குறையொன்றுமில்லை (முதல் பாகம்)
அத்தியாயம்30
ஸ்ரீராமனின் குணா இயல்புகளைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தேன். இதரர் நலனையும் தன்னலனாகவே கருதக் கூடியவன் அவன். இங்கேயிருந்து அணை கட்டி இலங்கைக்குப் போக வேண்டும். விபீஷணனைக் கூப்பிட்டுப் பரமாத்மா கேட்கிறான். "உங்க ஊருக்கு போகணும்னா, இவ்வளவு பெரிய சமுத்திரம் குறுக்கே இருக்கறதே.. என்ன பண்ணலாம்?" உடனே விபீஷணன் சொல்கிறான், "ஹே ராகவா! சமுத்திரராஜனிடத்திலே சரணாகதி பண்ணு, அவனே வழி காட்டுவான்". இவன் சரணாகதி பண்ணினதாலே, பகவானையும் அதே மாதிரி சரணாகதி பண்ணும்படி சொன்னான் விபீஷணன்!
பகவானுக்குக் கொஞ்சம் யோசனை, "நம்மைப் போய்ச் சரணாகதி பண்ணச் சொல்கிறானே, இவன் பண்ணினதால் தான் நாமும் பண்ணவேண்டும் என்கிறான்".
ஆனால் பரமனுக்கு விபீஷணனுடைய உள்ளத் தூய்மை புரிந்திருந்தது. சரணாகதி பண்ணினால் பலன் ஏற்படும் என்பது அவன் அனுபவத்தில் அறிந்த உண்மை. அதனால் பகவான் அப்படி சரணாகதி பண்ணலாமா? அவ்வாறு அவனைப் பண்ணும்படி சொல்லலாமா? கூடாதா? என்கிற கேள்விகளெல்லாம் அவன் மனத்தில் எழவேயில்லை... இதை பகவான் அறிந்திருந்தான். விபீஷணனின் உள்ளத் தூய்மையை மதித்து அவனும் சரணாகதி பண்ணினான்.
இங்கு ஆசார்யர்கள், விபீஷணன் எவ்வளவு நல்லவன் என்கிறதைக் காட்ட ஒரு கதை சொல்லுவார்கள், வேடிக்கையான கதை.
ரொம்ப பரமைகாந்தியாக ஒருத்தர். பாவம்! லௌகீகமே தெரியாது அவருக்கு! ஆசார அனுஷ்டானங்களைத் தவிர வேறொன்றையும் அறியாதவர். வாசல் திண்ணையை விட்டு எங்கும் போய் அறியார். நித்தியம் அந்தத் திண்ணையிலேதான் படுத்து உறங்குவார். ஒருநாள், அப்படிப் படுத்துத் தூங்கப்போன சமயம். அவருடைய தாத்தாவுக்குத் தாத்தாவுக்குத் தாத்தா காலத்திய வெள்ளிச் செம்பு.. அதைத் தலைமாட்டிலே வைத்துக் கொண்டு படுத்திருந்தார். அங்கேயிருந்து அவருடைய தர்மபத்தினி வந்து சேர்ந்தாள். வந்து, "சுவாமி! இப்படிப் படுத்துண்டிருக்கீரே! நிராதரவா, தலைமாட்டிலே வெள்ளிச் செம்பை வைத்துண்டு படுத்திண்டிருக்கீரே.. உள்ளே வைக்கிற, பூட்டி வைக்கிற வஸ்துவே திருட்டுப் போய் விடுகிறதே.. இப்படிப் பந்தோபஸ்து இல்லாமல் செம்பை வைத்தால் திருடுபோய் விடாதா? என்றாள்.
"இது திருடு போகாது" என்று உறுதியாக பதில் சொன்னார் அவர். "அது எப்படிச் சொல்றீங்க". "அந்த செம்பப் பாரேன்". "பார்க்கிறேனே, தெரியலையே" "செம்பை நான் எப்படி வச்சிருக்கேன் பாரேன்" "கவிழ்த்து வச்சிருக்கு. அப்படி வைத்தால் திருட்டுப் போகாதா, சுவாமி?
அதற்கு அவர் சொல்கிறார்: நிமிர்த்து வச்சால் அதிலே தீர்த்தம் - ஜலம் இருக்கும். கவிழ்த்து வச்சால், அதுலே ஒரு சொட்டு ஜலம்கூட இல்லைன்னு தெளிவாயிடுத்தோல்லியோ, அதனாலே திருட்டுப் போகாது" "தீர்த்தம் இல்லைன்னா திருட்டுப் போகாதா, சுவாமி? "இப்ப இந்த செம்பைத் தொடணும்னா கை அலம்பணுமே, கை அலம்ப இங்க தீர்த்தம் எங்க இருக்கு? என்று கேட்டார், அந்த எளியவர்.
இவர் செம்பைத் தொடவேண்டுமென்றால் முதலில் கை அலம்பிக் கொண்டுதான் தொடுவார். வருகிற திருடன் கூடவா கை அலம்பிக் கொண்ட பிறகே செம்பைத் தொட வேண்டும் என்று நியமம் பார்க்கப் போகிறான்? ஆனால் அவர் அப்படி எல்லாம் யோசிக்கவில்லை. ஆசார சீலர்! இந்த உலகத்திலே அத்தனை பேருமே தம்மைப் போல ஆசார சீலர்களாக இருப்பார்கள் என்று அவர் நினைக்கிறார்! அதிலே ஏதாவது தப்பு உண்டோ! அதே மாதிரிதான், ராமன் சரணாகதி பண்ணலாமா கூடாதா என்கிற விசாரமெல்லாம் விபீஷணனுக்கு ஏற்படவில்லை!
பகவானும் விபீஷணன் சொல்படி சமுத்திர ராஜனிடம் சரணாகதி பண்ணினார். மூண்று நாட்கள். திருப்புல்லாணியில் சரணாகதி பண்ணியும் சமுத்திரராஜன் வழி விடவில்லை. உடனே, "சுமித்ரா நந்தனா! வில்லை எடு! இந்த சமுத்திரத்தின் மீது அஸ்திரப் பிரயோகம் பண்ணுகிறேன்! என்று சொல்லி பாணத்தைப் பிரயோகம் பண்ணினான். அதன் பிறகு ஐந்து நாட்களில் சேது பந்தனம் நடந்து முடிந்தது. சின்னக் குரங்கு, பெரிய குரங்கு அதைக் காட்டிலும் பெரியது, கிழட்டுக் குரங்கு என்று அத்தனை குரங்குகளும் வந்து சேர்ந்து உதவின. அந்தக் குரங்குகள் செய்த பாக்கியம் தான் என்ன?
அவை அத்தனையும் எகிறிக் குதித்துக் கொண்டு சந்தோஷத்துடன் சேதுவை கடந்து போயினவாம். மறுபக்கத்தில் என்ன வாழையிலை போட்டு விருந்தா பரிமாறப் போகிறார்கள்...? அதெல்லாம் கிடையாது; பிராணனை விடுவதற்காகத்தான் போகிறோம் என்று அத்தனை குரங்குகளுக்கும் தெரியும். பகவான் ராமனுக்காகப் பிராணனை விடுவதற்குத்தான் அத்தனை உத்ஸாஹம்.
இலங்கைக்குப் போன சுக்ரீவன் அந்த நாடு எப்படி இருக்கிறது என்று பார்க்க முதலில் கிளம்பினானாம். இதற்குள்ளே, வானரப்படை வந்திருப்பதைக் கேள்விப்பட்டு, ராவணனும் என்னவென்று பார்க்கப் புறப்பட்டானாம். ஆகாச மார்க்கமாய் வருகிறான் ராவணன். சுக்ரீவனுக்கும் அவனுக்கும் பெரிய சண்டை உண்டாகிறது. உடனே சுக்ரீவன் அந்த பத்துத் தலை கிரீடங்களில் இருந்தும் பத்து ரத்தினங்களைப் பறித்துக் கொண்டு விட்டானாம். அவற்றை அப்படியே எடுத்து வந்து ராமபிரானுடைய திருவடியிலே வைத்து, நடந்ததைச் சொல்லுகிறான். இந்த மாதிரி நிலைமையிலே வேறொரு தலைவனாயிருந்தால் என்ன சொல்லியிருப்பான்? "சபாஷ்! உன்னைப் போல வீரன் உண்டா? இவ்வளவு பெரிய காரியம் செய்திருக்கியே" என்று கொண்டாடியிருப்பான். ஆனால், ராமபிரான் சுக்ரீவனை இப்படிக் கொண்டாடவில்லை. சுக்ரீவனைப் பார்த்துக் கண்ணீர் விடுகிறான் பரமாத்மா: "ஹே சுக்ரீவா! என்ன காரியம் பண்ணினாய் நீ! எனக்குத் தெரியாமல் இந்தக் காரியத்தை நீ பண்ணியிருக்கலாமா? இது நியாயமா"? என்று வருத்தப்படுகிறான்! பகவானுடைய இந்த குணத்தைப் பார்க்க வேண்டும் நாம். இதரர் நலனைத் தன் நலனாய் காணக் கூடியவன் அவன். அதனால் அவன் சொல்கிறான், "உன்னை இழந்து, சீதை கிடைப்பதானால் அந்த சீதை எனக்குத் தேவையில்லை!".
எவ்வளவு உயர்ந்த குணம் இது! தன் காரியம் நடந்தால் போதும் என்று நினைக்காமல், எல்லோரும் சௌக்கியமாய் இருக்க வேண்டும். தம் காரியமும் கைகூட வேண்டும் என்று நினைக்கிற குணம்.
இத்தனை உயர்ந்த குணம் படைத்தவன் ஆனதாலே தான் அவனை "விச்வ மூர்த்தி": என்பது.

விச்வ யோனி: என்பது நரசிம்ஹனுக்குச் சொல்லப்பட்ட திருநாமம். "விச்வமாகதா" என்பது வாமன அவதாரத்திலே சொல்லப்பட்டது.
விச்வ மூர்த்தி: எல்லார் நலத்தையும் தன் நலனாகக் கருதக்கூடியவன் இஷ்வாகு வம்ச திலகனான ராமபிரான் என்பது ஸ்பஷ்டமாகத் தெரிகிறது.
தசரதன் அசுவமேத யாகம் முடித்து, புத்திர காமேஷ்டி யாகம் நடத்தப் போகிறான். எல்லா தேவதைகளும் பாகத்தை வாங்கிக் கொள்வதற்காக வந்திருக்கிறார்கள். எல்லா தேவதைகளும் நிற்கிற இடத்திலே பகவான் கரூடா ரூபனாக, சங்கு சக்ரதாரியாக ஆச்சரியமாய்த் தோன்றினான். இதை வேதம் எப்படிச் சொல்கிறது என்றால், "எல்லா தேவதைகளையும் அங்கங்களாக உடைய பரமாத்மா, அவர்களின் இடையிலேயே தோன்றினான்" என்கிறது.
தோன்றியவன் என்ன பேசினான்? "சமஸ்த தேவதைகளும் எம் திருவடியிலே சரணாகதி பண்ணினார்கள். அவர்களை ரட்சிப்பதற்காக நான் இந்த பூலோகத்திலே வாசம் பண்ணப் போகிறேன். பதினோராயிரம் வருஷ காலம் பூலோகத்திலே இருக்கப் போகிறேன். நீங்கள் துக்கத்தை விடுங்கள். ராவணனை ஹதம் பண்ணப்போகிறேன்" என்று அபயம் சொல்லி, தசரதனைத் தந்தையாக வரித்து ராமனாக வந்து பிறந்தான்.
இந்த விஷயம் ராமாயணத்திலே ஒளிவு மறைவு இன்றி ஸ்பஷ்டமாகச் சொல்லப்பட்டிருப்பதினாலே, நாராயணன்தான் ராமனாகப் பிறந்தான் என்பது சந்தேகமற்ற உண்மை. இதை விச்வாமித்திரர் மேலும் ஸ்பஷ்டப்படுத்துகிறார். தசரதனிடம் சொல்லும்போது, "புருஷ சூக்த தேவதை உன் பிள்ளை: அதை நான் உணர்ந்திருக்கிறேன். ஆனால் நீ உணரவில்லை" என்று எடுத்துச் சொல்கிறார். அதற்குப் பிற்பாடு, பரசுராமரின் கர்வ பங்கத்தின்போது, நாராயணனே ஸ்ரீராமனாக அவதரித்தான் என்பது இன்னும் தெளிவாகிறது.
பாலகாண்டம் முடிந்து பரசுராம கர்வ பங்கம் ஆனதுமே... ராமாயணம் முடிந்து போய்விடுகிறது! அதற்கு மேலே சொல்லப்பட்டதெல்லாம் பகவான் "பதினோராயிரம் வருஷம் இருப்பேன்" என்று சொன்னான் அல்லவா.. அவனுடைய அந்த வாக்குக்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சியே தவிர வேறில்லை.
பரசுராம கர்வ பங்கத்திலேயே ராமாயணம் முடிந்து போவது எப்படி...?
தட்ச யக்ஞத்தை துவம்சம் பண்ணியவர் பரமசிவன். அவரிடத்திலே அத்யந்த பக்தி கொண்ட ராவணன் என்ன பண்ணினான்? அந்த பரமசிவன் எழுந்தருளியிருக்கிற போதே அந்த கைலாச பர்வதத்தைத் தூக்கி ஒரு ஆட்டு ஆட்டினான்! ராவணனுடைய பலம் அத்தனை பலம்! அஷ்ட திக்கணங்களின் தந்தங்களைத் தன் மார்பிலே தாங்கியவன் அவன். குபேரனை ஜெயித்து அவனுடைய புஷ்பக விமானத்திலே வந்து கொண்டிருக்கிறான்.
மாஹிஷ்மதி என்கிற பட்டணத்துக்கு அதிபதியான கார்த்த வீர்யார்ஜுனன் அந்த சமயத்திலே நர்மதை நதியிலே ஸ்நானம் செய்து கொண்டிருக்கிறான். தன் எல்லையில் ஒருவன் வருவதைப் பார்த்து ஒரு எகிறு எகிறி புஷ்பக விமானத்தில் குதிக்கிறான். குதித்து விட்டு பார்த்தால் பத்துத் தலை ராவணன்!
இந்த கார்த்தவீர்யார்ஜுனன் என்ன பண்ணினான்? கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையிலே அந்தப் பத்துத் தலைகளையும் அப்படியே ஒரு பிடி பிடித்தான். குழந்தைகள் தும்பியைப் பிடிப்பது போல, பிடித்த வாக்கில் அப்படியே தூக்கிப்போய் தன் ஊரில் சிறைவைத்து விட்டான்! கொஞ்ச நாள் கழித்து, பிழைத்துப் போ! என்று ராவணனை வெளியே விட்டு விட்டான் கார்த்தவீர்யார்ஜுனன். இல்லாவிட்டால் ராவணன் வெளியே வந்திருக்க முடியுமா?
அஷ்ட திக்கணங்களை வென்றவன், கைலாச பர்வதத்தை அசைத்தவன் ராவணன் என்றால், அவன் பலத்தை என்ன சொல்வது. அத்தகைய ராவணனையே விரல் நுனியில் பிடித்துப் போனான் கார்த்தவீர்யார்ஜுனன் என்றால் அவன் பலம்தான் எத்தகையதாய் இருக்க வேண்டும்! அந்த கார்த்தவீர்யார்ஜுனனின் இருப்பிடம் என்று தெரியாமல் பரசுராமர் அடித்து நொறுக்கினார். அப்படியானால் அவருடைய பலம், முதல் இருவர் பலத்தைக் காட்டிலும் அதிகமில்லையா...?
அப்படிப்பட்ட பரசுராமரை பன்னிரண்டு வயதேயான பாலகன் ராமன் அடக்கி ஆள்கிறான் என்றால்... ராவணனை ஜெயித்தவனை, ஜெயித்தவனை, ஜெயித்து நிற்கிறான் என்றால், அப்போதே, அந்த கணத்திலேயே அவதார பலன் கிடைத்து விடுகிறதல்லவா? ராவண வதத்துக்காகத்தான் ராமாவதாரம் என்று யாராவது சொன்னால் அது இந்தக் கட்டத்திலேயே முடிந்து போகிறதல்லவா!
(தொடரும்) ...

No comments:
Post a Comment