40
"சொர்க்கம் நரகம் எல்லாம் நன்றாக உண்டு" என்று ஆரம்பித்து அவன் பதில் சொன்னான். ஆனால் அதெல்லாம் வேறு உலகம் கிடையாது. எல்லாம் இங்கே தான். நல்ல உணவு வேளா வேளைக்குக் கிடைக்கிறது. நன்றாக உடுத்தி, ஆனந்தமாக இருக்கிறார்கள் - அதுதான் சொர்க்கம். உணவுக்குத் திண்டாடிக் கொண்டு ஏழ்மையை அனுபவித்துத் திண்டாடும் ஸ்திதியில் இருந்தால், அதுவே நரகம். நரகமோ, சொர்க்கமோ - இங்கேதானேயொழிய, தனியாக சொர்க்கலோகம் என்றோ நரக லோகம் என்றோ கிடையாது" என்றான்.
சரி, உன் மதத்தில் மோக்ஷம் உண்டா?. இது அடுத்த கேள்வி.
ஆஹா உண்டு!
எது மோக்ஷம்?
செத்துப் போவதுதான் மோக்ஷம் என்று ஒரு போடு போட்டான்! ஆத்மாவையே அவன் ஒப்புக் கொள்ளவில்லை!
இது வேதத்துக்கு புறம்பான, அதர்மமான விஷயம் அல்லவா?
இந்த உலகமே தர்மத்துக்குக் கட்டுப்பட்டிருக்கிறது. வேதமனைத்தும் தர்மசாரம்! எனவே இப்படி வேதத்துக்குப் புறம்பாக எண்ணுவதே தப்பு என்பதைத்தான் ராமாயணம் காட்டுகிறது.
சரீரத்திலிருந்து வேறுப்பட்டுத் தனியானது ஆத்ம வஸ்து என்று வேத வேதாந்தங்கள் எடுத்துப் பேசுகின்றன.
தத் த்வம் அஸி - ஜீவனாக இருக்கும்படியான நீ, பரப்ரும்மமாய் இருக்கிறாய் - இது ஆதி சங்கர பகவத் பாதாள் அளித்த விளக்கம்.
இஞ்சிமேட்டு ஸ்ரீமத் அழகிய சிங்கர். த்வைதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம் என்று மூன்று பிரிவுகளையும் சிலாகித்து ஆச்சர்யமாய்ச் சொல்லியிருக்கிறார்.
இரண்டாயிருக்கும்படியான தன்மையைச் சொல்லுவது த்வைதம். ஜீவன் வேறு; பரமாத்மா வேறு என்கிறது.
இரண்டு என்கிற நிலை இல்லாமல் ஒன்றாகவே இருப்பதென்பது அத்வைதம். பரப்ரும்மமே நான் என்று உணரும் நிலை.
க்ஷீரத்திலிருந்து (பாலிலிருந்து) வெண்ணெய் வருகிறது. அதை உருட்டி, திரும்பவும் பாலிலேயே போடுகிறோம். ஆனால் அது பாலில் கலக்குமா? கலக்கவே கலக்காது! இது வேறு அது வேறு என்று ஸ்பஷ்டமாகத் தெரியவில்லையா? அதோடு இது கலக்காது.
ஆத்ம ஸ்வரூப ஞானம் ஏற்படும்போதும் இதே போல்தான் ஆகிறது. பாலுக்குள் வெண்ணை மாதிரி உடலுக்குள் சிக்கியிருந்த ஆத்மா விடுதலையாகி தனி உருக்கொள்கிறது. உடலே அதை தாங்கியிருந்தாலும் உடல் பற்றிய சிந்தனை போய்விடுகிறது. ஆத்மாவை தியானம் செய்யும்போது, அந்த ஆத்மாதான் பரமாத்மா என்கிற நிலை ஏற்படுகிறது. சுவயம்பிரகாசமாய் பிரகாசிக்கக்கூடிய நிலை அது.
எதிரே பாம்பு நெளிவது போல வளைவு வளைவாகத் தெரிகிறது. ஐயோ! என்று அலறினான் ஒருவன். ஆனால் அது ஆடாது, அசங்காது இருப்பதைக் கண்டு பாம்பு இல்லை என்று முடிவு செய்தான். பின்னே என்னவாயிருக்கும்?
யாரோ குடத்தில் ஜலம் எடுத்துப் போக, அந்தக் குடத்தில் ஓட்டை இருந்திருக்கிறது. ஓட்டை வழியே சிந்திய நீர் குடமேந்தியவரின் நடைக்கு ஏற்ப வளைவு வளைவாக சிந்தியிருக்கிறது போலும் என்று எண்ணம் வருகிறது.
ஆனால், சூர்யா ரச்மி பட்டு இந்த ஜலம் உலர்ந்தது போகவில்லை.. சரிதான்! பூமி அந்த இடத்தில் பிளவுபட்டிருக்கிறது போலும்.. அதனால் தான் இப்படித் தெரிகிறது. என்று மீண்டும் வேறு மாதிரி எண்ணம் வருகிறது.
இப்படி நினைத்துக் கொண்டே இருக்கும்போது அந்தப் பக்கமாய் வந்த ஒருவர் அந்தப் பாம்பு வடிவத்தை மிதித்தபடி வந்தார்.
அவரிடம் கேட்கப் போக, உண்மை வெளிப்பட்டது - பாம்பும் அல்ல, நீர்கோடும் அல்ல; பூமியில் பிளவும் அல்ல. வைக்கோலால் திரிக்கப்பட்ட ஒரு கயிறு அது!
வைக்கோல் திரி என்று தெரிந்ததும் நாம் முதலில் எண்ணியதெல்லாம் போய் விடுகிறதல்லவா? அந்த மாதிரிதான் உண்மைப் பொருளைப் பார்த்த பிறகு மற்றதெல்லாம் மறைந்து போகும் - இது அத்வைத நோக்கு.
விஷிஷ்டாத்வைதம்.. புறப்பொருள் எல்லாமே அவன் சரீரமாஇத்தான் இருக்கிறது என்பது
விஷிஷ்டாத்வைதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
ஆக, எந்த தத்துவார்த்த நிலையை எடுத்துக் கொண்டாலும் ஆத்மா என்ற ஒன்று இருப்பதை அது மறுக்கவில்லை; ஏற்கவே செய்கிறது.
ஒன்று பேதமாகச் சொல்கிறது. இன்னொன்று அபேதமாகச் சொல்கிறது. மூண்றாவதோ எல்லாவற்றுக்குள்ளும் இருக்கிற அந்தராத்மாவைச் சொல்கிறது.
பேத, அபேத ச்ருதிகள் தனித்தனியாய் இருப்பது நம் மனத்தைக் குழப்புகிறது.ஆனால் ஆசார்யார்களுக்கு உண்மை புலப்பட்டது. அதனால் மூன்று ரீதியான தத்துவங்கள் தோன்றி நின்றன. மூன்றுமே சரீரத்திலிருந்து வேறுபட்டது ஆத்ம வஸ்து என்பதை ஏற்கின்றன.
அகம், என்றால் ஆத்மா. நான் என்றால் எனது ஆத்மா; சரீரம் அல்ல.. இந்த எண்ணம் நமக்கு வரவேண்டும். தெளிவாகத் தெரிய வேண்டும்.
பேச்சு வழக்கில் நாம் என்ன சொல்கிறோம்?
எனக்கு அது ரொம்பப் பிடிக்கும். சரீரமே ஆத்மாவாய் இருந்தால் நான் அது ரொம்பப் பிடிக்கும். நான் தலைவலிக்கிறது. நான் கை குடைகிறது. நான் மூக்கு ரொம்ப வலிக்கிறது - என்றெல்லாம்தான் சொல்ல வேண்டும்.
அப்படிச் சொல்வதில்லையே நாம்! எனக்குத் தலை வலிக்கிறது. எனக்குக் கை குடைகிறது என்று சரீரத்துக்குள் இருக்கும் நிலையைச் சுட்டியே சொல்கிறோம். இப்படி சரீரத்தில் அபிமானம் வைத்து நாம் பேசும்போதே என்ன தெரிகிறது? சரீரத்திலிருந்து வேறுபட்டதான ஆத்மா ஒன்று இருக்கிறது என்று தெரிகிறதல்லவா!
நாம் என்பது சரீரமல்ல; ஆத்மா. நாராயணனையே அடைய வேண்டும். அவன் திருவடியையே அடைய வேண்டும்.
அவன் கைங்கர்யத்துக்காக - நித்ய கைங்கர்யத்துக்காக அவன் திருவடியையே சேர வேண்டும் என்பதை உத்தேசித்துத்தான் - இத்தனையும் சொல்லப்படுகிறது.
அப்படியிருக்க, அந்த தத்துவம் வேதாந்தங்களை விட்டு விட்டு, நன்றாகச் சாப்பிடு, நெய்யைக் குத்திக்கொள், கடனை வாங்கு என்றெல்லாம் சொன்னால் எவ்வளவு தப்பான வார்த்தை!
இந்த மாதிரி அதர்மமான விஷயத்துக்கு ராமாயணத்திலே இடமில்லை.
தர்மத்தைப் பேசினான் பரமாத்மா. பரதனுடைய கடமையை உணர்த்தினான்.
பாரதந்த்ரியம் - நீ அப்படிப் போய் இரு என்று சொன்னால் எதிர் கேள்வி கேட்காமல் செய்ய வேண்டும்.
பகவான் சொன்னான். அவன் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு பரதனும் நடந்தான். அதுதான் பாரதந்த்ரியம். சொன்னபடி நடக்கும் தர்மம்.
பாரதந்த்ரிய காஷ்டா என்று ஒரு தர்மம். அந்த பகவத் பக்தனான பரதனுடைய திருவடியிலே அசஞ்சலமான பக்தி கொண்டு நின்றானே சத்ருக்னன்.. அந்த நிலை பாரதந்த்ரிய காஷ்டா.
ராமாயணத்திலே எங்கேயாவது ஒரு சுலோகமாவது சத்ருக்னனனுக்கு உண்டா என்று கேட்டால், எங்கேயும் கிடையாது. பரதனுடனேயே போனான். பரதனுடனேயே வந்தான். அங்கங்கே அரை சுலோகம் அல்லது முக்கால் சுலோகம்தான் சத்ருக்னனுக்கு!
இதில் இருந்து ஒரு தர்ம சூட்சுமத்தை நாம் கிரஹித்துக் கொள்ள வேண்டும். கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம், சரணாகதி - இந்த நான்கையும் ரொம்ப அழகாக விவரிக்கிறான்.
இதிலே பாருங்கள். என்ன விவரித்தானோ அதை ராமாயணத்திலேயும் காட்டியவன் அவன்.
ராமாவதாரத்திலே லக்ஷ்மணன் மூலமாக கர்ம யோகத்தைக் காட்டினான். இதைத்தான் சுவாமி தேசிகன் பக்திக்கே பரம உதாரணமாக பாதுகா சஹாஸ்ரத்தில் சொல்கிறார். பக்திக்கு முதல் உதாரணம் பரதன் என்கிறார்.
ஞான யோகத்தைக் காட்டியவன் சத்ருகன். சரணாகதிக்கு விளக்கமானவன் விபீஷணன்.
ஞான யோகம் பண்ணுகிறவர்கள் உலகிலே அதிகப் பிரசித்தமாக ஆகக்கூடாது. அப்படி ஒருத்தர் இருக்கிறார் என்பதே வெளியே தெரியக் கூடாது. எல்லாவற்றிலும் பிரசித்தமாக இருக்கக்கூடியவர்களை ஞானயோகி என்று சொல்ல முடியாது. ஞான யோகம் பண்ணக் கூடியவனானதாலேதான் சத்ருக்னன் பிரசித்தமாகவில்லை.
ஞான யோகிகள் முக்கியமாக லவணஜயம் பெற வேண்டும். அதாவது உப்பை ஜெயிக்க வேண்டும். உப்பிலாமல் சாப்பிட வேண்டும் அவர்கள். அதனால் தான் லவணாசுரன் என்கிற அசுரனை ஜெயிக்க பரதன் கிளம்பிய போது. அவனை நிறுத்திவிட்டு சத்ருக்னனை அனுப்பினான் பரமாத்மா. சத்ருக்னனும் போய் லவணஜயம் கொண்டான். இப்படி தர்ம சூஷ்மமாக ராமாயணத்தில் எவ்வளவோ அடங்கி இருக்கிறது.
பாரதந்த்ரிய காஷ்டா என்ற தர்மம் - சத்ருக்னன் அனுஷ்டித்த தர்மம். ரொம்பவும் கஷ்டமானது. பரதனுடைய நிழல் போல் இருந்து கைங்கர்யம் செய்தான் சத்ருக்னன். பரதன் கேகய நாட்டுக்குப் போக நாள் பார்த்துச் சொன்னார்களாம் - அவனுடன் சத்ருக்னனும் போனான். அவனும் சக்ரவர்த்தி திருமகன்தானே. ஆனால் அவனுக்கென நாள் எதுவும் பார்க்கப் படவில்லை!
சத்ருக்னன்..! சத்ரு யாரென்றால், நம் இந்த்ரியங்கள் தான் சத்ரு. அந்த சத்ருவை அடக்கியவன் அவன். பரதன் பின் போவதையே பரம புருஷார்த்தமாக நினைத்த மகான் அவன்.
ஆகையினால் சத்ருக்னாழ்வார் என்றே அவனுக்கு பெயர்.
(தொடரும்)

No comments:
Post a Comment