குறையொன்றுமில்லை (முதல் பாகம்)
அத்தியாயம்31
பரசுராமனின் கர்வ பங்கத்தினாலே தான் யார் என்பதை உலகுக்குக் காட்டினான் பகவான். நாராயணனின் திருஅவதாரம் ஸ்ரீராமன் என்பதை மீண்டும் ராமாயணத்திலே பார்க்கிறோம்.
ஸ்ரீ ராமபிரானைப் பாதுகையின் மேல் ஏறி நின்று, அந்தப் பாதுகையைத் தமக்கு தந்தருளும்படி கேட்கிறான் பரதன். பரதன் கேட்டது போல வசிஷ்டரும் பகவானின் பாதுகைகளைக் கேட்டதாக ராமாயணத்தில் வருகிறது.
சுவாமி தேசிகன் அந்தப் பாதுகையைப் பார்த்தே கேட்பது போல் பாடுகிறார். "தந்தைக்கு சமானமான அண்ணனின் பாதுகையைக் கேட்டு வாங்கி பரதன் பூஜை பண்ணியது சரி. ஆனால் வசிஷ்டர் உன்னைக் கேட்டாரே. அவர் எதை மனத்தில் வைத்துக் கொண்டு கேட்டார், நீயே சொல்லு?"
வசிஷ்டருக்குத் தெரியாமல் இருக்குமா என்ன? பாதுகையின் மேல் நிற்பவன் சாஷாத் ஸ்ரீமன் நாராயணன் என்பது தெரியாதா? அவனே ராமனாக அவதரித்திருக்கிறான் என்பது தெரிந்துதான் அவர் அப்படிக் கேட்டார்.
தேரெழுந்தூர் ஸ்ரீமத் ஆண்டவன், தமது பாதுகா சஹஸ்ரத்திலே இதை அழகாக வியாக்யானம் பண்ணுகிறார்.
முதலில் விச்வாமித்ரர் வந்து ராமனை யார் என்று காட்டிக் கொடுத்தார். அது எந்த சந்தர்ப்பம் என்றால், விச்வாமித்ரர் ராமனைத் தம்முடன் காட்டுக்கு அனுப்பச் சொல்லிக் கேட்டபோது தசரதர் தயங்கினார் அல்லவா? அப்போது, "உனக்கே உன் மகனின் பராக்கிரமம், மகிமை தெரியவில்லை. பகவான் நாராயணனின் திரு அவதாரம் அவன்" என்று சொல்லிக் கொடுத்தார்.
பிறகு ஆரண்ய காண்டத்தில் ஒன்பதாவது சர்கம் - எட்டாவது சர்கத்தைப் படித்துவிட்டு, ஒன்பதாவதைப் படிக்காமலே பத்தாவது சர்கத்துக்குப் போகலாம் - தொடர்ச்சி விட்டுப் போகாது... கதைக்குப் பங்கம் வராது. ஆனால் ஒன்பதாவது சர்க்கத்திலே முக்கியமான விஷயம் இருக்கிறது. ராமாயணத்திலே ரொம்ப முக்கியமான விஷயம் இது. அது என்ன விஷயம்?
சரண்ய தம்பதிகளான ராமரும் சீதையும் பேசுகிறார்கள். ராமன் சில இடத்திலே பேசுகிறான். சீதை வேறு இடங்களிலே பேசுகிறாள்.
நாம் என்ன செய்யவேண்டும் என்றால், இரண்டு நோட்டுப் புத்தகங்களை வாங்க வேண்டும். ராமன் பேச்சை ஒரு புத்தகத்திலும், சீதையின் பேச்சை இன்னொன்றிலும் தனித் தனியாக எழுத வேண்டும். பிறகு இரண்டையும் ஒப்பு நோக்கிப் பார்த்தோமானால், இரண்டும் ஒன்றாகத்தான் இருக்கும். மாறுபட்ட கருத்தே இருக்காது! இதில் சீதாப்பிராட்டி ராமனைப் பார்த்துப் பேசுகிறாள்... ஆரம்பத்திலேயே சொல்லி விடுகிறாள்.
"தாங்க முடியாத மூன்று விசனங்கள் இந்த உலகத்திலே உண்டு சுவாமி! பொய் சொல்வது; பிறன் மனையாடல், துவேசம் எதுவும் இல்லாத சமயத்தில் கூட அனாவசியமாக ஆயுதம் தாங்கி நிற்றல். இந்த மூன்று குற்றங்களில் முதல் இரண்டும் தங்களிடத்திலே இல்லை; ஆனால் மூன்றாவது குற்றம் தங்களிடத்திலே இருக்கிறதே! என்கிறாள் சீதை.
பிறகு ஆரண்ய காண்டத்தில் ஒன்பதாவது சர்கம் - எட்டாவது சர்கத்தைப் படித்துவிட்டு, ஒன்பதாவதைப் படிக்காமலே பத்தாவது சர்கத்துக்குப் போகலாம் - தொடர்ச்சி விட்டுப் போகாது... கதைக்குப் பங்கம் வராது. ஆனால் ஒன்பதாவது சர்க்கத்திலே முக்கியமான விஷயம் இருக்கிறது. ராமாயணத்திலே ரொம்ப முக்கியமான விஷயம் இது. அது என்ன விஷயம்?
சரண்ய தம்பதிகளான ராமரும் சீதையும் பேசுகிறார்கள். ராமன் சில இடத்திலே பேசுகிறான். சீதை வேறு இடங்களிலே பேசுகிறாள்.
நாம் என்ன செய்யவேண்டும் என்றால், இரண்டு நோட்டுப் புத்தகங்களை வாங்க வேண்டும். ராமன் பேச்சை ஒரு புத்தகத்திலும், சீதையின் பேச்சை இன்னொன்றிலும் தனித் தனியாக எழுத வேண்டும். பிறகு இரண்டையும் ஒப்பு நோக்கிப் பார்த்தோமானால், இரண்டும் ஒன்றாகத்தான் இருக்கும். மாறுபட்ட கருத்தே இருக்காது! இதில் சீதாப்பிராட்டி ராமனைப் பார்த்துப் பேசுகிறாள்... ஆரம்பத்திலேயே சொல்லி விடுகிறாள்.
"தாங்க முடியாத மூன்று விசனங்கள் இந்த உலகத்திலே உண்டு சுவாமி! பொய் சொல்வது; பிறன் மனையாடல், துவேசம் எதுவும் இல்லாத சமயத்தில் கூட அனாவசியமாக ஆயுதம் தாங்கி நிற்றல். இந்த மூன்று குற்றங்களில் முதல் இரண்டும் தங்களிடத்திலே இல்லை; ஆனால் மூன்றாவது குற்றம் தங்களிடத்திலே இருக்கிறதே! என்கிறாள் சீதை.
"ஒரே சொல், ஒரே இல், ஒரே வில்" என்று பெயர் பெற்றவன் ராமன். பொய் பேசமாட்டான். பிற பெண்களைக் கண்ணெடுத்தும் பாரான் - ராவணனின் பதினாலாயிரம் சைன்யமும் அடித்து வீழ்த்தப் பட்ட நேரத்தில் அவனிடம் போய் அந்தச் செய்தியை சொன்னான் ஒருவன். ராவணன் ஆரவாரமாய்ச் சிரித்து கைதட்டினானாம்! "என்ன உளறுகிறாய்! எல்லோரும் மாண்டு போய்விட்டார்கள் என்றால் நீ மட்டும் எப்படிப் பிழைத்தாய்"? என்று கேட்டானாம். செய்தி கொண்டு வந்தவன் சொன்னான், "எனக்கிருக்கிற சாமர்த்தியம் அவர்களுக்கு இல்லையே"! "அப்படி என்ன தனி சாமர்த்தியம் உனக்கு? நீ என்ன பண்ணி தப்பித்தாய்"? என்றான் ராவணன்.
"சீதையைத் தவிர வேறு ஸ்திரீயைப் பார்க்காதவன் ராமபிரான். அதனால், நான் பெண்ணுடை உடுத்தி ஓடி வந்தேன், இல்லா விட்டால் தப்பித்து இருக்க முடியுமா"?
-எதிர் கட்சியிலே இருக்க கூடியவன் ராமனுக்குத் தந்த நற்சான்று பத்திரம் இது! ராவண குடும்பமே ராமபிரானை இப்படி நிறைய ஸ்தோத்திரம் பண்ணியிருக்கிறது.
"இந்த நற்குனங்களைத்தான் சீதையும் சுட்டிக் காட்டினாள். முதல் இரண்டு நற்குணங்கள் வாய்க்கப் பெற்ற மாதிரி மூன்றாவது ஏன் வாய்க்கப் பெறவில்லை என்றும் கேட்டாள் ... "ஜடாமுடியும், மரஉரியும் தரித்துக் கொண்டு, ஒரு கையிலே தர்பையும் மறுகையிலே சமித்தும் அல்லவா வைத்துக் கொள்ள வேண்டும் சுவாமி? அப்படியில்லாமல், தாங்கள் வில்லையும் அம்பையும் ஏந்தியிருக்கிறீர்களே? இது பொருந்தாமல் இருக்கிறதே?
பரமாத்மா அதற்கு பதில் பேசுகிறான்.
"உத்தம குலத்தில் பிறந்து, உத்தம குலத்தில் வாழ்க்கைப்பட்டதற்கேற்ப நீ பேசினாய் சீதா ! ஆனால், அவசியமேற்பட்டால் நான் உன்னையும் கைவிட வேண்டும்.. என் பிராணனாக, என் உடலுக்கு வெளியே நடமாடும் லட்சுமணனையும் உதற வேண்டும். என் திருவடி பற்றினவர்களைக் காப்பதற்காக, அவசியமானால் அப்படிச் செய்யத்தான் வேண்டும்" என்கிறான்.
அந்த வார்த்தையை முடிச்சுப் போட்டு வைத்துக் கொண்டாளாம் சீதை! சீதாபஹரணமே அதனால் தான் சாத்தியமாயிற்று! ராமனின் இந்த வார்த்தை நிரூபணமாக வேண்டும் என்பதற்காகத்தான் சீதை அவனை விட்டு பிரிக்கப்பட அனுமதித்தாள். அவள் மட்டும் அப்படி நினைத்திருக்காவிட்டால் ராவணனால் அவளை பகவானிடமிருந்து பிரிக்க முடியுமா? அந்த திவ்ய தம்பதிகள் இணைந்த சிந்தனையால் அந்த நிகழ்ச்சியை சங்கல்பித்தார்கள் என்பதை நாம் உணர வேண்டும். அதோடு, அப்படியொரு சொல் ராமனிடமிருந்து வெளிப்பட்டதே அவன் பகவான் நாராயணன்தான் என்பதைத் தெளிவாக மீண்டும் உணர்த்துவதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அடுத்து கிஷ்கிந்தா காண்டத்திலே தாரை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேளாமல், வாலி யுத்தம் செய்கிறான். அப்புறம் ராமபாணத்தால் வீழ்த்தப்பட்டு அவன் கிடப்பதைப் பார்த்து அவள் ராமனை நோக்கிச் சொலகிறாள்:
"தாமரைக் கண்ணன் நீ. உன் நேத்திரமே உன்னை பகவான் நாராயணன் என்று காட்டிக் கொடுக்கிறது. சாந்தோக்ய உபநிஷத்தில் சொல்லப்படுகிற எட்டு குணங்களையும் உடையவன் நீ" என்று தாரை பகவானாகவே ஸ்ரீராமனைக் கொண்டு பேசுகிறாள்.
யுத்த காண்டத்தில், விபீஷணன்
ராவணனோடு
உரையாடும்போது இந்த விஷயம்
மீண்டும் உறுதியாகிறது.
ராவணன்
என்ன சொல்கிறான்:
"விபீஷணா!
எனக்கு
நன்றாகத் தெரியும்.
நான்
முற்றிலும் உணர்கிறேன் -
அவனே
ஸ்ரீமன்
நாராயணன். ஆனால்,
என்னோடு
கூடவே பிறந்த குணம் என்று
ஒன்று இருக்கிறது பார்..
யாருக்கும்
வணங்காத குணம்.
அதனால்
தான் நான் பணியாமல் இருக்கிறேனேயொழிய
அவனே நாராயணன் என்பது தெரியும்!"
ஆனால், அந்த ராவணன் வீழ்ந்த போதும் வந்து நின்று ரட்சித்தான் பரமாத்மா. ராவணன் வீழ்ந்து கிடப்பதைப் பார்த்து மண்டோதரி புலம்புகிறாள்:
"நல்லது பண்ணியவன் நல்லதை அடைகிறான். தீமை செய்தவன் தீயதையே அடைகிறான். விபீஷணன் நல்லதை அடைந்தான். நீங்கள் இப்படிக் கெட்டுப் போய்விட்டீர்களே" என்று அவள் அரற்றுகிறபோது ராமன் எதிரே வந்து நிற்கிறான். வாலியின் எதிரே வந்து நின்றது போலவே வந்து நின்று ரட்சிக்கிறான்.
"இதோ இருக்கிறானே, இந்த ராமன் பரமாத்மா" என்று மண்டோதரியைப் பேசவைக்கிறான்.
ராமாயணத்தின் 24,000 சுலோகங்களிலே வேறு எந்த இடத்தில் தேடினாலும் இந்த வார்த்தை கிடைக்காது! பரமாத்மா - இந்த ஒரு இடத்தில்தான் வருகிறது அந்த வார்த்தை. மகா பதிவிரதையான மண்டோதரியினிடத்திலே பகவானால் தன்னை மறைத்துக் கொள்ள முடியவில்லை!
அக்னிப் பிரவேச கட்டத்தில் பாருங்கள், சீதை அக்னிக்குள் இறங்க இருக்கும் சமயம் அங்கே ஈஸ்வரன் எழுந்தருளியிருக்கிறார். ப்ரும்மா வந்திருக்கிறார். இந்திராதி தேவதைகள் வந்திருக்கிறார்கள். "அக்னியில் விழக்கூடிய சீதையைத் தடுத்து நிறுத்தாமல் இப்படி பார்த்துக் கொண்டிருக்கிறாயே.. உன்னை நீ உணரவில்லையா"? என்று ராமனிடம் கேட்கிறார்கள். அதற்குப் பரமாத்மா சொல்கிறார்.
"நன்றாக உணர்ந்திருக்கிறேன். நான் மனிதன். தசரதன் பிள்ளை ராமன்" என்று.
"நீ மனிதனா? நீ யார் என்பதை நாங்கள் சொல்கிறோம்! விஷ்ணு நீதான்! கிருஷ்ணன் நீதான்! புருஷ சூக்த பிரதிபாத்ய தேவதை நீதான்" என்று அங்கே அழுத்தம் திருத்தமாய் வேதலோகமே சொல்கிறது.
இப்படியாக, பால காண்டத்திலே ஆரம்பித்து ஒவ்வொரு காண்டத்திலும் பரமஸ்பஷ்டமாக ராமனை பகவான் என்று சொல்லியிருக்கிறது.
இதை கூரத்தாழ்வான் ரொம்ப நயமாகச் சுட்டிக் காட்டுகிறார். "ஹே ராமனே! சீதையைக் காணோம் என்றதும் - ஏ மரமே நீ சீதையைப் பார்த்தாயா? மட்டையே அவளைக் கண்டாயா" என்று புலம்பி அலைந்த நீ, ஜடாயுவுக்கு மட்டும் மோக்ஷம் கொடுக்க முன்வந்தாயே! அத்தனை நேரமும் உன்னை ஆட்டி வைத்த அஞ்ஞானம் அந்தக் கணத்திலே எங்கே பறந்து போனது! அந்த நிகழ்ச்சியே தெளிவாகக் காட்டி விடுகிறதே நீதான் பரமாத்மா என்று".
பரமாத்மா பரமஸ்பஷ்ட:
ஆகவே, விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் முதல் சப்தமான விச்வ சப்தத்தினாலே சொல்லப்படுகிற ஸ்ரீமன் நாராயணன் தான் ஸ்ரீராமன் என்றாகிறது. விச்வ சப்தத்தால் சொல்லப்படுபவன் ராமன் என்றும் ஆகிறது.
(தொடரும்)
No comments:
Post a Comment