குறையொன்றுமில்லை (முதல் பாகம்)
அத்தியாயம் - 32
அத்தியாயம் - 32
பகவானுடைய சுவாசமாகவும் நிஸ்சுவாசமாகவும் - அதாவது உள்ளே இழுக்கும்படியான காற்றாகவும் வெளியே விடும்படியான காற்றாகவும் விளங்குவது வேதம். பகவானுக்கும் சுவாசம் உண்டு என்கிறது வேதம் இங்கே. நமது சரீரம் மூச்சுக் காற்றினாலே பெருமை அடைவது போலே பகவானுக்கும் வேதமாகிற மூச்சுக் காற்றினாலே பெருமை உண்டாக்குகிறது என்றால், அந்த வேதம் எப்பேர்ப்பட்டதாக இருக்க வேண்டும். அதில் சொல்லப்பட்ட விஷயத்தை எல்லோரும் சுலபமாக தெரிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் புராண இதிகாசமாக மாற்றிக் கொடுத்தார்கள்.
இப்படிச் சொன்னால் வேதத்தில் சொன்ன விஷயங்கள் முன்பாக நடந்தனவா? புராண இதிகாசங்கள் முன்பாக நடந்தனவா? என்று கேள்வி வரும்.
புராண இதிகாசங்களில் சொல்லப்பட்டிருக்கும் ஒவ்வொரு அவதாரத்தையும் வேதம் சொல்கிறது. அப்படியென்றால் அவதாரங்களுக்குப் பின்பாகத்தான் வேதம் உண்டானதா?
நன்கு கவனிக்க வேண்டும். வேதத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ அதைத்தான் பகவான் நடத்திக் காட்டினான். பகவான் வராஹ அவதாரம் பண்ணி பூமியை உய்வித்தான் என்று வேதத்தில் வருகிறது. அதையே பகவான் நடத்திக் காட்டினான். வேதத்தைப் பூரணமாய் அனுஷ்டித்தான் பரமாத்மா. அதை அனுஷ்டானம் பண்ணுவதற்கென்றே இந்த லீலா விபூதிகள்.
வேதம் சொல்படி நடந்தான் பரமாத்மா என்பதை நாம் ஸ்பஷ்டமாக உணர வேண்டும். வேதத்தில் வரும் ஒரு வாக்கியம் - தேவதைகளெல்லாம் யக்ஜம் பண்ணினார்கள் என்கிறது.
நாம் யக்ஜம் பண்ணினால் இந்திராதி தேவர்களைப் பார்த்து பண்ணுகிறோம். பகவான் அவர்கள் ரூபத்தில் இருந்து நமக்கு அனுக்கிரகம் பண்ணுகிறான். ஆனால், தேவதைகள் யக்ஜம் பண்ணினால்...?
தேவதைகள் யக்ஜம் செய்தால் தேவலோகத்தில் பண்ணமுடியாது. பூலோகத்துக்கு வந்துதான் பண்ண வேண்டும்!
"வையத்து வாழ்வீர்காள்" என்று ஆண்டாள் அழைப்பதைப் பார்க்கிறோம். வையத்தில் வாழ்வதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று பொருள். எல்லா கர்மாவும் விலகும்படியான, உயர் பலனைக் கொடுக்கும்படியான, சாஸ்திரங்களை அனுஷ்டிக்கும் உத்தமமான பூமி இது. அதிலும் பாரத தேசம் ரொம்ப சிறப்பு என்று சாஸ்திரமே கொண்டாடுகிறது.
இப்படிப்பட்ட பூமிக்கு வந்துதான் தேவர்கள் யக்ஜம் பண்ண வேண்டும். அவர்களும் வந்து நாராயணனைக் குறித்து யக்ஜம் பண்ணினார்கள்.
அந்த தேவர்களுக்குள்ளே துவஷ்டா என்கிற ஒருவன்.
அவனுக்கு புரோடாசத்தின் பேரிலே ரொம்பவும் ஆசை.
புரோடாசம்...! அப்படியென்றால்..?
அப்படியென்றால் என்னவென்று வேதமே சொல்கிறது . அதைத் தயாரிக்கும் முறையை விளக்குகிறது.
யக்ஜம் பண்ணக்கூடியவருடைய தர்ம பத்தினி, ரொம்ப சுத்தமாக, மடியாக இருந்து, உலக்கையைக் கையில் எடுத்து, உரலுக்கும் உலக்கைக்கும் பூஜை பண்ணி விட்டு, மந்திரம் சொல்லிக்கொண்டே நெல்லைக் குத்த வேண்டும். அதிலே கிடைக்கிற அரிசியை மாவாக அரைத்து, அதை அடையாகத் தட்ட வேண்டும். அதற்குப் பெயர்தான் புரோடாசம். அப்படித் தட்டி அதன் மேலே நெய்யைத் தடவி வைத்தார்களானால் ரொம்ப வாசனையாக இருக்கும். அதிலே நமக்கொண்ணு கொடுத்தால் நன்றாயிருக்குமே என்று எல்லோருக்குமே தோன்றும்!
ரொம்ப பக்குவமாக அதைத் தயார் பண்ணி ஹோம சமயத்திலே கொண்டு வர வேண்டும். கோவில்களில் கூட அதை நன்றாக மூடி யார் கண்ணிலும் படாமல் எடுத்து வந்து செய்விப்பார். அவரே கூட அதைப் பார்த்து இவ்வளவு முந்திரிப் பருப்பா? இத்தனை நெய்யா? என்றெல்லாம் நினைத்து விடக்கூடாது என்கிற முன் ஜாக்கிரதை... நன்றாக இருக்கும் போலிருக்கே என்று நாம் மனசில் கூட நினைத்து விடக்கூடாது - அப்படி நினைத்தால் அபசாரமாகி விடும். அந்த மாதிரிதான் யக்ஜத்திலும் புரோடாசத்தை கவனமாக எச்சரிக்கையாகத் தயாரித்துக் கொண்டு வருவார்கள்.
தேவர்கள் நடத்தும் யக்ஜத்திலே புரோடாசத்துக்குப் பங்கம் வந்தது! ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ரூபத்திலே வந்து, துவஷ்டாவே புரோடாசத்தைக் கொண்டு போய் விட்டான்! யக்ஜமே நஷ்டமாகி விட்டது. இதனாலே முப்பத்து முக்கோடி தேவர்களும் துவஷ்டாவை அடிக்கக் கையை ஓங்கிக் கொண்டு வந்தார்கள்.
அப்போது அவன் என்ன பண்ணினான்...? அஸ்வினி தேவதைகளிடம் போய்ச் சரணடைந்தான். இந்த அஸ்வினி தேவதைகள் மற்ற தேவதைகளுக்கு வைத்தியர்கள். எப்போதும் இரு அஸ்வினி தேவதைகளும் ஒன்றாகவே இருப்பார்கள். வால்மீகி கூட ராமாயணத்திலே ராம - லக்ஷ்மணர்களைப் பற்றிச் சொல்லும் போது, "அஸ்வினி தேவதைகளைப் போல் காட்சி அளிக்கிறார்கள்" என்கிறார்.
இப்படிப் பட்ட அஸ்வினி தேவதைகளைப் போய்ச் சரணடைந்தான் துவஷ்டா. அவர்கள் பார்த்தார்கள். இவன் தப்பான காரியத்தைப் பண்ணியிருக்கிறான். கொல்லத் தகுந்த குற்றம் இருந்தாலும் சரணாகதி என்று நம்மை வந்தடைந்துள்ளானே... அதனால் அவனைக் காப்பாற்றியே ஆகவேண்டும் என்று அத்தனை தேவதா நிக்ரஹத்துக்கும் அவனை ஆளாக்காமல் அஸ்வினி தேவதைகள் காப்பாற்றி விட்டார்கள்.
அதனால் தான், கொல்லத் தகுந்த குற்றம் பண்ணினாலும் சரணாகதி பன்னியவர்களைக் காட்டிக் கொடுப்பதில்லை என்று சாஸ்திரம் உண்டாகியிருக்கிறது. சரணாகதி பண்ணுகிறவன் எப்பேர்ப்பட்ட குற்றங்கள் பண்ணியிருக்கட்டுமே... அவனை காப்பாற்றியே தீர வேண்டும் என்று வேதம் வலியுறுத்துகிறது. இதை மெய்ப்பிக்கவே பகவான் ராமாவதாரம் பண்ணினான் என்று சொன்னால் அது மிகையாகுமோ...?
இப்படி வேத தர்மத்தை அனுஷ்டிக்கிற அவதாரமாக ராமாவதாரம் இருக்கிறது. துஷ்ட: என்கிற திருநாமம் பரமாத்மாவுக்கு உண்டு. பரிபூரண துஷ்டி (மனநிறைவு) அனுபவிக்கிறவன் அவன். அந்த வேத தர்மத்தை அவன் அனுஷ்டிப்பதனாலே கிடைக்கிறது பரிபூரண திருப்தி.
"அபயப்ரதான சாரம்"என்பதாக ஒன்றை சுவாமி தேசிகன் எழுதியிருக்கிறார். அதிலே சரணாகதி என்றால் என்ன என்று பூரணமாய் நாம் தெரிந்து கொள்ளலாம். அதிலே அவர் எழுதுகிறார்:
ராமாயணத்திலே சரணாகதி என்பது அஞ்சுறு ஆணியாகக் கோக்கப் பெற்றது.
ராமாயணம் என்பது பெரிய ரதம். ரதம் நிற்க வேணுமானால் சக்கரம் அவசியம். சக்கரத்தில் கடையாணி ரொம்பவும் முக்கியம். தவிர, ரதத்தில் பல மரச் சட்டங்கள் ஒன்றோடொன்று கோக்கப்பட்டிருக்கும். கடை ஆணியைக் கொண்டு அவை கோத்து பொருத்தப்பட்டிருக்கும். ஆணியை எடுத்து விட்டால் ரதம் கீழே விழுந்து விடும். அதைப் போல ராமாயணத்திற்குக் கடையாணியாக அதைக் கோத்து நிறுத்துவது சரணாகதி!
பூர்வ காலத்திலே ஒரு சபையிலே பல வித்வான்கள் கூடியிருந்தனர். தர்க்க வித்வான், வியாகரண வித்வான், மீமாம்ஸ சாஸ்திர வித்வான் என்று இப்படிப் பல வகையினர். அவர்களிடையே புதுசாக ஒருத்தர் வந்து உட்கார்ந்தார். மற்றவர்களுக்கு அவரைத் தெரியவில்லை. "எந்த சாஸ்திர நிபுணர் நீங்கள்" என்று மெள்ளக் கேட்டார்கள். "சரணாகதி சாஸ்திரம்தான்" என்றார் அவர். தர்க்க, வியாகரணம் படித்தவர்களெல்லாம் வியப்போடு பார்த்தார்கள். "இதுவரைக்கும் கேட்டதில்லையே.. அது என்ன சாஸ்திரம்? கேள்விப்பட்டதில்லையே?" என்றார்கள். "அந்த சரணாகதி சாஸ்திரம் ராமாயணத்திலே சொல்லப்பட்டிருக்கிறது" என்கிறார் அவர்.
இப்படிப்பட்ட ராமாயணமும் மகாபாரதமும் தெரியாத புராண ஞானம் இல்லாத ஒருத்தருக்கு மற்ற சாஸ்திரங்கள் தெரிந்திருப்பதெல்லம் வீண்தான்!
சரணாகதி சாஸ்திரத்தை உணர்த்தும் ராமாயணம்தான் முதலில் தெரிந்திருக்க வேண்டும்.
ராமாயணத்தின் பால காண்டத்தில் பார்த்தால் பகவானிடத்தில் தேவதைகள் பண்ணின சரணாகதி.
அதே பால காண்டத்திலே தசரதர் பரசுராமரிடத்திலே பண்ணிய சரணாகதி.
அயோத்யா காண்டத்திலோ ராமரிடத்தில் லக்ஷ்மணர் பண்ணிய சரணாகதி.
பரதன் சக்ரவர்த்தித் திருமகனிடம் பண்ணிய சரணாகதி.
ஆரண்ய காண்டத்தில் மகரிஷிகள் எல்லாம் பகவானிடத்தில் பண்ணிய சரணாகதி.
உயர்ந்த கிஷ்கிந்தா காண்டத்தில் சுக்ரீவன் பகவானிடத்திலே பண்ணின சரணாகதி.
சுந்தர காண்டத்தில் திரிஜடையானவள் சீதா பிராட்டியிடம் பண்ணிய சரணாகதி.
உத்தர காண்டத்திலே விபீஷணன் பகவானிடத்தில் பண்ணிய சரணாகதி.
பகவான் சமுத்திர ராஜனிடம் பண்ணிய சரணாகதி.
உத்தர ராமாயணத்தில் எல்லா தேவதைகளும் பகவானிடத்திலே பண்ணிய சரணாகதி.
இப்படி, சரணாகதியானது அஞ்சுறு ஆணியாக ராமாயணத்தில் கோக்கப்பட்டுள்ளது.
இத்தனைக்கும் பலனிருந்தது.
பகவான் பூலோகத்தில் வந்து அவதாரம் பண்ணினதாலே பலன் இருந்தது.
ஆனால், அதே சரணாகதியை தசரதன் பரசுராமனிடத்திலே பண்ணியபோது பலனிருக்கவில்லை.
இந்த பரசுராமர் இருக்கிறாரே..ஏறிட்டுப் பார்க்க முடியாத வீரியம் அவருக்கு. கோபத்துடன் இருக்கிறார். சுவாமி தேசிகன் தமது தசாவதார ஸ்தோத்திரத்திலே எல்லா அவதாரங்களுக்கும் ஒரு சிறப்பு அடைமொழி கொடுக்கிறார்:
ரோஷ ராம: என்கிறார் பரசுராமரை!
அத்தனை ரோஷம்..... கோபம் உடையவர் அவர்!
பரசுராமர் வந்தவுடனேயே "என் குழந்தைகள் சின்னவர்கள். இப்போது தான் கல்யாணம் பண்ணி அழைத்துக் கொண்டு போகிறேன். அவர்களை விட்டு விடுங்கள், என்னை எது வேண்டுமானாலும் செய்யுங்கள்" என்று கெஞ்சுகிறான் தசரதன். ஆனால் பரசுராமர் கோபத்துடன்தான் நிற்கிறார். இந்த சரணாகதி பலிக்கவில்லையே. ஏன் பலிக்கவில்லை. ? முறை தவறி பிரார்த்தித்தோமானால் பலிக்காது!
யாரிடத்திலே சரணாகதி பண்ணுகிறோமோ அவரிடத்திலே இரண்டு விஷயங்கள் இருக்க வேண்டும்.
ஒன்று சக்தி, இன்னொன்று காருண்யம். இவை இரண்டும் இல்லாவிட்டால் பயனில்லை. காருண்யம் இருந்து சக்தியில்லா விட்டாலும் பலனில்லை.
முதலாவதுக்கான உதாரணமாக பரசுராமரைச் சொன்னேன். கருணை இருந்தும் சக்தி இல்லாததால் சரணாகதி தோற்ற கதையை அடுத்த அத்தியாயத்தில் சொல்கிறேன்.
(தொடரும்)

No comments:
Post a Comment