குறையொன்றுமில்லை (முதல் பாகம்)
அத்தியாயம் - 36
அத்தியாயம் - 36
தர்ம சப்தத்தினாலே சொல்லப்படக்கூடியவன் பரமாத்மா. அவன் நடத்திக் காட்டினதெல்லாம் தர்மம் தான். மனிதனாகப் பிறந்த நாம் பின்பற்ற வேண்டிய கடமை என்ன என்பதை பரமாத்மா ராமாவதாரத்திலே காட்டியருளினான்.
ஸ்ரீமத் பாகவதத்தில், சுகப்ரும்ம மகரிஷி இதை விளக்கிச் சொல்லியிருக்கிறார். பரீட்சித்தைப் பார்த்து அவர் இதைப் பேசியிருக்கிறார்.
மனிதனாக ராமன் பிறந்தான் என்று கதை கேட்கும்போது, ராட்சஸ வதைக்காகத்தான் அப்படி அவதரித்தான்; ராவணனை வதைக்கவே அந்த அவதாரம் என்று எண்ணிக்கொள்கிறோம்.
அது மாத்திரமே காரணம் இல்லை. ராட்சஸ வதை என்பது ஒரு வியாஜம். முக்கிய குறிக்கோள் என்னவென்றால்:
மனிதர்களை காப்பதற்காக! மனிதருடைய கடமை என்ன? ஒரு தந்தையாக இருக்கக்கூடியவர் எப்படி இருக்க வேண்டும்? தாயாராய் இருக்கக்கூடியவர் எப்படி இருக்க வேண்டும்? புத்ரனாய் இருக்கக்கூடியவனின் கடமை என்ன? அதிலே ஜேஷ்டபுத்திரனின் கடமை என்ன? இளையவர்களாக இருக்கக்கூடியவர்களின் கடமை என்ன? பந்து மித்திரர்களிடத்திலே நாம் எப்படி இருக்க வேண்டும்? விரோதிகளிடத்திலே எப்படிப் பழக வேண்டும்? இந்த பூம்னியில் நாம் எப்படி வாழ வேண்டும்? சம தர்மம் என்றால் என்னது?... இப்படி எல்லாவற்றையும் காட்டி, நாம் செய்ய வேண்டியதைச் செய்து முடித்தோமா என்று யோசிக்க வைக்கிறான்.
திருமலையிலே, பெரிய திருமலை நம்பிகள் என்ற ஆசார்யர் எழுந்தருளியிருந்தார். ராமானுஜருடைய சொந்த மாமா அவர். பஞ்சாசார்ய பதாச்ராயர் என்று இராமானுஜருக்குப் பெயர். ஐந்து ஆசார்யர்களை அணுகி ஒவ்வொருத்தரிடம் ஒவ்வொரு வித்தையை அப்யசித்தார்.
அந்தக் காலத்தில் வித்வான்கள் மிகவும் சிரமப் பட்டு அப்யாசம் செய்தார்கள். இந்த காலத்தில் அவ்வளவு சிரமம் இல்லை. ஏனென்றால், எங்கும் கல்விக்கூடங்கள் நிறைந்திருக்கின்றன. படிக்க வாய்ப்பு உள்ளது. முன் காலத்தில் அப்படி இல்லையே...!
அஹோபில மடத்தில் இஞ்சிமேட்டு ஸ்ரீ அழகிய சிங்கர், காசி வரை நடந்தே சென்று தர்க்கம் பயின்று வந்தார்! எத்தனை சிரமப்பட்டிருக்கிறார் பாருங்கள்! அந்த சிரமம் பிறர் படக்கூடாது என்றுதான் மதுராந்தகத்தில் பாடசாலையை நிறுவப் பண்ணி தர்க்கம் சொல்லிக் கொடுக்க வைத்தார்.
ராமானுஜருக்குத் திரும்பி வருவோம்.. மாமாவான பெரிய திருமலை நம்பியிடத்திலே ராமாயணம் கேட்கணும் என்று ஆசைப்பட்டாரல்லவா? திருமலை ஏறிப் பொய் அவரைப் பிரார்த்தித்தார்.
பெரிய திருமலை நம்பிகள் உடனே பிடிகொடுக்கவில்லை. இப்போ இல்லை, அப்புறமா வா என்று சொல்லி அனுப்பிவிட்டார். மீண்டும் அணுகியபோதும், அதே பதில். இப்படி 18 முறை அவரை அலைக்கழித்தார் நம்பிகள். கடைசியாக சரி இப்போது சொல்கிறேன் என்று ஒப்புக் கொண்டார்.
ராமனுஜரின் பொறுமையைப் பாருங்கள்! ஓரிருமுறை கேட்டு மறுத்தாலே, சரி ஊர் உலகத்தில் இவருக்கு மட்டும்தானா ராமாயணம் தெரியும்? என்று அலுத்துக் கொண்டு வேறு ஆசார்யரைத் தேடத் தோன்றும். ஆனால் ராமானுஜர் அப்படிச் செய்யவில்லை. அந்த ஆசார்யாரிடத்திலேதான் கேட்கணும் என்று காத்திருந்தார்.
பெரியவர்களும் பண்ணுவார்கள். சிந்தாமல் கொள்ளக்கூடிய கலமா, அதற்கு தரிக்கும் சக்தி இருக்கிறதா என்று பார்த்துத்தான் உபதேசம் பண்ணுவார்கள். குரங்கு கையில் பூமாலை கொடுப்பது போல் காரியம் செய்ய மாட்டார்கள்.
நல்ல தாகம் இருக்கலாம். அதற்காக மண்டை ஓட்டிலே தீர்த்தம் கொடுத்தால் குடிக்கப் பிடிக்குமா? இல்லையே! பசுவின் பாலைக் கறந்து நாய்த் தோலிலே வைத்தால் பருகப் பிடிக்குமா..! அப்படித்தான் கல்வியும். ஆசார்யர்கள் பாத்திரம் அறிந்துதான் புகட்டுவார்கள். நாற்சந்தியில் அவல் பொறியை அவிழ்த்து கொட்டியது போல் வித்யையை வீணடிக்க மாட்டார்கள்.
சாஸ்திரக்ஞர்கள் பேசும்போது, உத்தம சிஷ்யனின் குணம் என்ன என்பதைச் சொல்லியிருக்கிறார்கள்.
தைல புத்தி உடையவன் உத்தம சிஷ்யன் என்று சொல்வார்கள்.
ஒரு பாத்திரத்தில் தீர்த்தத்தை வைத்துக் கொண்டு மேலே எண்ணெயை விட்டோமானால்,தீர்த்தத்தின் மேலே அந்த எண்ணெய் அப்படியே பரவும். அந்த மாதிரி, கேட்ட விஷயத்தை நன்றாகப் புரிந்து கொண்டு, இதரர்களுக்கும் அதைச் சொல்லித் தெளிவிப்பான் அவன். அதைத்தான் தைல (எண்ணெய்) புத்தி என்பது.
இன்னொரு வகை உண்டு. கிரத புத்தி. நெய்யை வழித்து ஒரு பாத்திரத்தில் ஜலத்தில் போட்டோமானால்,அந்த நெய் அப்படியே மிதக்கும்! அந்த மாதிரி ஆசார்யர் இடத்திலே கேட்ட விஷயத்தைத் தான் மட்டும் அனுபவிப்பவர் இந்த கிரதபுத்திக்காரர். யாராவது கேட்டால் ஒன்றும் சொல்லத் தெரியாது. உள்ளுக்குள்ளே ஏகப்பட்ட விஷயங்கள் ஓடும். ஆனால் இதரர்களுக்குச் சொல்லித் தெளிவைப் பிறப்பிக்கும் படியான சக்தி இராது.
இன்னொரு புத்தி கம்பள புத்தி! கீழே துப்பட்டி, ஜமக்காளம் எல்லாம் போட்டிருக்கிறது. காலட்சேபம் முடிந்த பிறகு ஒருத்தர் அதை எடுத்து மடித்து வைப்பார் அல்லவா? அவர் வெறுமனே மதிக்காமல், தும்பு தூசி போகிறதுக்காக ஒரு உதறு உதறி மடிப்பார். கம்பள புத்திக்காரர் அப்படித்தான் - ஆசார்யரிடம் வரும்போது ஒன்றும் தெரியாமல் வருவார். திரும்பிப் போகும் போதும் உதறிய துப்பட்டி போல், ஒன்றும் ஒட்டிக் கொள்ளாமல் போய் விடுவார்.
ஒரு விஷயமும் புத்தியில் ஏறாமல் இருப்பவரும் உண்டு - களிமண் புத்திக்காரர்!
இந்த நால்வகையினருள் தைல புத்திக்காரர்களைக் கண்டால் ஆசார்யர்களுக்கு ரொம்பப் ப்ரியம். கன்றுக் குட்டியினிடத்திலே பசுவானது எப்படி வாத்ஸல்யத்தோடு அன்பைப் பொழிகிறதோ அந்த மாதிரி கங்கா பிரவாகமாகப் பொழிவார்கள்.
18 முறை ராமானுஜரை சோதித்த ஆசார்யர் அவர் பொறுமையைக் கண்டு அப்படித்தான் பொழிந்தார்.
இவ்வளவு பொறுமை இருந்ததால்தான் ராமாயணம் புரியும்! திடீரென்று கேட்டுக் கொள்கிற விஷயமில்லை அது.
18 முறையும் பொறுமை காத்த ராமானுஜருக்கு 18 வித அர்த்தங்களை ராமாயணத்துக்குச் சொன்னார் பெரிய திருமலை நம்பிகள்!
இப்படிப்பட்ட ராமாயணத்தில் தன்னைத் தெளிவாக பரமாத்மா காட்டிக் கொடுத்திருக்கிறான். பரப்ரும்மமான தன்னை ஆசரிக்கும்படி சொல்கிறான். தான் வெறும் மனிதனல்ல.. மனித வேஷத்தில் வந்திருப்பவன் என்று உணர்த்தினான்.
அவன் மனித வேடம் போட்டிருந்ததால் அதற்கேற்ப நடிக்க வேண்டியதைப் போயிற்று! தான் பரமாத்மா என்பது அவனுக்குத் தெரியாமல் போய் விடுமா? ஒரு நாடகத்தில் ஒரு ஆண், பெண் வேடம் போட்டுக் கொள்கிறான் - பெண் போன்ற நடை, உடை, பாவனை அவனுக்கு... அதனால், தான் ஆண் என்பது தெரியாமல் போய் விடுமா? அந்த மாதிரி பரமாத்மாவும் உயர்ந்த ரீதியில், தான் பரமாத்மா என்பது தெரிந்தே மனித ரூபம் தரித்தான்.
சரி, இந்தப் பரமாத்மாவை அடைவதற்கு என்ன வழி? என்று கேட்டால், அதற்கும் அவன் செயலிலேயே பதில் கிடைக்கிறது.
பரமாத்மா எடுத்துக் கொண்ட காரியம் என்ன..?
துஷ்ட: சந்துஷ்டியை - மகிழ்ச்சியைத் தந்த காரியம் - ஹிதம் (மனதுக்கு இதம்) ஏற்படுத்திய காரியம் - அந்த காரியம்..?
சரணாகத ரக்ஷணம் என்னும் காரியம்!
ராமானுஜ நூற்றந்தாதி என்று ஒரு நூல். உயர்ந்த பிரபன்ன காயத்ரி என்று அதற்குப் பெயர். திருவரங்கத்த முதனார் என்கிற ஆசார்யர். ராமானுஜர் வாழ்ந்த காலத்திலேயே இதை எழுதி, அவர் எதிரிலேயே வாசித்துக் காண்பித்தார். அவ்வளவு உயர்ந்தது!
ப்ரபன்னர்கள் நித்தியம் இதை ஒரு தடவை சொல்ல வேண்டும் என்று பெரியவர்கள் விதித்திருக்கிறார்கள். அந்த நூலிலே, "படிகொண்ட சீர்த்தி ராமாயணமென்னும் பக்தி வெள்ளம்" என்று குறிப்பிட்டிருக்கிறது.
பக்திப் பிரவாகம் ராமாயணம்! எங்கு தொட்டாலும் பக்தி இருக்கிறது: எங்கு தொட்டாலும் சரணாகதி இருக்கிறது.
அதனால்தான் பகவானே பக்தி, சரணாகதியின் மேன்மைகளைப் பேசினான். பவித்ரம் இதம் உத்தமம் என்றான் பகவத் கீதையில் பரமாத்மா!
"என்னுடைய திருவடியில் கைங்கர்யம் பண்ணனும் என்கிற எண்ணம் யாருக்கு இருக்கிறதோ... அவர்கள் என்னை அடையலாம். என்னை அடைய இரண்டு வழிகள் உண்டு.
முதல் வழி: பக்தி மார்க்கம் - இது ரொம்ப உயர்ந்தது. உத்தமமானது. பவித்ரமானது. அப்படிப்பட்ட பக்தி யோகத்தால் நான் அடையத் தகுந்தவன்.
அப்படியில்லையென்றால், பிரப்த்யாவா - சரணாகதியினாலே அடையத் தகுந்தவன் நான். இவை தவிர மற்றதனால் என்னை அடைய முடியாது" என்று பகவானே பேசியிருக்கிறான்.
(தொடரும்)

ஆகையினாலே, நம்மைப்போல நோற்ற நோன்பில்லாதவர்கள், சாமான்யர்களாய் இருக்கக்கூடியவர்களுக்காகவே பரமாத்மா சொன்னான்:
"என் திருவடியைப் பற்று... பற்றினால், பக்தி யோகம் கொடுக்கக்கூடிய சந்தோஷத்தை உனக்கு நான் கொடுப்பேன்.."
பக்தி, சரணாகதி தவிர, ஆராய்ந்து பார்த்தால் இன்னொன்றும் இருக்கிறது ராமாயணத்தில்.
அதுதான் புருஷகாரம்.
புருஷகாரம் என்றால்..?
சிபாரிசு!
மஹாலக்ஷ்மி நமக்காக பகவானிடத்திலே பரிந்து பேசுகிறாள்!
(தொடரும்)
No comments:
Post a Comment