குறையொன்றுமில்லை
(முதல்
பாகம்)
அத்தியாயம்10
தர்க்க சாஸ்திரம் கற்க ஒருவர் போனார். இல்லை என்கிற சொல்லுக்கு நான்கு விதமான விளக்கம் உண்டு என்றார் ஆசார்யர். மாணவர் ஆச்சர்யப்பட்டார். அது என்ன நான்கு விதமான இல்லை?
ஒரு பானையையே உதாரணமாக எடுத்துக் கொள்வோம். ஒரு பானை உருவாக்கப்படுகிறது அதை நாம் பானை என்று சொல்கிறோம். உருவாக்கப்படுவதற்கு முன் அது இருந்ததோ? இல்லை. இந்த இல்லையை பிராக பாவம் என்று சொல்வோம்.
பானை ரொம்ப அழகாக இருக்கிறது. அங்கேயிருந்து ஒரு குழந்தை வருகிறது, கையில் ஒரு தடியோடு வருகிறது. அதை ஓங்கி, பானையை ஒரு அடி. பானை சுக்கு நூறாகப் போயிடறது இப்போது அந்த பானை இருக்கிறதா? இல்லை. இந்த இல்லை வேறு. முதலில் பிராக பாவமாய் சொன்ன இல்லை வேறு. இந்த இரண்டாவது இல்லையை பிரத்வம்ஸாபாவம் என்று சொல்லலாம்.
அடுத்து அன்யோந்ய பாவம். ஒரு கடிகாரம், எனக்கு சற்று தூரத்தில் வைக்கப்பட்டிருக்கிறது நான் இங்கே இருக்கிறேன். அது இருக்கும் இடத்தில் நான் இல்லை. நான் இருக்கும் இடத்தில் அது இல்லை. இந்த இல்லை அன்யோந்ய பாவத்தில் சொல்லப்படுவது.
நாலாவதான அத்யந்தா பாவத்தை ஒரு கதை சொல்லி விளக்கலாம் பரம ஏழை ஒருத்தர். ஒரு வீட்டு வாசலில் அதிகாலையிலேயே நின்று யாசகம் கேட்டார். எட்டு மணி ஆகியும் அந்த வீட்டின் வாசல் கதவு திறக்கவில்லை அந்த வழியே போன இன்னொருத்தர் பார்த்தார். கதவைத் தட்டி நின்றவரிடம் போனார், "நீர் வேறு எங்கேயாவது போய் யாசகம் கேளும், தாத்ருத்வம் என்கிறது இந்த வீட்டிலே அத்யந்தா பாவம் ஆயிற்றே" என்றார் யாசித்தவருக்குப் புரியவில்லை. "வள்ளன்மை என்பது முன்பும் இல்லை, இப்போதும் இல்லை, இனியும் இராது இந்த கிரஹத்தில்" என்பதே நான் சொன்னதன் அர்த்தம் என்று விளக்கம் கிடைத்தது. ஆக நான்காவது பாவத்தில் இல்லை என்று சொன்னால் எக்காலத்திலும் இல்லை என்று பொருள்.
இந்த நான்கு அபாவங்களிலே அன்யோன்யா அபாவம் பகவானிடத்திலே இருக்கிறதா? அவன் அங்கே இருக்கிறான், இங்கே இல்லை என்று வரையறுக்க முடியுமா? பகவான் சர்வ வியாபி. உள்ளும் புறமும் இடைப்பட்ட இடங்களிலும் வியாபித்திருக்கிறான் இப்படி எங்கும் வியாபித்திருப்பதனாலேதான் விச்வம் என்கிற சப்தத்துக்கு நாராயாணன் என்று பொருள். இந்த வியாபித்தலைத்தான் பிரஹலாதன் நரசிம்ஹ அவதாரத்திலே வெளியிட்டான். பகவானை நாடி வருந்தும்படியான ஒரு பெண்ணின் நிலையிலே, தாயின் பாவத்திலே ஒரு பாசுரம்:
ஆடி ஆடி அகங் கரைந்து இசை
பாடிப் பாடி கண்ணீர் மல்கி - எங்கும்
நாடி நாடி நரசிங்காவென்று
வாடி வாடும் இவ்வானுதலே
இதிலே எங்கும் என்பது உயிர்நாடியான சொல். நரசிம்ஹன் கம்பக் (தூண்) குழந்தை என்பதால் கம்பத்தை மட்டுமே பார்க்காதே, எங்கிருந்தும் அவன் வரலாம், என்று உணர்த்துவது.
தத்வ விவேகோ விஷ்ணு புராணாத் என்று விஷ்ணு புராணத்தை மிகவும் கொண்டாடிப் பேசுகிறார் சங்கர பகவத்பாதாள். அவர் தமது விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யத்திலே, அந்த விஷ்ணு புராணத்திலே நிறைய மேற்கோள் காட்டுகிறார். அதிலே ஒன்று:
உலகம் என்கிற தாமரை மலர் மலர்வதற்காக தேவகி என்கிற கிழக்கு திக்கிலிருந்து, அச்சுதன் என்கிற சூரியன் உதித்தான்.
தேவகியை கிழக்குத் திக்காகச் சொல்லி, அச்சுதனை சூரியனாகச் சொன்னதில் ஒரு தர்ம சூஷ்மம் இருக்கிறது. கிழக்கு திக்குக்கும் சூரியனுக்கும் என்ன சம்பந்தமோ அதே சம்பந்தம்தான் தேவகிக்கும் பரமாத்மாவுக்கும். இப்படிச் சொன்னால் என்ன அர்த்தம்?
கிழக்கு திக்குக்கும் சூரியனுக்கும் சம்பந்தம் உண்டா? மேற்கு திக்குக்கும் சூரியனுக்கும் சம்பந்தம் உண்டா? யோசனை பண்ண வேண்டும்.
கிழக்கு திக்கிலே உதித்து சூரியன் மேற்கிலே மறைவது நமக்குப் பிரத்யட்சமாகத் தெரிகிறது. ஆனால் உண்மையிலே ஆராய்ந்து பார்த்தால் சூரியன் தன்னுடைய மண்டலத்திலே சஞ்சாரம் பண்ணுகிறான் அவ்வளவுதான். உலகத்திலே இருப்பவருக்குத்தான் அவன் உதிப்பதாகவும் மறைவதாகவும் தெரிகிறது. சாஸ்திரத்தைப் பார்க்காமலே இது கண்கூடாகவே தெரிகிறது. பாரத தேசத்திலே நமக்கு இரவு நேரமாக இருக்கிறது. அதே நேரத்திலே அமெரிக்காவிலே சூரியனைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சூரியனுக்கும் கிழக்கு திக்குக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை. அதே போல், தேவகியின் கர்ப்பத்துக்கும் பரமாத்மாவுக்கும் யாதொரு சம்பந்த்தமும் இல்லை. எங்கும் பரவியிருக்கும்படியான பரமாத்மாவை தேவகியின் கர்ப்பத்திலே அடக்கிப் பேசலாமா? ஒன்றை வைத்து மற்றொன்றை அடையாளம் காட்டுவதென்பது ஏற்றுக் கொள்ளப் பட்ட மரபு. "தடஸ்த லட்சணம்" என்று இதைச் சொல்வார்கள் ஒருத்தர் கேட்கிறார், இந்த ஊரில் நதி எங்கே இருக்கிறது, ஸ்நானம் செய்ய வேண்டும், என்று.
அவருக்கு இன்னொருத்தார் பதில் சொல்கிறார் அதோ.. கூட்டமாக தென்னை மரங்கள் தெரிகிறதே, அங்கே இருக்கிறது நதி. தென்னை மரத்தை வைத்து நதியின் இடத்தை சொன்னது போல், தேவகியின் கர்ப்பமும் "தடம்", அவ்வளவுதான்.
ஒரு மூதாட்டி தவறாமல் சந்திர தரிசனம் செய்யும் பழக்கம் வைத்திருந்தார். ஒரு நாள் சந்திரன் மரக்கிளை பின்னாலே இருந்தது. அவரால் பார்க்க முடியவில்லை. பேரனை அழைத்துக் கேட்டார். "அதோ பார் பாட்டி மரம் தெரிகிறதா? அந்த மரத்தின் நுனிக்கிளை தெரிகிறதா? அந்தக் கிளை நுனியிலே ஒட்டிக் கொண்டிருக்கிறது பார் சந்திரன்" என்றான் பேரன். உண்மையிலே சந்திரன் கிளை நுனியிலேயா ஒட்டிக் கொண்டிருக்கிறது? இல்லவே இல்ல. ஓர் அடையளத்துக்காகச் சொல்லும் இந்த வர்ணனையைத்தான் தடஸ்த லட்சணம் என்பது. எங்கும் பரமாத்வை சங்கோசமான இடத்திலே வைத்து இங்கேயிருந்துதான் வந்தான் என்று சொல்வதும் இதுபோல்தான்.
ருக்மிணி பிராட்டி, கிருஷ்ணனுக்கு ஏழு சுலோகங்களை எழுதி அனுப்பினாள். அதில் ஏழாவது சுலோகமாக இந்த ஜன்மாவிலே நீ எனக்குக் கிடைக்காவிட்டால் அடுத்த ஜன்மாவிலும், அதற்கடுத்த ஜன்மாவிலும், தொடரும் நூறு ஜன்மாக்களிலும் உன்னையே அடையத் தொடர்ந்து முயற்சி செய்வேன் என்று பொருள்பட எழுதினாள்.

நூறு ஜன்மா ஆனாலும் உன்னை விட மாட்டேன் என்றால், நூற்றியோராவது ஜன்மாவில் விட்டுவிடுவேன் என்று பொருள் கொள்வதா?
அடியேன் ஒரு சமயம் உபன்யாசம் பண்ணியபோது முக்கூர் ஸ்ரீமத் அழகிய சிங்கர் இந்தக் கேள்வியைக் கேட்டார் சுவாமி (அழகிய சிங்கர்) சமத்காரமாகப் பேசக் கூடியவர் ஆதலினாலேதான் பரிசோதனை மாதிரி அப்படி ஒரு கேள்வி கேட்டார். உபன்யாசத்தின் கடைசி தினத்தில் விளக்கம் தருவதாகச் சொல்லி அவரிடம் அனுமதி வாங்கிக் கொண்டேன்.
நூறு ஜன்மம் என்று ருக்மிணி கணக்கு சொல்வது எண்ணிக்கையைக் குறிக்க வந்ததில்லை... ஆயிரம், ஆயிரம் என்று வேதம் சொல்வதெல்லாம் வெறும் ஆயிரம் இல்லை அநேகம் என்ற பொருளில் உபயோகிக்கப்படுகிறது ஆயிரம் என்ற பதம். சதமானம் பவதி (நூறு வயது சிறப்பாய் வாழுங்கள்) என்று ஆசி கூறுவதுண்டு. அப்படியானால் நூற்றியோராவது வயது வாழக்கூடாது என்றா பொருள்? தீர்க்கமான ஆயுள் உண்டாகட்டும் என்ற உயர்ந்த பாவத்தில் ஆசி சொல்லப்படுகிறது, அவ்வளவுதான். சதம் என்பது எண்ணிக்கையைக் குறிக்க வந்ததன்று. அதை போலவேதான் சஹஸ்ரம் என்பதும். விச்வத்தையே கண்களாக உடையவனை எந்த எண்ணிக்கையில் அடக்கிச் சொல்ல முடியும்? விச்வம் எவ்வளவு பெரியதோ அவ்வளவு பெரிய கண்களை உடையவன் அவன். நாம் அவனைப் பார்க்க வேண்டுமானாலும் விச்வத்தையே நேத்திரங்களாக்கித் தான் பார்க்க வேண்டும். ஆதலினாலேதான் விச்வ சப்தம் அவனுக்கு மிகப் பொருத்தமான பெயராக அமைந்திருக்கிறது.
இந்த ஜன்மா பூராவும் செலவிட்டாலும் விச்வம் என்கிறதுக்கான அர்த்தத்தை சொல்லி மாளாது. இந்த ஒரு சஹஸ்ர பெருமையை நினைத்துப் பாருங்கள். சஹஸ்ர நாமங்களுக்கு என்ன ஒரு விசே-ஷம் என்றால் அவை அனைத்துமே வேதத்திலே மந்திரங்களாக அமைந்திருக்கின்றன. மந்திரம் என்று எடுத்துக் கொண்டோமானால் பல வகையான நிர்ப்பந்தங்கள். இப்படியிப்படித்தான் சொல்ல வேண்டும் என்று நியமமுண்டு. சுவரம் மாற்றிச் சொன்னேமேயானால் அனர்த்தங்கள் ஏற்படும். எந்த சப்தத்தை அபஸ்வரமாகச் சொல்கிறோமோ அந்த சப்தமே வஜ்ராயுதமாக மாறி சொன்னவரை அடிக்கிறது; கேட்டவரை ஹிம்சை பண்ணுகிறது. ஒரு மந்திரத்தை மாற்றி உச்சரிப்பது பொய்யான வார்த்தை சொன்னதற்குச் சமமாகும்.
துவஷ்டா என்று ஒருவன் இருந்தான். குழந்தை வேண்டி, புத்திர காமேஷ்டி யாகம் பண்ண நினைத்தான். அமராவதி பட்டணத்திலேயே வைத்து இந்திரனை ஜெயிக்கக் கூடிய புதல்வன் வேண்டும் என்று அவன் விரும்பினான் அதற்குரிய யாகத்தை நடத்தித் தரச் சொல்லி புரோகிதரிடத்திலே கேட்டான். மனத்திலே இந்த மாதிரி கோரிக்கையுடன் பண்ணக் கூடிய யக்ஜத்துக்கு, கர்த்தாவான நீயேதான் மந்திரத்தைச் சொல்லணும். புரோகிதனான நான் சொல்ல, நீ கேட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தால் பிரயோஜனமில்லை. முதலில் அந்த மந்திரத்தை அத்யயனம் பண்ணிவிடு என்றார் புரோகிதர். இப்போது நான் எப்படி மந்திரம் கற்றுக்கொள்வது, நீங்கள் யக்ஜத்தை ஆரம்பித்து விடுங்கள். அவ்வப்போது தேவையானதைக் கற்றுக் கொண்டு சொல்கிறேன் என்றான் அவன்.
அவன் ரொம்பவும் நிர்ப்பந்தித்ததால் வேறு வழியில்லாமல் புரோகிதர் யாகத்தை ஆரம்பித்தார் துவஷ்டா சரியாக அத்யயனம் பண்ணாமல் சுவரம் மாற்றி மந்திரத்தை உச்சாரணம் செய்தான். சுவரம் மாறிப் போனதினாலே, இந்திரனை வீழ்த்தக் கூடிய பிள்ளை என்பது, இந்திரனால் வீழ்த்தப்படக்க்கூடிய பிள்ளை என்று பொருள் மாறி ஒலித்தது அந்த யக்ஜத்தின் முடிவிலே விருத்திராசுரன் என்ற அசுரன் ஒருவன் உண்டாகினான். அந்த விருத்திராசுரனை இந்திரன் தன வஜ்ராயுதத்தினாலே கண்ட துண்டமாய் வெட்டி வீழ்த்தினான்.
அக்ஷரங்களைப் போலவே சுவரங்களுக்குக் கூட அர்த்தம் உண்டு என்பதற்காக இக்கதையைச் சொன்னேன். தினம், தினம் ஒருவர் ஒரு கிரஹத்துக்குப் போகிறார். வாங்கோ என்று அவரை அழைக்கும் தொனியிலேயே அது வாங்கோவா, போங்கோவா என்று அர்த்தமாகிறதில்லையா? அது போல்தான்; லௌகிகத்தில் அர்த்தம் மாறுகிற மாதிரி வேதத்திலேயும் மாறுகிறது.
இவ்வளவு கடினமான வேதத்தை எல்லோரும் தரிக்க முடியுமா? முடியாது என்பதால்தான் வேத வான்மயமான சஹஸ்ர நாமத்தைச் செய்திருக்கிறது. வேதம் போல, இவ்வளவு சுவர அமைப்போடு அதைச் சொல்லணுமா என்றால், சொல்ல வேண்டியதில்ல.
பீஷ்மர் வாக்கிலே வந்த சஹஸ்ரநாமம் சுலபமாய் உச்சாரணம் பண்ணக்கூடியது.
தொடரும்...

No comments:
Post a Comment