குறையொன்றுமில்லை (முதல் பாகம்)
அத்தியாயம் - 47
திருமலையிலே நடந்த அந்தத் திருக்கல்யாணத்துக்கு தேவதைகளெல்லாம் வந்து நின்றிருக்கிறார்கள். மகான்கள் குழுமியிருக்கிறார்கள். அதியாச்சர்யமாக திருக்கல்யாணம் நடக்கிறது.
தேவர்களையெல்லாம் கீழே நம்மையும் அந்த வடவேங்கட மலைமேல் ஏறி வர வைக்கிறான். சாமானியர்களான நம்மை எப்படி தேவர்களுக்குச் சமமாய் உயர்த்தி விடுகிறான் பாருங்கள்!
ஆசார்யர்கள் மூன்று விஷயங்களை மிகவும் உயர்த்திச் சொல்லுவார்கள்:
1. திருவேங்கட யாத்திரை
2. அக்ரூரர் கோகுலம் செல்கை
3. வைகுண்டம் செல்லும் மார்க்கம்
அந்த மார்க்கத்தை நினைத்துப் பார்த்தால் இந்த மூன்றும் சமமான அனுபவங்கள் என்பார்கள்.
"குறை ஒன்றுமில்லாத கோவிந்தா" என்று கோதை அவனைப் பாடினாள். திருமலைக்குப் போகிற அனுபவம் அந்த கோவிந்த நாமத்திலே இருக்கிறதாம். எவ்வளவு எளிமையாக்கித் தருகிறான்! கொஞ்சம் அவன் திருநாமத்தைச் சொன்னாலும் உத்தமமான பலனை அவனது தயையினாலே அள்ளித் தருகிறான்!
சுவாமி தேசிகன் சொல்கிறார்: "வீணையான என்னை மீட்டி தயாசதகத்தைப் பேச வைத்தான் வேங்கடவன்" என்று. அதே வேங்கடவன் தான் இப்போது ஸ்ரீனிவாச கல்யாணத்தை நான் விவரிக்கும்படி செய்திருக்கிறான். அவன் சொல்ல வைக்க, நான் சொல்கிறேன்.
"சஹஸ்ரநாமத்திலே ஸ்ரீனிவாச கல்யாணம்..? என்று கேட்பீர்கள். அந்த பெருமாளே தினமும் சஹஸ்ரநாம அர்ச்சனையைக் கேட்பவன் தானே!
விச்வம் என்கிற ஒரு தர்மத்துக்குப் பத்து அவதாரங்களைப் பொருளாகச் சொன்னேன். கோவிந்தா என்று நாமமும் அதே பத்து அவதாரங்களைக் குறிக்கிறது. கோவிந்தா சப்தத்தை ஆராய்ந்தால் பத்து அவதாரங்களும் இருக்கிறது.
கோ என்றால் வேதத்திற்குப் பெயர். அதை மீட்டுக் கொடுத்த மத்ஸ்யாவதாரத்தைச் சொல்கிறது.
கோ என்றால் பர்வதம் - பர்வதத்தைத் தூக்கிய கூர்மாவதாரத்தை நினைவுப்படுத்துகிறது.
கோ என்றால் பூமி - பூமியை உத்தாரணம் செய்த வராக அவதாரத்தைக் குறிக்கிறது.
நரசிம்ஹனை கோவிந்தா என்று ஸ்தோத்திரம் செய்தார்கள். அதனால் நரசிம்ஹனுக்கும் கோவிந்தன் என்று பெயர்.
பூமியில் மூன்றடி மண் கேட்டான் அல்லவா? அதனால் வாமனனையும் கோவிந்த சப்தம் குறிக்கும்.
பூமி முழுவதும் சஞ்சாரம் பண்ணிய பரசுராமனும் கோவிந்தனே.
கோ என்றால் ஆயுதம் என்றொரு பொருள். விச்வாமித்ரர் 500 விதமான அஸ்திர சாஸ்திரங்களை ராமனுக்கு அர்ப்பணம் செய்தார். அவரிடமிருந்து அஸ்திரங்களைப் பெற்ற ராமனுக்கு கோவிந்தன் என்றும் பெயர்.
பூமியைக் கலப்பையால் இழுத்தவனானதாலே அந்த பலராமனுக்கு கோவிந்தன் என்றொரு பெயர்.
கோ - பசு. பசுவை ரட்சித்த கிருஷ்ணனுக்கு கோவிந்த நாமம் பொருந்தும்.
இப்படி பத்து அவதாரங்களுக்கும் பொருளாகிறவன் திருமலையிலே இருப்பதாலே - முன்பு பரக்கப் பேசப் பட்ட பெருமைகளெல்லாம் - சஹஸ்ரநாம விளக்கமெல்லாம் இந்த ஸ்ரீநிவாசனுக்கும் பொருந்துவதே.
பேராயிரம் கொண்டதோர் பீடுடையவனான திருவேங்கடமுடையான் திருக்கல்யாண உத்ஸவம் - தாரை வார்க்கப்படுகிற நேரத்தில் பத்மாவதி ஸ்ரீனிவாசனைப் பாராமல் வெட்கத்துடன் தலைகுனிந்து இருக்கிறாளாம்.
"இந்தப் பெண் இவ்வளவு வினயமாக இருக்கிறாளே"! என்று வந்தவர்களெல்லாம் வியப்பு அடைகிறார்கள். ஒரு பெண்ணுக்கு அழகு வினயம்தானே என்று கொண்டாடுகிறார்கள்.
ஆனால் பத்மாவதியின் அனுபவமே அனுபவம். அது உலகில் வேறு யாருக்காவது கிடைக்கக்கூடியதா? அவள் கழுத்திலே ஒரு மாலை அணிந்து கொண்டிருக்கிறாள். இரத்தின மாலை. அதிலே மத்தியிலே ஒரு பெரிய மணி. அந்த மணியிலே எதிரேயிருக்கிற ஸ்ரீனிவாசனுடைய திருமுக மண்டலம் தெரிகிறது! அப்புறம் ஏன் தலையைத் தூக்க வேண்டும்! அந்த மணியிலே தெரிகிற பிம்பத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
பத்மாவதிக்கு உலகத்தவரிடத்திலும் நல்ல பெயர். அவள் அனுபவத்துக்கும் குறையில்லை! ஸ்ரீனிவாசனைப் பார்த்து ரசிக்கிறாள்!
ஆந்திர தேசத்திலே நடக்கிற விவாகம் அல்லவா... அதனால் அந்த தேச வழக்கப்படி ஒரு விஷயம்.
ஆந்திர தேசத்திலே மாங்கல்ய தாரணத்தோடு "ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே" என்று முகூர்த்தம் முடிந்து விடாது. சீரகத்தையும் வெல்லத்தையும் சேர்த்து அறைப்பார்கள். அதை பெண் - மாப்பிள்ளை கையில் கொடுத்து ஒருவருக்கொருவர் உச்சந்தலையில் வைக்கச் சொல்லுவார்கள். இடையிலே திரைபிடித்திருப்பார்கள். அதுதான் முகூர்த்தம்! அந்த நேரத்திலே மகா சங்கல்பங்கள் எல்லாம் சொல்லுவார்கள்.
சீரகம் ஒரு ருசி; வெல்லம் இன்னொரு ருசி. இரண்டும் கலந்து இழைகின்றன. அதைப் போலவே இரண்டு பேரும் கலந்து இழைய வேண்டும் என்பது ஐதீகம்.
அதுமட்டுமல்ல.. கல்யாண தினத்திலே உட்காருவதும் எழுந்திருப்பதும் சேவிப்பதுமாக இருப்பதால் சிலருக்கு தலை சுற்றல் போன்ற உபாதைகளெல்லாம் வரும். வைத்திய சாஸ்திரப்படி சீரகத்தையும் வெல்லத்தையும் அறைத்து உச்சந்தலையில் வைத்தால் உஷ்ண சமனம் ஏற்படுகிறது.
இன்றைக்கும் பெருமாளுக்கு வேங்கடத்திலே, பத்ராசலத்திலே கல்யாண உத்ஸவம் நடத்தும்போதும் இந்த சீரக - வெல்ல சடங்கு நடக்கிறது.
இன்னொரு வழக்கம். சோபனாக்ஷதை சேர்ப்பது. ஒருத்தருக்கொருத்தர் தலையிலே அக்ஷதை சேர்த்துக் கொள்ள வேண்டும். வெள்ளை வெளேரென்று முத்துக்களை எடுத்து பத்மாவதி சிரசிலே சேர்க்கிறான் பெருமாள். அது கீழே விழும்போது அப்படியே தங்கக் கட்டியைப் போல் விழுகிறதாம். ஏன்..? பத்மாவதி பொன்னிறத் திருமேனியுடையவளானதாலே முத்துக்கள் அவள் நிறத்தைப் பெற்று அப்படி ஒளிர்கிறதாம்.
ஸ்ரீனிவாசன் சிரஸிலேயிருந்து விழுகிற முத்துக்கள் நீலமணிகளாகக் காட்சி அளிக்கிறதாம். அவன் நீலமேக ச்யாமள வண்ணல்லவா..? அதனாலே.
நாடக அரங்கத்திலே வண்ண விளக்குகளைப் போட்டு மாற்றி மாற்றி சிவப்பு, பச்சை, நீலம் என்று காட்சி சித்திரிக்கிறார்களே, அதைப்போல, விளக்குகளுக்கு அவசியமே இல்லாமல் ஒரு வர்ண ஜாலம் நடக்கிறது அங்கே. நீலம், பொன்னிறம், வெண்மை என்று மாறி மாறி விழுகிறபோது, பார்க்கிறவர்கள் எல்லாம், "இன்னும் கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டே இருக்க மாட்டோமா?" என்று ஆசைப்படுகிற அளவுக்கு இருக்கிறதாம் அந்தக் காட்சி.
சரி, இந்த காட்சியைப் பார்க்க முடியாவிட்டாலும் இதை வர்ணிக்கக், கேட்க முடிகிறதல்லவா நமக்கு..
அதனால் நமக்குப் பலன் என்ன?
அந்த ஸ்ரீனிவாசனுடைய திருக்கரத்தை நாமும் பிடித்து பத்மாவதிக்குச் சமானமாக அவன் திருவடியிலே கைங்கர்யம் பண்ணும்படியான பாக்கியம் அருள்வான்.
இந்த உலகத்திலே இதனால் நமக்குப் பலன் என்ன?
வாழ்க்கையிலே நடக்க வேண்டிய சமஸ்த மங்கள காரியங்களையும் அது நடத்தி வைக்கும்.
வயதான காலத்திலே, நமக்கு அந்த ஸ்ரீனிவாசனுடனேயே கல்யாணத்தை நடத்தி வைக்கும். அதாவது மோக்ஷ பதவியை அளிக்கும்.
(முதல் பாகம் நிறைவுற்றது - நல்லோர்களின் ஆசியுடன்)
இரண்டாம் பாகம் தொடங்குவதற்கு முன் ஸ்ரீ முக்கூர் நரசிம்ஹாமாச்சார்யர் சுவாமியைப் பற்றி சில துளிகள் ...
(Visit:
mukurnarasimha.blogspot.in)
EVEN IN this age of very advanced technology, there are certain
superhuman instances in the field of spiritualism. How else can one
explain this? An extremely obese person had performed the feat of
standing waist-deep in the rapidly flowing waters of a river for
nearly 60 hours, meditating on God, even without sipping a glass of
water, as part of his commitment to carry out a penance. This
happened about a year ago in Mattapalli, a village about 150 km from
Vijayawada, where the on the banks of the Krishna (in a crevice) the
idol of Narasimha is installed. And the incredible act was performed
by a well-known Vedic scholar, Sri Mukkur Lakshmi Narasimhachariar,
whom God took away to his abode, at the age of 56, just a fortnight
ago.
The Pandit had gone round entire India organising 107 Vedic Yagnams over a period of two decades, to highlight the glory of Hindu traditions and to enable men to face problems. Thousands had listened to his discourses on a variety of subjects (the epics, the Puranas, the Upanishads and the Gita) for months, each lecture spreading over even three hours, with Vedic recitations preceding them. His aim was to spread Hinduism and make people understand how they can get over their anxieties by following the teachings in these works.
Inheriting knowledge from his father, who was connected with the Madurantakam Sanskrit College of Ahobila Math, Sri Lakshmi Narasimhachariar had education in Kanchipuram up to PUC and then mastered the Vedas and the Vedanta from his brother who was himself a distinguished preacher of Vedic study. Sri Lakshmi Narasimhachariar also came under the spell of the 44th Jeeyar Swami of Ahobila Math and mastered Sanskrit, Telugu and Tamil, had thorough training in Naalayira Divya Prabhandam and had assimilated all the works of Vedanta Desika and other illustrious leaders. The profundity of his erudition used to astound listeners as he quoted from various sources and works not only of Vaishnavism but also of Adi Sankara, Madhusudana Saraswathi and several other religious heads. The fact that he had been expounding the term ``Vishnu'' in the Sahasranamam for 10 days in a year for three years in succession, at the Asthika Samajam, Alwarpet (Chennai) will reveal how he covered various aspects of religion and philosophy. He also dwelt on steps of atonement for certain acts done violating the scriptural codes.
Sri Lakshmi Narasimhachariar's lecture at the Asthika Samajam were taped, transcribed and published in Kalki. These were later compiled and brought out in book form by Vanathi Pathippagam entitled ``Kurai Ondrum Illai'', the first and second volumes of which have gone to more than one edition and sold all over the world by Tamil people.
The late scholar had conducted 107 yagams in different parts of India from Rishikesh to Tuticorin. The first was inaugurated in the Asthika Samajam about 20 years ago. His 108th (end the last) is due at Ahobilam. A few persons were prepared to contribute the entire sum required for each yagam but Lakshmi Narasimhachariar was keen that every Asthika should participate in them. He never prescribed any remedy for problems as, in his opinion, that would amount to a commercial proposition and he, a mercenary. In one case, taking permission from the Lord during his prayer he got a girl cured of a serious malady and as a result, she is now well- settled in life. Recently he suggested that a famous Sanskrit hymn, ``Lakshmi Sahasram,'' be recited for 48 days when a miracle did happen as he expected and a couple got back their vision. ``I am a tool in helping these devout devotees.'' Never was he anxious to suggest any miraculous prescription.
It was Sri Mukkur Swami who preached that the ``Leonine form of God'' was not ``fierce'' as some imagined and popularised Narasimha's worship. After a brief period of employment in Vijayawada, at his brother's command he took up the discourse- assignment full-time and made ``Mattappali Narasimha'' a household name. Tragedy struck when his elder brother who was his teacher in the Vedas and Sastras, was killed in a road accident near Vijayawada. Sri Mukkur Swami's daily puja (Aradhana) at his residence in T. Nagar used to take four to five hours and on and off, he went into a TRANCE. Many of his programmes fixed in advance were cancelled as he remarked that ``Narasimha'' had not given him permission.
After conducting a Yagam in Mumbai, he came to Chennai and then proceeded to Kakinada (where he owns a house) where he suffered a massive heart attack and passed away within an hour. His father- in-law, Sri Thirukkallam Narasimha Raghavachariar, was also a reputed scholar who too died when he was 58. The world of religion and Hinduism mourns the loss of a Vedic authority and a spiritual guide in Sri Mukkur Swami's death.

* * * * * * * * *
Sri Mukkur Swami &
Setji
Mukkur Sri Lakshmi
Narasimhacharya was a renounced exponent on religious discourses was
an ardent devotee of Kanchi Periyava. Before commencing his discourse
he invariably talks about Periyava and his greatness and then only
proceed further on his deliberations.
Once a North Indian Setji
used to attend his religious discourse as a routine. The Setji had a
disease and he could not eat through the mouth and food was injected
in his body through the stomach. All his attempts to cure the disease
viz., medication, visit to many temples, doing parikaras etc., were
eventually failed. Upon hearing the greatness of Periyava through
Mukkur Setji decided to visit Periyava and requested Mukkur to take
him to Periyava. Mukkur informed Setji that he will seek the
permission first from Periyava himself and then he will take to him.
Mukkur then met Periyava
and informed about Setji and his request for meeting Periyava.
Periyava, however replied in negative and said “not now”. Later
when Setji asked Mukkur regarding his meeting of Periyava, Mukkur
tried telling Setji that the meeting will happen later. However he
could not withstand the pestering Setji and one day took him straight
to the place where Periyava was staying and then informed Periyava
that the Setji has come to meet him.
Periyava then told Mukkar to inform him to engage himself in devotional and other religious activities so that he will be cured by the Grace of the God. Mukkur however replied Periyava that Setji is already engaged in all sorts of devotional activities and even gives more in charity.
Periyava then thought for a while and asked Mukkur

“Will he do what I
say?”
“I Will ask him to do
Periyava”
“Will he print all the
eighteen Puranas as separate books in Sanskrit and donate them to all
the Vedic Scholars?”
“Definitely Periyava”
Periyava then blessed
both Mukkur and Setji and send them off.
Setji upon his return started printing the Puranas in Sanskrit and started distributing to all the Vedic Scholars located in various States.
Even after publishing 17
out of the 18 Puranas there was no sign of recovery for Setji.
However Setji’s dedication was awesome and he continued the noble
activity despite his ill health.
The grace of Mahaperiyava
started pouring when he commenced the activity for the 18th Purana
which is Skanda Purana i.e. Purana which details the divine glory of
Lord Skanda or Muruga. His health started improving and he started
eating through the mouth slowly. Setji and his family very happy on
this.
Mukkur and Setji later visited Periyava and thanked periyava.
Mukkur and Setji later visited Periyava and thanked periyava.
Mukkur told “Only by
the Grace of Periyava Setji got cured.”
However Mahaperiyava
humbly denied and told them it is divine power of the Dharma Shastras
(Religious Scriputres) of our Country that has cured him and showered
his blessings on them!
-----------------o---------------------
No comments:
Post a Comment