குறையொன்றுமில்லை
(முதல் பாகம்)
அத்தியாயம் 24
பகவானைத் தம் முன்னே கொண்டு வந்து நிறுத்தக்கூடிய
யோகியைப் பார்க்க
ஆளவந்தார் என்கிற ஆசார்யர் வந்தார். அவர் வந்த நேரத்திலே யோகி ஆழ்ந்த
தியான நிலையில் இருந்தார். "சரி, இவர் யோக நிலை மாறட்டும், பிற்பாடு
பேசலாம்" என்று அவர் பின்னாலே போய் ஒரு பக்கமாய் அமர்ந்து கொண்டார்
ஆளவந்தார்.
அந்த சமயத்திலேதான் பகவானின் பார்வை யோகியின் பேரிலிருந்து ஆளவந்தார் பேரில் திரும்பியது. "பகவான் தம் பக்கமிருந்து பார்வையைத் திருப்பி விட்டாரே!, என்கிற அதிர்ச்சியில் யோகியின் மோனம் கலைந்து போனது. ஒருநாளும் பக்கம் நோக்கி அறியாத பகவான் இன்று பக்கம் நோக்கினது ஏன் என்று மகான் யோசித்து வர, "இங்கே சொட்டை நம்பி வம்சத்திலே வந்தவர்கள் யாராவது இருக்கிறீர்களா"...? என்று பெருத்த குரலில் கேட்டார்!
அவர் அப்படி கேட்டதற்கு அர்த்தம் என்ன?
நாதமுனிகளின் மகன் சொட்டை நம்பி வம்சத்திலே பகவானுக்கு மிகுந்த அபிமானம் உண்டாம். அந்த வம்சத்தை சேர்ந்த யாரேனும் வந்தாலொழிய பகவானின் பார்வை திசை திரும்ப வழியில்லை என்பது யோகியின் கணிப்பு.
அந்த கணிப்பு சரியான கணிப்புத்தான். ஏனென்றால் அவர் பின்னாலே வந்து அமர்ந்த ஆளவந்தார் நாதமுனியின் பேரன் ஆவார்.
பகவானின் பார்வை தம் மேல் திரும்பியதும் அந்த ஆளவந்தார் என்ன சொன்னார் தெரியுமா...?
"நான் ரொம்ப சிறியவன்; எளியவன். ஆனால் என் உருவத்தைப் பாராதே.. பகவானே,
என்னுடைய தாத்தாவுக்காக என்னை கடாஷித்து அனுக்கிரஹம் பண்ண வேண்டும்..."
என்று கேட்டுக் கொண்டாராம்.
இந்த உலகத்திலே பொதுவாக உறவுகளை உதறிவிட வேண்டும். தேக சம்பந்தம் கூடாது என்று நாம் பேசினாலும் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் விதிவிலக்கு இருக்கிறது. உத்தம அதிகாரிகளின், ஆசார்யர்களின் தேக சம்பந்தம் நமக்கு அருள் செய்கிறது என்று ஏற்கிறோம்.
உயர்ந்த ஆசார்யரின் சம்பந்தம் மட்டும் ஏற்பட்டால் எப்பேர்ப்பட்ட உயர்நிலையையும் நாம் அடைந்து விடலாம்.
புண்யாத்மாக்களாயிருந்தாலும் சரி; பாவாத்மாக்களாக இருந்தாலும் சரி, ஆசார்ய சம்பந்தம் பெற்றால்தான் உயர்ந்த கதியை அடையலாம்.
ஒரு காலத்திலே ஷத்ரபந்து என்று ஒருவன் இருந்தான். அவன் திருடுவதையே தொழிலாகக் கொண்டு இருந்தான். போகிற, வருகிறவர்களை அடித்துப் போடுவான். வழிப்பறி செய்து அவர்களுடிய செல்வத்தை எல்லாம் மூட்டை கட்டித் தன் வீட்டுக்கு கொண்டு போவான். இப்படி அவன் திருட்டுத் தொழில் நடத்திக் கொண்டிருந்த காலத்தில் ஒரு நாள், நாரதர் தம் வீணையை மீட்டிக் கொண்டு அந்த வழியாய் வந்தார்.
"நீ இவ்வளவு தூரம் மூட்டை மூட்டையாய்க் கட்டிக் கொண்டு போய் மனைவி மக்களுக்கெல்லாம் கொடுக்கிறாயே... கூடவே இன்னொரு மூட்டை வருகிறதே, அது உனக்கு தெரியுமா...? என்று கேட்டார்.
அவன் மேலும் கீழும் பார்த்தான். "அதென்ன மூட்டை சுவாமி? நான் எடுத்துக் கொண்டு போகிற மூட்டையை தவிர வேறு மூட்டை நான் பார்த்ததேயில்லையே, ஒரு நாளும் பார்த்ததேயில்லையே" என்றான்.
நாரதர் சொன்னார்: "அது பார்க்கக்கூடிய மூட்டை இல்லை; பாவம் என்கிற மூட்டை அது! இந்தப் பண மூட்டையை எல்லாம் உன் வீட்டிலே கொண்டு போய்க் கொடுக்கிறாய்; மனைவி, மக்களும் சுற்றமும் அதைப் பங்குபோட்டுக் கொள்கிறார்கள். அவர்களிடம் போய்க் கேள். இந்த செல்வ மூட்டை போலவே பாவ மூட்டை ஒன்று இருக்கிறது. அதையும் அவர்கள் பங்குபோட்டுக் கொள்ளத் தயாரா என்று கேளேன்" என்றார் "சரி சுவாமி; கேட்கிறேன்" என்று புறப்பட்டுப் போனான் அவன்.
இந்தக் கதையைப் படிக்கும்போதே எல்லோருக்கும் ஒரு சந்தேகம் எழுவது இயல்பு. இவ்வளவு தூரம் வழிப்பறி செய்கிற துராத்மா இப்படிப் பொறுமையாக இருந்து முனிவரின் உபதேசத்தைக் கேட்டு நடப்பானா; முதலில் அவர் சொல்வதை அவன் பொறுமையாகக் கேட்க வேண்டும்; அப்புறம் செயல்படுத்த வேண்டும்; அதன் பிறகு பாடம் கற்றுத் திருந்த வேண்டும். இது சாத்தியமா...?
சாதுக்கள், மாகான்களின் தரிசனம், தொடர்பு எப்படிப்பட்டவரையும் மாற்ற முடியும் என்பதையே இக்கதை காட்டுகிறது.
ஒரே கணத்தில் ஷத்ரபந்து சிந்தனை வயப்பட்டான். மனம் தணிந்து, பத்னியிடம் போய்க் கேட்டான்.
"பாவ மூட்டையில் பங்கு எடுத்துக் கொள்வாயா"?
மனைவி சொன்னாள்: நீங்கள் பார்த்தா - அதாவது பாரத்தை தாங்குபவர். நியாயமாய்ச் சம்பாதித்துக் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டியது உங்கள் பொறுப்பு, நீங்கள் அக்கிரமமாக சம்பாதித்தால் அந்த பொருளிலே தான் எங்களுக்குப் பங்கே ஒழிய பாவத்திலே பங்கு கிடையாது: என்று சொல்லிவிட்டாள் அவன் குழந்தைகளும் அதையேதான் சொன்னார்கள்!
திரும்பி நாரதரிடம் வந்தான் திருடன். நாராயண மந்திரத்தை அவரிடத்திலே உபதேசமாகக் கேட்டான். அவனுக்கு மோக்ஷமே கிடைத்து விட்டது!
நாரதர் சம்பந்தம் மட்டும் அவனுக்கு வாய்த்திருக்காவிட்டால், இந்த பாக்கியம் கிடைத்திருக்குமா?
புண்டரீகர் என்று ஒருத்தர். "அனந்த பத்மநாபனை எங்கே பார்க்கலாம்" என்று கேட்டாராம் அவர். சமுத்திரத்திலே தான் அவர் இருப்பார் என்று பதில் சொல்லி இருக்கிறார்கள். உடனே புண்டரீகர் சமுத்திரத்துக்குள்ளேயே நடந்து போக ஆரம்பித்தார்!. கழுத்து வரை ஜலம் வந்து விட்டது. மேலே போக முடியாத நிலை.
பார்த்தார் புண்டரீகர்... சமுத்திர ஜாலம் முழுவதையும் இறைத்து எடுத்துவிடலாம் என்று இறைக்க ஆரம்பித்தார்! அப்போதும் நாரதர்தான் அங்கு வந்து கை கொடுத்தார்.
"இதை இந்தக் காரியத்தை உடனே நிறுத்து, இப்படி ஜலத்தை இறைத்து அவனைப் பார்க்க முடியாது, என்னுடன் வா" என்று திருக்கடன்மலை (மகாபலிபுரம்) என்கிற ஷேத்திரத்துக்கு புண்டரீகரை அழைத்துப் போனார் நாரதர்.
அங்கே பார்த்த பெருமாளின் கோலத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டுப் போய்விட்டார் புண்டரீகர். வரக்கூடியவர்களை, "வாருங்கள், வாருங்கள்" என்று வரவேற்கும் தோற்றம், அங்கே எம்பெருமானுக்கு. அதைக் கண்டு மகிழ்ந்து ஆயிரம் தாமரைப் புஷ்பங்களாலே அர்ச்சனை பண்ணினார் புண்டரீகர்.
கோணலான மார்க்கத்திலே போனவரை மாற்றி, குறுக்கு வழியிலே பகவானிடத்திலே கொண்டு சேர்த்து விட்டார் நாரதர். ஆகையால், ஆசார்ய சம்பந்தம் மட்டும் இருந்து விட்டால் எப்பேர்ப்பட்டவரும் உயர்கதி அடையலாம் என்பது தெளிவாகத் தெரிகிறது.
இப்படி வழிகாட்டி உயர்கதி அடையச் செய்யவல்ல ஆசார்யர்களுள் ஒருவராக இருந்தார் சுக்ராச்சார்யார்.
மாண்டு போனவர்களைக் கூட எழுப்பி உட்கார வைக்கும் சக்தி அவருக்கு இருந்தது!
"சுகர தசை"என்று சொல்கிறோம். அந்த கால கட்டம் ஒருவரது வாழ்க்கையிலே அமைந்தால் எல்லா உயர்வுகளும் அவனுக்கு அந்த நேரத்திலே ஏற்படும். அனுகூலமான காலம் அது!
அது போலதான் சுக்ராச்சார்யாரை குருவாகக் கொண்டவ்வனுக்கு அனுகூலங்கள் அவருக்கு எல்லா மந்திரங்களும் தெரிந்து இருந்தன. அவற்றிலே ஒரு மந்திரம் ம்ருத சஞ்சீவனி மந்திரம் என்று சொல்லப்படுகிறது. இது சுக்ராச்சாரியாருக்கு ரொம்ப நன்றாகத் தெரியுமாம். தேவ குருவான பிரஹஸ்பதிக்குக் கூட தெரியாதாம் இந்த மந்திரம். மாண்டு போனவர்களையும் பிழைக்க வைக்கவல்ல மந்திரம் அது.
இப்படிச் சொன்னால், ஒரு சந்தேகம் வரும். மாண்டு போனவர்களை எழுப்புவது ஒரு மந்திரத்தால் சாத்தியமானால் அந்த மந்திரத்தை அறிந்தவர்கள் அதைச் சொல்லி பலபேரின் துயரைப் போக்கலாமே. அடியேன் போன்றோர் உபன்யாசம் பண்ணுவதற்குப் பதில் இந்த உபகாரத்தைப் பண்ணலாமே என்று கேட்கத் தோன்றும்.
ஒரு விஷயத்தை நன்றாக நாம் கவனிக்க வேண்டும். மந்திரம் பலருக்கு தெரிந்து இருந்தாலும் அது பலித்தது சுக்ராசார்யாருக்கு மட்டும் தான். வேறு ஒருத்தருக்கும் அது பலிக்கவில்லை!
காரணம்...?
இந்த மந்திரத்தை மிகவும் சிரமப்பட்டு சித்தி செய்துகொண்டார் அவர்.
இப்போது அதே மந்திரத்தை நாம் சொன்னால் கணம் போதவில்லை! சக்தி போதவில்லை என்பது கண்கூடாக தெரிகிறது.
"இந்திரா ஆச்ராவாயா" என்று யாகம் பண்ணும் போது இந்திரனை அழைப்பதுண்டு. அப்படி மும்முறை அழைத்தும் அவன் நேரில் வரவில்லையானால் யக்ஜத்தையே முடித்துக் கொள்ள வேண்டுமாம்! ஏனென்றால், முறையாக முழு மனசுடன் கூப்பிட்டால் அவன் வந்தே தீருவான். அவன் வராவிட்டால், போதுமான பலத்துடன் நாம் அழைக்கவில்லை என்றே அர்த்தமாகிறது!

பிரும்ம வித்துக்களும் பெரிய மகான்களும் மந்திரத்திலே பூர்ண சித்தி
அடைந்தவர்களும் கூப்பிட்டால் தேவதைகள் எதிரில் காட்சி அளிப்பார்கள்.
மந்திரங்களின் பரிபூரண பலனை அவர்கள் அடைவிப்பார்கள். அப்படிப்பட்ட மகான்கள்
வரிசையில் வந்தவர் சுக்ராச்சார்யார். என்ன ஆச்சர்யம்! அந்த யக்ஜத்தின்
ஹோம குண்டத்தில் இருந்து வில், அம்புராத்தூணி என்று விதவிதமான ஆயுதங்களும்
கவசங்களும் வெளிப்பட்டன. "இவற்றை வைத்துக் கொண்டு நீ உயர்நிலை அடைவாய்"
என்று பலி சக்ரவர்த்தியிடம் அவற்றைக் கொடுத்து மந்திரம் ஓதி அனுப்பினார்
சுக்ராச்சார்யார்.
அந்த ஆயுதங்களைக் கொண்டு தேவலோகத்தையே சூன்யமாக்கினான் மகாபலி. அப்படி
சமஸ்த தேவதைகளையும் நடுங்கச் செய்யும் சாமார்த்தியம் ஆசார்ய
அனுக்கிரகத்தினாலே மகாபலி சக்ரவர்த்திக்கு கிடைத்தது.
(தொடரும்)
No comments:
Post a Comment