குறையொன்றுமில்லை (முதல் பாகம்)
அத்தியாயம் 23
விச்வ சப்தத்தினால் அறியப்படக்கூடியவன் வாமனன் என்கிறார்கள் வித்வான்கள்.
வித்வான் என்பவர் யார்...? எந்த மந்திரத்தினால் ஒரு தேவதை பேசப்படுகிறதோ அந்த தேவதையை எதிரில் கொண்டு வந்து நிறுத்தக்கூடியவன் வித்வான். மந்திரங்களை வெறுமனே ஒப்பிப்பவன் வித்வான் அல்ல... பரப்பிரும்மத்தைக் கொண்டு வருவாயா...? காட்டுவாயா...? அவ்வாறு கொண்டு வந்து காட்டக்கூடியவன் வித்வான்.
நாம் அப்படியில்லை. பெரியவர்கள் சொல்லித் தந்த மந்திரங்களைத் திருப்பிச் சொல்கிறோம், அவ்வளவுதான். அந்தக் காலத்திலேயே அவர்கள் அனுஷ்டித்ததைப் போல் கடும் விரதங்கள் நோன்புகளை நாம் அனுஷ்டிப்பதில்லை. எல்லா பதார்த்தங்களும் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று அன்றைக்கு அந்த வித்வான்கள் உபாசித்து, தேவதைகளைக் கொண்டு வந்து நிறுத்தி வரம் கேட்டார்கள் அப்படியே கிடைத்து, சுபிட்சம் நிலவியது.
அப்படிப்பட்ட வித்வானின் உபாசனையினாலே பகவான் சர்வவியாபியாய், விச்வவியாபியாய் திரிவிக்கிரமனாய் அவதாரமெடுத்துப் பரவி நின்றான். அந்த விச்வத்தை ஆவிர்பவித்து எவர் யக்ஞம் செய்கிறாரோ அவருக்குப் பூரண பலம் கிடைக்கிறது.

யக்ஞம் செய்ய பலவித ரித்விஜ்கள் இருப்பார்கள். அவர்களுக்கு தட்சிணை கொடுக்கப்பட வேண்டும். அதைக் கொடுத்தால்தான் யக்ஞம் பூர்த்தியாகிறது. யக்ஞம் செய்பவர்கள் எல்லாம் விசாரமில்லாமல் இருக்க வேண்டுமல்லவா...? அது என்னாச்சு? இது என்னாச்சு? என்று எண்ணம் வந்தால் யக்ஞம் கெட்டுப் போய்விடும்.
ஆகையினாலே, யக்ஞத்துக்கு ரித்விஜ்களை அழைக்கும்போது, ஒரு பகுதி தட்சிணையை இப்போதே கொடுத்து விடுகிறேன் என்று சொல்லியே அழைப்பார்களாம். அதை வாங்கி அவர்களும் கிரஹத்திலே வைத்து விட்டு வந்து யக்ஞத்தை நடத்திவிட்டு பிறகு பூரண தட்சிணை வாங்கிக் கொள்வார்களாம்.
லௌகிகத்திலே இதைத்தான் அட்வான்ஸ் என்று சொல்கிறோம்.!
இப்படியிப்படி யக்ஞ கர்மா நடத்த வேண்டும் என்று ஆபஸ்தம்பர் சொல்கிறார். எதை தட்சிணையாகக் கொடுக்க வேண்டும் என்றால் குள்ளமான பசுவை கன்றோடு கொடுக்க வேண்டுமாம்!
ஏன்? உயரமான பசுவைக் கொடுக்கக் கூடாதா என்றால், பகவான் வாமன ரூபியான எம்பெருமானை நாம் நினைப்பதற்காகத்தான் குள்ளமான பசுவாகப் பார்த்து தட்சிணையாகக் கொடு என்கிறது வேதம்!
ஆகையினாலே குள்ளமான பசுவைக் கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுக்கும் ஒரு பசுவின் உடலில் எத்தனை ரோமங்கள் இருக்கின்றனவோ அத்தனை வருஷங்கள், இவனுக்கு (கொடுப்பவனுக்கு) சுவர்க்க லோகத்திலே வாசம் கிடைக்குமாம்.

இவ்வாறு குள்ளப் பசுவால் நினைவூட்டப்படுகிற வாமன ரூபியாணவனே உலகத்தை அளந்தவனும் ஆகிறான். உலகை அளந்தவனே என்று திரும்பத் திரும்ப அவனைக் கொண்டாடுகிறது வேதம்.
நர்மதை நதி தீரத்துக்கு விச்வம் போனது என்று சொன்னேன் அல்லவா...? அது வாமன ரூபனாய்த்தான் அங்கே முதலில் எழுந்தருளியது.
வாமன அவதாரம் விச்வ சப்தத்தினால் அறியப்படுகிறது என்று அதன் உயர்வுகளை எடுத்துச் சொல்லும்போது நரசிம்ஹ அவதாரத்தை உயர்ந்ததுன்னு சொன்னீர்களே என்று கேள்வி வரும். இனிமேல் சொல்ல போகிற ராமர், கிருஷ்ணர் அவதாரங்களையும் அப்படித்தான் உயர்ந்தவையாகச் சொல்லப் போகிறேன். அதனாலே, வாமன அவதாரமே மகிமை குறைந்தது போய் விடாது. எல்லா அவதாரங்களுமே உயர்ந்தவைதாம்.
வாமன அவதாரத்துக்கு வருவோம். அந்த அவதார மகிமையைத் தெரிந்து கொள்வதற்கு முன் ஆசார்ய (குரு) மகிமை பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
ஆசார்யரைக் காட்டிலும் உயர்ந்த தெய்வம் இல்லை என்கிறார் சுவாமி தேசிகன். பகவானை எப்படியெல்லாம் உபாசிக்கிறோமோ அப்படியெல்லாம் ஆசார்யனையும் உபாசிக்க வேண்டும் என்கிறது உபநிஷத்.
ஆசார்யன் என்றால் யார்...?
நிறைய சாஸ்திரத்தைப் படித்தவர் ஆசார்யன். எல்ல வித்யா ஸ்தானங்களும் அவர் நுனி நாக்கிலேயே தாண்டவமாடும். எதைக் கேட்டாலும் சொல்லக்கூடியவர். நல்ல வாக்கு உடையவர்.
வித்யை என்பது நிரந்தரமானது. பொருள் (செல்வம்) அப்படி இல்லை. வரும் - போகும். நாளை வரப்போகும் செல்வத்தை நம்பி இன்று ஒரு காரியம் பண்ண முடிகிறதா?
இப்படிப்பட்ட நிரந்தரமான வித்யைகள் நிரம்பப் பெற்றதனால் மட்டுமே ஒருவர் ஆசார்ய ஸ்தானம் வகித்து விட முடியாது. தாம் எடுத்துச் சொல்லும் விஷயங்களை அனுஷ்டிப்பவராகவும் அவர் இருத்தல் வேண்டும். அப்படி அனுஷ்டிக்காதவர் ஆசார்யராக இருக்கவே முடியாது.
"கிருஷ்ணம் வந்தே ஜகத் குரும்" என்று பிரார்த்தனை பண்ணுகிறோம். ஜகத்துக்கெல்லாம் குரு அவன். எல்லா சாஸ்திரங்களிலும் குருவாக, பரமாசார்யனாகச் சொல்லப்படுகிறவன் நாராயணன். அந்த நாராயணன் கூட கீதாசாரியனாக கிருஷ்ணாவதாரத்திலே உபதேசம் செய்ததை அப்படியே ராமவதாரத்திலே நடத்திக் காட்டினான்.
எனவே, கற்றதை அனுஷ்டித்து நடத்திக் காட்டி பிறருக்கு உபதேசிப்பவன்தான் ஆசார்யன். அவர் எதை மனத்தால் நினைக்கிறாரோ அதையே நாவால் சொல்ல வேண்டும். எதை நாவால் சொல்கிறாரோ அதையே நடத்திக் காட்ட வேண்டும்.
உடல் ஆரோக்கியத்துக்காக எத்தனையோ மருந்துகளைச் சாப்பிடுகிறோம். ஆனால், அதெல்லாம் மருந்தில்லை என்கிறது சாஸ்திரம். பின்னே எது நல்ல மருந்து...?
நினைவு, சொல், செயல் என்று மூன்றும் ஒன்றாக வாழ்க்கை நடத்துவதே உயர்ந்த மருந்து. அப்படியில்லாமல் நினைப்பது ஒன்று, சொல் வேறு, நடப்பது வேறு என்று இருந்தால்... அப்படிப்பபட்டவர்கள் துராத்மாக்கள்! மகாத்மாக்களுக்கு இந்த மூன்றும் - சிந்தை, சொல், செயல் - ஒன்றுபட்டிருக்கும்.
அப்படிப்பட்ட மகாத்மாக்களை ஆசார்யராக அடைவதால் நமக்கு என்ன பலன்...? அதற்கு ஒரு கதை சொல்கிறேன்.
திருப்பதி மலையை எல்லோரும் பார்த்திருக்கிறோம். இங்கே ஒரு சிகரம்; அங்கே ஒரு சிகரம். ஒரு சின்ன எறும்பு... ஒரு சிகரத்தில் ஊர்ந்து போய்க் கொண்டிருக்கிறது. அதற்கு, அதோ.. அந்த மலைச் சிகரத்துக்குப் போக வேண்டும் என்று ஆசை!
எவ்வளவு அல்பமான ஜீவன் அந்த எறும்பு! ஒரு மலைச் சிகரத்தில் இருந்து மற்றொன்றுக்கு ஏறிப் போவதற்குரிய அங்கங்களோ, அவயங்களோ அதற்கு இல்லை. ஆனால் அதுவும் அந்த சிகரத்தை அடைந்தது. எப்படி...?
எப்படியென்றால், ஒரு சிங்கம் அந்த இடத்திலே மலைக்கு மலை தாவி ஓடிக் கொண்டிருந்தது. எறும்பு, தான் நினைத்த மாதிரியே சிங்கமும் இந்த சிகரத்திலிருந்து அந்த சிகரத்துக்குப் போக இருப்பதைப் பார்த்தது. உடனே இதுதான் சமயம் என்று அங்கே இருந்து போய், அந்த சிங்கத்தின் சரீரத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது. சிங்கம் சிகரத்துக்குச் சிகரம் தாண்டியபோது, எறும்பும் தாண்டி விட்டது.
ஆகையினாலே, ஓர் ஆசார்யனின் திருவடியை நாம் கெட்டியாகப் பிடித்துக் கொண்டோமானால், சம்சார சாகரத்தை அவர் தாண்டும்போது நாமும் கூடவே தாண்டி விடுகிறோம்! அந்த மாதிரி ஒரு உயர்ந்த கதியை நமக்கு அடைவிக்கக் கூடியவர்கள் தான் ஆசார்யர்கள்.
தனத்தை உடையவனை தனவான் என்கிறோம் குணம் உடையவனை குணவான் என்கிறோம். ஆனால், எப்படிப் பட்டவனும் ஆசார்ய சம்பந்தத்தோடு தான் இருக்க வேண்டும். அது மட்டும் இல்லாமல் போனால் வேறேது இருந்தும் பயனில்லை.
ஆசார்யவான் புருஷோ வேத - ஒரு நாளும் தனித்து இராதே. ஆசார்ய சம்பந்தத்தோடுதான் நீ இருக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம்.
ஆகாசத்தில் பிரகாசிக்கிறானே சூரியன்...அவன் கிரணங்கள் பட்டதுமே தாமரை புஷ்பமானது விகசிக்கிறது. எப்படி விகசிக்கிறது என்று யோசிக்க வேண்டும்.
ஒரு பெரிய தாடகத்திலே தீர்த்தம் நிறைய இருந்தால், சூர்ய ரச்மி பட்டவுடனேயே தாமரை விகசிக்கிறது. ஆனால், தாடகத்திலே தீர்த்தமே இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள்; சூர்ய ரச்மி வந்து பட்டால்...? அந்தத் தாமரையானது வாடி வதந்கித்தான் போகுமே ஒழிய விகசித்து மலராது!
அப்போ, தாமரை மலர்வதற்கு முக்கியமான பொருள் தீர்த்தம். தீர்த்தத்திலே இருக்கிற தாமரையை மலரச் செய்பவன் சூர்யன். அதுபோல ஆசார்ய சம்பந்த்தத்தைப் பெற்ற ஜீவனை பரமாத்மா அனுகிரஹித்து விகசிக்கச் செய்வான். தாமர - ஜீவன். தீர்த்தம் - ஆசார்யன். சூர்யன் - பரமாத்மா. தீர்த்த சம்பந்தம் போலே, எப்போதும் ஆசார்ய சம்பந்த்தம் வேண்டும். மோஷம் பெறுவதற்கு இந்த சம்பந்தம் கட்டாயம் வேண்டும்.
யோகத்திலே கெட்டிக்காரரான ஒரு ஆசார்யர் இருந்தார். சமாதி நிலையிலே அவர் அமர்ந்தாரானால் எம்பெருமானை நேருக்கு நேரே பார்க்கக்கூடியவர். ஒரு நாள் அப்படி அவர் யோகத்திலே இருந்தார். பகவானை நேருக்கு நேராகப் பார்த்துக் கொண்டே இருந்தார். ஆனால், வழக்கமாக இவர் பார்வையை நேருக்கு நேராகச் சந்தித்த பகவானின் நோக்கு அன்று மட்டும் வேறு திசையில் திரும்பி இருந்தது. அந்த யோகிக்கு இந்த மாற்றத்தைக் குறித்து வியப்பும் விசாரமும் உண்டாயிற்று.
பகவானின் பார்வை மாறியதற்குக் காரணம் என்ன..?
(தொடரும்)

No comments:
Post a Comment