குறையொன்றுமில்லை
(முதல்
பாகம்)
அத்தியாயம் 15
அத்தியாயம் 15
அவதாரங்கள் எல்லாம் முடிந்து பரமாத்மா ஆனந்தமாக வைகுண்டத்திலே
உட்கார்ந்திருக்கார். தேவர்கள், முனிவர்கள் சூழ, பெரிய சதஸ் அங்கே...
அப்படிப் பல நாள் உட்கார்ந்திருந்தவர் பூமியைப் பார்க்கிறார். பூமியைப்
பார்த்ததும் அவருக்கு வருத்தம் வந்ததாம். ஏனென்றால் அவ்வளவு
அக்கிரமங்கள் அங்கே நடந்து கொண்டிருந்தன!
"கிருஷ்ணாவதாரம் பண்ணினோமே. அப்போ கீதையைச் சொல்லிவிட்டு வந்தோமே. அதைச் சொல்லிவிட்டு வந்த பிற்பாடு கூட இன்னமும் உலகத்திலே அக்கிரமம் நடந்து கொண்டிருக்கிறதே... அப்படியென்றால் நாம் சொன்ன கீதை பிரயோஜனமில்லாமல் அல்லவா போய் விட்டது" என்று ரொம்ப வருத்தம் பரமாத்மாவுக்கு.
"நாம் சொன்னது போதவில்லை போலிருக்கிறது. நம் வாக்கு சரியில்லை போலும்; அதனாலே வேறு வாக்கைக் கொண்டு அதே கருத்தை உலகத்துக்கு தெரிவிக்க வேண்டும்" என்று முடிவு செய்தான்.
பக்கத்தில் இருக்கும் மகாலக்ஷ்மியைப் பார்த்துச் சொன்னான்! "லக்ஷ்மி! நீ போய் பூலோகத்திலே பிறந்து, கீதையிலே நான் என்ன சொல்லி உபதேசம் செய்தேனோ, அதையே சொல்லித் திருத்தக் கடவாய்" என்றான்.
பூலோகத்திலே அவதாரம் பண்ணின காலத்திலே மகாலக்ஷ்மியாலே பகவானை ஒன்றும் தட்டிக் கேட்க முடியல்லையாம். இப்போது, வைகுண்டத்திலே, பகவான், லக்ஷ்மியினிடத்திலே ஏகாந்தத்திலே அகப்பட்டுக் கொண்டு விட்டான்! நினத்ததை எல்லாம் கேட்க அவளுக்கு ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது. கேட்கலானாள்:
"என்ன அக்கிரமம்! என்னைப் போய் அவதரிக்க சொல்லுகிறீர்களே, இது நியாயமா? உங்களோடு கூட வந்தபோதே எனக்குக் கௌரவம் இல்லை. இன்னும் தனியாக வேறு போகச் சொல்லுகிறீர்களே.. இது நியாயமா? ராமாவதாரத்திலே உங்கள் கூட வந்தேன். எங்கேயாவது சுகம் என்பது எனக்கு அதில் இருந்ததா? அயோத்தியிலே கொஞ்சம் நாள் இருந்தது போல் தோன்றுகிறது. அதற்கப்புறம் ரொம்ப சிரமம், காட்டிலே வாழ்ந்து. இதெல்லாம் போகட்டும் என்றால் காமாசுரன் ராவணன் என்னைக் கண்டவாறு பேசினான். அதைக் கூட சகித்துக் கொள்ளலாம் போலாக்கி விட்டது உங்கள் செயல். அத்தனை பேர் நடுவிலே என்னை நிறுத்தி மேலே தேவதைகள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே... என்னைக் கொண்டு வந்து நிறுத்தி நீங்கள் பேசினீர்களே, அதை நினைத்தால் தான் துக்கம் தாளாமல் போகிறது..."
அக்னிப் பிரவேசத்தைப் பற்றித்தான் இவ்வாறு பேசினாலள் மகாலட்சுமி. அக்னியை மூட்டச் சொல்லி லக்ஷ்மணனுக்கு சீதா தேவி கட்டளை பிறப்பித்தபோது, அவன் அண்ணாவின் முகத்தை அனுமதி தேடி நோக்கினானாம். அப்போது ராமன் வாய் திறந்து கூடப் பேசாமல் புருவத்தை நெறித்தே அதற்குப் பதில் சொன்னாராம்!
அக்னி பிரவேசம் முடிந்து வைதேகியை வெளியிலே எடுத்து வந்த பிற்பாடு, "என் சீதை ரொம்ப நல்லவள். இந்த உலகத்துக்காகத்தான் அவளை அப்படி அக்னிப் பிரவேசம் பண்ண வைத்தேன்" என்று ராமன் சொன்னதை நினைவூட்டி இப்போது மகாலட்சுமி பேசுகிறாள்.
"காமாதுரன் ராவணன் பேசியது இருக்கட்டும். அன்று நீங்கள் என்னை அத்தனை பாடுபடுத்தி, அவ்வளவு தூரம் பரீட்சை பண்ணிய பிறகும் நிறைமாத கர்ப்பிணியாக என்னைத் தனியே காட்டிலே விட்டு விட்டீர்களே! நான் மற்றவர்களால் பட்டதை விடவும் உங்களால் பட்டதே அதிக அவஸ்தை"
பகவான் பார்த்தான். மகாலட்சுமி இன்னமும் நிறுத்திக்கிற வழியாக இல்லை. ஒரு கமா(,) போட்டு... அப்படி இலேசாக நிறுத்தியிருக்கிறாள் என்று புரிந்து கொண்டான். அடுத்து என்ன சொல்லப் போகிறாள் என்று பார்த்தான். அதற்கப்புறம் ஏகமாக துக்கம் வந்து விட்டதாம் லக்ஷ்மிக்கு.
"இந்த ராமாவதாரமே பரவாயில்லை போலிருக்கிறது, அதற்கடுத்த அவதாரத்தை நினைத்துப் பார்க்கும் போது".. என்று மீண்டும் பேச ஆரம்பித்தாள்.
அவளுடைய இந்த பேச்சுக்கு என்ன அர்த்தம் என்பது போல் பகவான், கண்களை அகல விரித்துப் பார்க்கிறான்!
"ராமாவதாரத்திலே நீங்கள் எனக்குத்தான் என்று இருந்தது. கிருஷ்ணாவதாரத்திலே அதுவும் போய் விட்டது. அதிலும் அந்த சத்யபாமா இருந்தாளே... எத்தனையோ பேர் உங்கள் மேல் பிரேமை கொண்டிருந்தாலும் உங்களைத் தன் முந்தானையிலே முடிச்சுப் போட்டு வைத்துக் கொள்ளணும் என்று எண்ணம் அவளுக்கு! இந்த சத்யபாமாவோடு ஒவ்வொரு விஷயத்துக்கும் நான் போராடிப் போராடி... உங்களை என் கிரஹத்துக்கு அழைத்துக் கொண்டு வருவதற்குள் நான் பட்டபாடு..."
அந்த ருக்மிணி...சத்யபாமா கதையைக் கொஞ்சம் பார்ப்போம்:
நாரத மகரிஷி வீணையை வாசித்துக் கொண்டு ருக்மிணியின் கிரஹத்துக்கு வந்து விட்டார். ருக்மிணி துளசி பூஜை பண்ணியபடி இருந்தாள். "ருக்மிணி! நீ இப்படி இருக்கிறாயே. உலகத்திலே உன்னைப் போல் ஓர் அபலை உண்டா? என்று கேட்டார் நாரதர்.
"சுவாமி, என்ன சொல்லுகிறீர்கள்?"
நாளைக்கு ஒரு நாளாவது உன் பர்த்தாவை அழைத்துக் கொண்டு வந்து உன் கிரஹத்திலே இருக்க செய்ய வேண்டாமா நீ? இப்படி நீ அவனை நாளைய தினத்துக்காகவாவது அழையாமல் இருப்பது நியாயமா?" என்று கேட்டார் நாரதர்.
"நாளைக்கு என்ன சுவாமி?" வியப்புடன் கேட்டாள் ருக்மிணி.
"இது கூட தெரியாமல் இருக்கியே! என்னை மாதிரி ஒருத்தர் உனக்கு எடுத்துச் சொல்லாமல் இருந்தால் என்னவாகியிருக்கும்! நாளைக்கு உன் பிறந்த நாள் அல்லவா? அன்றைய தினம் பர்த்தா கூட இருக்க வேண்டாமா? நாளைக்குக் கூடவா சத்யபாமா கிரஹத்திலே அவன் இருக்கிறது"
"நாரத கலஹப்ரிய" என்று நாரதரைப் பற்றி வசனம் சொல்வதுண்டு. கலகம் செய்வதிலே நாட்டம் உடையவன் என்று அர்த்தம். அவர் தமக்குப் பிரியமான வேலையைச் செய்து விட்டார்.
"உடனே ருக்மிணி, "இப்பவே போய் பகவானை அழைச்சுண்டு வந்துடறேன்" என்று புறப்பட்டாள். வேத கோஷங்களும் வாத்திய கோஷங்களும் சூழ பகவானை அழைக்க அவள் போகிறாள்.
ருக்மிணி போய் சேர்வதற்குள் நாரதார் சத்யபாமாவினுடிய கிரகுஅத்துக்குப் புறப்பட்டுப் போய் விட்டார். அங்கே சத்யபாமாவைப் பார்த்து, "உன்னைப் போலே ஓர் அபலை உண்டா?" என்றார்.
"ஏன் சுவாமி அப்படி சொல்லுகிறீர்கள்" என்றாள் சத்யபாமா.
"இந்த ருக்மிணிக்கு உன் பேரில் ரொம்ப அசூயை. வேண்டுமென்றே நாளைக்கு நாள் பார்த்து அந்த கிருஷ்ணனை உன்னிடத்திலேயிருந்து பிரிக்க வேண்டுமென்று அவள் வந்து கொண்டிருக்கிறாள். நாளைக்கு உன் புருஷன் அவசியம் உன்னோடு இருக்க வேண்டாமா?"
"நாளைக்கு என்ன சிறப்பு சுவாமி?" வியப்புடன் கேட்டாள் ருக்மிணி.
"இது கூடத் தெரியாமல் இருக்கிறாயே. நீ கல்யாணம் பண்ணிக் கொண்ட நாள் அல்லவா .. அன்றைக்கு நீ பர்த்தாவோடு இருக்க வேண்டாமா? அந்த நாளைக் கொண்டாட வேண்டாமா?"
"அந்த நாளைக் கொண்டாடணும்னு உண்டா சுவாமி?"
"அப்படி வழக்கம் இல்லாமப் போனால்தான் என்ன.. நீ தான் அதை ஆரம்பித்து வையேன்" என்றார் நாரதர். ஆகையினாலே அன்னைக்கு ஆரம்பித்தது இன்னைக்கும் நடக்கிறது.
"சரி" என்றாள், சத்யபாமா.
அந்த நேரம் பார்த்து ருக்மிணி அங்கே வந்தால் அவளைப் பார்த்து விட்ட சத்யபாமா உள்ளே போய்விட்டாள். உள்ளே கிருஷ்ணன் படுத்திருக்கிறான். பாமா போய் பகவானின் கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். "வாய் திறந்து பேசவே கூடாது" என்று அவனுக்குக் கட்டளை போட்டுவிட்டாள்.
ருக்மிணி பகவானைப் பிரதட்சணம் பண்ணி வந்து நமஸ்காரம் பண்ணினாள். தன் வேண்டுகோளைச் சொன்னாள். பேசவே முடியலையாம் பகவானுக்கு! இப்படியும் பேச முடியலை.. வரேன் என்று சொல்ல முடியவில்லை; போக மாட்டேன் என்றும் சொல்ல முடியல.. அங்கேயும் பேச முடியவில்லை.
வேதாந்த விஷயங்களை எல்லாம் ஏதோ கேலி பேச்சு பேசுகிற மாதிரி இலகுவாகப் பேசிய பரமாத்மா, அவ்வளவு உபநிஷத் விஷயங்களையும் கீதையாகக் கொட்டிய பரமாத்மா, பேச்சடைத்து நிற்கிறாராம். பதில் சொல்ல முடியாமல் அவஸ்தைப் படுகிறாராம்.
இந்தக் காட்சியைத் தொலைவிலிருந்து பார்த்தபடி நாரதர் கைகூப்புகிறார். ஏனெனில் வைகுண்டத்துக்குப் போனால் இந்த காட்சியெல்லாம் பார்க்க முடியாது. அங்கே பகவான் சுவாமியாக.. மகாவிஷ்ணுவாக அல்லவா உட்கார்ந்திருப்பார். இந்த மாதிரி லீலைகள் எல்லாம் காணக் கிடைக்காதே அங்கே. எனவே அந்த லீலையைப் பார்த்து, நாரதர் கைகூப்பி ஆனந்தித்து சேவிக்கிறார்.
புளாங்கிதமாய் நின்ற நாரதரை பகவான் பார்த்தார். ரொம்பக் கோபம் வந்துவிட்டது அவருக்கு. இவ்வளவு தூரம் சிண்டு முடியும் வேலையைச் செய்துவிட்டு சேவித்தபடி நிற்கிறாரே என்று கோபம். அவரையே பிரச்னைக்குத் தீர்வு கேட்போம் என்று முடிவு செய்து கேட்டார்.
"நாரதரே, பிறந்த நாள் அன்று தன்னுடன் இருக்க வேண்டுமென்று விதர்ப்ப தேசத்து ராஜகுமாரி ருக்மிணி சொல்கிறாள் நாளைக்குத் திருமண நாள், என்னுடன் இருங்கள், என்று என் சத்யபாமா சொல்கிறாள். இப்போ நான் எங்கே போகட்டும்? அங்கேயா? இங்கேயா? இவ்வளவுக்கும் காரணமாயிருந்த நீரே பதில் சொல்லும்" என்றார்.
அதற்கு நாரதர் சொன்னார், "இந்தச் சண்டையை எல்லாம் என்னால் தீர்த்து வைக்க முடியாது. ஒரு மனைவி கணவனுக்குள்ளே சண்டையென்றாலும் பரவாயில்லை.. அதுவோ பல மனைவி தகராறு. என்னைப் பார்த்துக் கேட்கிறாயே கிருஷ்ணா. உலகத்திலே எனக்கு இந்த விஷயம் பற்றி ஏதாவது அனுபவம் உண்டா?" என்றார்.
அந்தக் கட்டத்தில் பகவான் பட்ட அவஸ்தையை சொல்லி முடியாது. எப்படியோ சத்யபாமாவை வஞ்சித்து விட்டு, ஒருத்தருக்கும் தெரியாமல் வீட்டை விட்டுக் கிளம்பிப் போகிறான்.
இந்த வரலாறை எல்லாம் (ராமவதாரம் கிருஷ்ணாவதாரம்) நினைவுப்படுத்தி பகவானுக்குச் சொன்னாளாம் மகாலட்சுமி. சொல்லி விட்டு, "இவ்வளவு கஷ்டங்கள் நான் ஏற்கெனவே பட்டது போதாதா? என்னைப் போய் திரும்பவும் அவதாரம் பண்ணச் சொல்கிறீர்களா; அதுவும் தனியாக! நான் போக மாட்டேன்" என்று மறுத்து விட்டாளாம் மகாலட்சுமி.
மகாலட்சுமி சொன்ன சரித்திரத்தை எல்லாம் கேட்டு வைகுண்டத்தில் இருந்தவர்கள் ஆனந்தித்தார்களாம். அவள் வாக்கில் இருந்து வருபவை எத்தனை ஆனந்தம் அளிக்கும்.
ஆனால், பகவானுக்குத் தன் காரியம் ஆகவேண்டும் இல்லையா.. அவன் இப்படித் திரும்பியிருந்த பார்வையை அப்படித் திருப்பி பூமித் தாயாரை நோக்கினான். மகாலக்ஷ்மியிடம் சொன்னதை அப்படியே அவளிடம் சொன்னான். அவள் பதில் வேறு விதமாய் இருந்தது.
தொடரும்...

No comments:
Post a Comment