குறையொன்றுமில்லை
(முதல் பாகம்)
அத்தியாயம் 26
ஓலைப் பெட்டியில் இருந்த பூணூலை எடுத்து, மந்திரத்தைச் சொல்லி தராசுத் தட்டில் வைத்தார் அந்த ஏழை பிராமணர்.
"இந்த பூணூல் அப்படி என்ன எடை இருந்து விடப்போகிறது? பாவம் இது கூடத் தெரியாமல் இவர் அதன் எடைக்கு நிகராகப் பொருள் கொடுத்தால் போதும் என்கிறாரே" என்று மனத்துக்குள் எண்ணிக் கொண்டான் ராஜா.
ஒரு காசை எடுத்துத் தட்டிலே போட்டான். அந்தத் தட்டு கூடத் தாழவேயில்லை! இரண்டு காசுகள் போட்டான்... பத்து... எவ்வளவு போட்ட போதும் அசையாமல் நின்றது. தன்னுடைய ஆபரணங்கள் அனைத்தையும் கொண்டு வரச் சொல்லி பூணூலுக்கு நிகராக எடை போட்டுப் பார்த்தான். அப்போதும் அதன் இணையை எட்ட முடியவில்லை. இரத்தின கிரீடத்தை எடுத்து வைத்தான். "என்னிடம் இருக்கிற மொத்தத்தையும் எடுத்து வச்சுட்டேன்" என்கிறான்.
உடனே அந்த நாட்டின் மந்திரி போய், ராஜாவின் காதோடு சொன்னான்; "அவசரப்பட வேண்டாம்! இந்த பிராமணரை வீட்டுக்கு அனுப்பிவிட்டு நாளைக்குத் திரும்பவும் வரச் சொல்லுங்கள்..."
ராஜாவும் அந்த உத்தமரைப் பார்த்து, "நீங்கள் நாளைக்கு வந்தால் இந்த நூலுக்கு நிகரான எடையில் செல்வத்தைத் தருகிறேன்" என்றான்.
பிராமணர் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை நடுங்கிக் கொண்டிருந்தார். "இப்படி பூணூல் எடைக்கு மேல் வாங்கிக்கலை என்று சொல்லி விபரீதத்திலே மாட்டிக் கொண்டோமே" என்று அவருக்கு ஒரே பயம்.
அந்த பயத்துடனேயே புறப்பட்டுப் போனவர் மறுநாள், "சிரச்சேதம் பண்ணி விடுவானோ அரசன்...? என்கிற பயத்துடனேயே திரும்பி வந்தார்.
தராசு கொண்டு வரப்பட்டது. பூணூலை வைத்தார் அந்தணர். ராஜ ஒரு காசை எடுத்துப் போட்டான். உடனே பூணூல் தட்டு மேலே போய் விட்டது.
"அதே நூல்தான், அதே தராசுதான். பிறகெப்படி இந்த அதிசயம் நடந்தது? நேற்று வேறு மாதிரி அல்லவா நடந்தது? ராஜ மந்திரியை அழைத்து தன் சந்தேகத்தைக் கேட்டான்.
மந்திரி அதற்கு விளக்கம் சொன்னான்.
நேற்று அவர் கொண்டு வந்தது யக்ஜோபவீதம். யக்ஜோபவீதம் பரமம் பவித்ரம்னு சொல்வதுண்டு. மிகவும் புனிதமானது அது. அதற்கு நிறை காண முயல்வதே தப்பு. நமக்கெல்லாம் ஆத்மா என்று பெயர். பகவானை மட்டும் பரமாத்மா என்று "பரம" - "உத்தமமான" என்கிற அடை மொழி சொல்லி அழைக்கிறோம். அதே அடைமொழி இந்த யக்ஜோபவீதத்துக்கும் சொல்லப்படுகிறது. அவ்வளவு பவித்ரமானதாக அது இருந்ததினாலேதான் ராஜ்யத்தையே எடை கொண்டது. ஆனால் இன்றைக்கு அதனுடைய பவித்ரம் போய் விட்டது. அதனாலே சுலபமாக அதை எடை போட்டு விட்டோம்.
"ஏன் போனது அதனுடைய பவித்ரம்" என்று கேட்டான் அரசன்.
"பூணூலைத் திரிப்பவர்கள் (தரிப்பவர்களும்) நியமங்களில் இருந்து தவறவே கூடாது. ஆனால், இந்தப் பெரியவர் தமது பயம் காரணமாக இன்றைக்கு அந்த நியமங்களைச் செய்யவில்லை. அதனாலே தான் அதன் பவித்ரம் போனது"
நியமமாகச் செய்யப்படும் பூணூலின் மகிமையைச் சொல்வது இந்தக் கதை. சர்வமேன்மை பொருந்திய பரம பவித்ரமான யக்ஜோபவீதம் பகவானுக்கு வாமன அவதாரத்தின் போது அணிவிக்கப்பட்டது. சூரியனே அவருக்குப் பிரம்மோபதேசம் பண்ணினார் என்று சொன்னேனில்லையா...? பார்வதி தேவி வந்து அவருக்கு முதல் பிட்சை இடுகிறாள். பலாச தண்டத்தை பகவானின் கையிலே தருகிறார்கள்.
பலாச தண்டம் என்பது என்ன...? தண்டம் என்பது சந்நியாசிகளின் கரத்தில் கொடுக்கப்படும் கோல். உபநயன காலத்தில் பலாச மரத்தின் கிளையை இப்படி 'வடு'வின் கையில் கொடுப்பதுண்டு.
ஏன் பலாச மரத்தின் கிளையைக் கொடுக்க வேண்டும்? வேறு மரத்தின் கிளையைக் கொடுத்தால் என்ன என்று கேட்டால் அதற்கு ஒரு விளக்கம் இருக்கிறது.
வேத வித்துக்கள் பலர் ஒரு சமயம் பாலச மரத்தடியில் கூடினார்கள். அங்கே அமர்ந்தபடி காயத்ரி மந்திரத்தை ஓதி அதன் மகிமையைப் பேசினார்கள். இதைக் கேட்டுக் கொண்டே இருந்த பலாச மரத்தின் வட்டமான இலைகள் மூன்று மூன்று கூறுகளை உடைய இலைகளாக வடிவத்தில் மாறிவிட்டன. காயத்ரி மந்திரத்தில் மூன்று பாகங்கள் உண்டு. அந்த மந்திரத்தைக் கேட்டதும் அதன் மூன்று பாகங்களையும் தன் இழையிலேயே காட்டியது பலாச மரம்! அதனால்தான் பலாச தண்டத்தைக் கொடுக்கும் வழக்கம் உண்டாயிற்று.
"மாயா வாமனனே மதுசூத நீயருள்வாய்" என்று "வாமனனையும், மாயனை மன்னு வடமதுரை மைந்தனை" என்று கண்ணனையும் பாடுகிறார்கள் ஆழ்வார்கள்.
இப்படிப்பட்ட மாயன்தான் மூவுலகளந்த திரிவிக்கிரமனாய் விச்வரூபம் எடுக்கவிருக்கிறான்.
விச்வ சப்தத்துக்குரிய இந்த மாயன், நர்மதா நதி தீரத்திலே, பிரஹலாதனுடைய பேரனான பலி சக்ரவர்த்தி செய்த அசுவமேத யாகத்துக்கு வருகிறான்.
யக்ஞ சம்ரக்ஷகன் அந்த பரமாத்மா. சிரார்த்த சம்ரக்ஷகன் என்றும் அவனைச் சொல்வதுண்டு. சிரார்த்தம் பண்ணும்போது ஸ்ரீ மகாவிஷ்ணும் ஆவாஹயாமி என்று அவனை ஆவாஹனம் பண்ணுகிறோம். எனவே அவன் சிரார்த்த சம்ரக்ஷகன் ஆகிறான்.
சிரார்த்த சம்ரக்ஷகனாக மட்டுமா - அவன் இருக்கிறான்? எல்லாவற்றுக்கும் சம்ரக்ஷகன் அவன்தான் சர்வதா ரக்ஷகன். எப்போதும் ரக்ஷிக்கிறவன். சர்வத்ர ரக்ஷகன் - எங்கும் ரக்ஷிக்கிறவன்!
இதை உணர்த்த வேடிக்கைக் கதை ஒன்று சொல்வார்கள். ஒருத்தர் மாதம் 25ஆம் தேதி வரைக்கும் எப்படியோ குடும்பத்தை நடத்தி விட்டார்; "அடுத்த ஆறு நாளைக்கு பகவான் எப்படியாவது நடத்திக் குடுத்துட்டான்னா, 1ஆம் தேதி எனக்கொரு பத்தாயிரம் ரூபாய் பணம் வரும். அடுத்த மாசம் பரவாயில்ல; சமாளிப்பேன்" என்றார் அவர்.
25தேதி வரை இவர் நடத்தி விட்டாராம் குடும்பத்தை! மேல் வருகிற ஆறு நாட்களுக்குத்தான் பகவானுடைய சகாயம் வேண்டுமாம்! அடுத்த மாதம் பத்தாயிரம் நம்மை ரட்சிக்கும் என்கிறார். எத்தனை வித ரக்ஷணம் பாருங்கள்...! திரவிய ரக்ஷணம். இவரே ஒரு ரக்ஷகர். அப்புறம் பரமாத்மா...? சும்மா இடையிலே ஆறு நாட்களுக்கு ரக்ஷித்தால் போதுமாம்.
இது நம்மிடத்திலே இருக்கிற அவிவேகத்தினாலே வரும்படியான சொல்! உண்மையில் பகவான்தான் சர்வதா ரக்ஷகன். அவன் ரக்ஷிக்கிறதில்லை என்று நாம் நினைக்கலாமா...? நினைக்கத்தான் முடியுமா? அவன் தான் நம்மை எப்போதும் ரக்ஷித்துக் கொண்டிருக்கிறான் என்பதைப் பூரணமாக உணர வேண்டும்.
பராசர பட்டர் ஸ்ரீரங்கத்திலே உபன்யாசம் பண்ணுகிறார் - பகவானை ரக்ஷகன் ரக்ஷகன் என்று சொல்லிக் கொண்டேயிருக்கிறார். உபன்யாசம் கேட்கிற கோஷ்டியிலே ஒருத்தர் எழுந்தார்: "வெறுமனே ரக்ஷகன் ரக்ஷகன் என்று சொல்லி விட்டால் போதுமா? புத்தகத்திலே இருக்கற பிரமாணத்தைக் காண்பித்தால் போதுமா? எங்கே பகவான் நம்மை ரக்ஷிக்கிறான்? அப்படி அவன் ரக்ஷிப்பதாகத் தெரியவில்லையே. நானல்லவா அவஸ்தைப்படுகிறேன் என் குடும்பத்தை ரட்சிக்க! ஓடி ஓடி உழைத்தாலும் பொழுது போதவில்லையே... பகவான்தான் ரக்ஷிக்கிறான் என்று சொன்னால் எப்படி சுவாமி பொருந்தும்?"
"அப்போ பகவான் உன்னை ரக்ஷிக்கலை என்கிறாயா" கேட்டார் பட்டர்.
"ரக்ஷிக்கிறதாகத் தெரியலை. படர அவஸ்தை மொத்தமும் நான்தான்"
பார்த்தார் பட்டர். "இதுக்கான பதிலை நாளைக்குச் சொல்கிறேன். காலையில் 10 மணிக்கு என் கிரஹத்துக்கு வாரும்" என்று சொல்லி அனுப்பி விட்டார்.
பராசர பட்டர் ரங்கநாதர் கோயில் புரோஹிதர். கோயில் காரியங்களை முடித்துக் கொண்டு 10 மணிக்கு பட்டர் தனது திருமாளிகைக்கு வந்தார். கேள்வி கேட்டவரும் சரியாக வந்து விட்டார்.
பட்டர் கேட்டார்: "ராத்திரி நன்றாகச் சாப்பிட்டீரா?"
"சாப்பிட்டேன் "
"நன்றாக தூங்கினீரா"?
"தூங்கினேன்".
"எத்தனை மணிக்குப் படுத்தீர்"?
"9 மணிக்கு"
"எத்தனை மணிக்கு தூக்கம் வந்தது"?
"ஒரு ஒன்பதரை மணியிருக்கும்".
"எப்போது வழக்கமாய் எழுந்திருப்பீர் "?
"காலை நாலரை மணிக்கு"
"ராத்திரி ஒன்பதரை மணிக்கப்புறம் உம்மை நீர் உணர்வீரா"?
"தூக்கத்திலே யார்தான் உணர்வார்கள்"?
"இரவு ஒன்பதரையில் இருந்து பிராதஹ் காலம் நாலரை மணி வரைக்கும் உம்மை நீரே தான் ரக்ஷித்துக் கொள்கிறீரா"?
"தூங்கும்போது எப்படி ரக்ஷித்துக் கொள்ள முடியும்"?
"தூங்கும்போது, நாம் படுத்திருக்கும் பவனமே இடிந்து நம் மீது விழலாம். துஷ்ட ஜந்துக்கள், விஷ ஜந்துக்கள் வந்து கடிக்கலாம். இதில் இருந்து எல்லாம் நம்மைக் காப்பாற்றி அந்த பரமாத்மா ரட்சிக்கவில்லையா? இவ்வாறு தூக்கத்திலே ரக்ஷிப்பவன் விழிப்பின் போதும் ரக்ஷிப்பான் என்று தெரியவில்லையா"? என்று கேட்டார் பராசர பட்டர்.
(தொடரும்)