குறையொன்றுமில்லை (முதல் பாகம்)
அத்தியாயம் 5
நால்
வேதங்களிலே அதர்வ வேதம் ஒரு பரிசோதனைக் கூடம் மாதிரி. மற்ற மூன்று
(ரிக், யஜுர், சாம) வேதங்கள் சொல்வதைப் பரிசோதித்துப் பார்க்கிற கூடம்.
இன்றைக்கும் எல்லோராலும் ஒப்புக் கொள்ளபடற பல உண்மைகள் இந்த அதர்வ
வேதத்திலே இருக்கிறது. தீர்த்தம் என்பது இரண்டு வாயுக்களின் கூட்டுப்
பொருள். ஹைட்ரஜன் இரண்டு பங்கும் ஆக்சிஜன் ஒரு பங்கும் அதில் உள்ளது
என்கிறோம்.
H2O,
H2O என்று மனப்பாடம் பண்ணுகிறோம் அதர்வ வேதம் இதையே "பிராணம் ஏகம்
அன்யத்வே" அதாவது பிராண வாயு ஒரு பங்கும் இன்னொரு வாயு இரண்டு பங்கும்
தண்ணீரில் இருக்கிறது என்கிறது. அங்கிரஸ் மகரிஷியை தியானம் பண்ணச்
சொல்கிறது வேதம் - எல்லா தோஷங்களையும் நிவர்த்தி பண்ணுகிற அளவுக்கு அவர்
ஹோமங்கள் பண்ணியிருக்கிறார் என்பதால். சயன யக்ஞம் என்று ஒரு ஹோமம்
பண்ணினார் அவர். அதற்கு சந்திர லோகத்திலிருந்து மண் எடுத்து வந்து பூவுலக
மண்ணுடன் கலந்து பிசைந்து ஹோம குண்டம் தயாரிக்கணும் என்று சாத்திரம் "சந்த்ரமஸி கிருஷ்ணம்" என்று வேதம் சொல்கிறது. (சந்திர மண்டலத்து மண் கருப்பாகயிருக்கிறது என்று இதற்குப் பொருள்)
கல்கத்தா,
பிர்லா பிளானடோரியத்துக்கு அடியேன் போனபோது சந்திர மண்டலத்திலிருந்து
கொண்டு வரப்பட்ட மண்ணைக் காட்சிக்கு வைத்திருந்தார்கள். கருப்பாக இருந்த
அதைப் பார்த்ததும் "சந்த்ரமஸி கிருஷ்ணம்"
என்கிறதுதான் நினைவில் வந்தது. வேதம் சொன்ன வாக்கியம் பொய் இல்லை. ஆனால்
அன்றைக்கு அவர்கள் ராக்கெட்டில் பறந்து போய் சந்திரனிலிருந்து மண்ணைக்
கொண்டு வரல்லை. அவர்கள் கண்ணை மூடிக் கொண்டு, "ஹே, சந்திர மண்டலத்து மண்ணே வான்னா"
வந்துடும். மூடின கண்ணைத் திறந்து பார்த்தால் மண் அங்கே இருக்கும்.
இப்போது நாம் இயந்திர சக்தியைத் தான் நம்ப வேண்டியதாயிருக்கிறது. ஆனால்
எல்லாவற்றையும் காட்டிலும் உயர்ந்தது மந்திர சக்தி.
மந்திரம் அபரிமிதம் (வரையறையற்றது). யந்திரம் பரிமிதம்(வரையறைக்குட்பட்டது)
என்கிறது அதர்வ வேதம். எதிர்காலத்தில் வரவிருந்த யந்திர சக்தி பற்றிக்
கூட வேதத்தில் சொல்லியிருக்கிறது பாருங்கள். இப்போது நான் பேசுவதை டேப்
ரெகார்டரில் அப்படியே பதிவு பண்ண முடிகிறது. இதை நாம் ஏதோ முன்னேற்றம்னு
நினைக்கிறோம் ஆனால் அப்படியில்லை அது. டேப் ரிகார்டர் செய்யறதை செய்யக்
கூடிய சக்தியுடையவர்களாய் நாம் இருந்தோம் ஒரு முறை கேட்டால் அப்படியே
மனசுல பதிஞ்சுபோயிடும் . இப்போது நாம் சக்தியை வேறே விஷயங்களிலே ஏத்தி
வச்சிருக்கோம் அதனாலே அந்த ஆற்றல் இல்லை நமக்கு.
இவ்வளவையும் எதற்குச் சொல்கிறேன் என்றால் வேதம் சொல்வது ஏதோ மாய மந்திரமில்லை, ஆதாரமுள்ள விஞ்ஞானம் என்கிறதுக்காக.
போன
அத்தியாயத்தில், விஷ்ணு சஹாச்ற நாமத்திலே நரசிம்ஹா அவதாரம் விஷேசமாக
சொல்லப் பட்டிருக்கிரதாகச் சொன்னேன். அந்த நரசிம்ஹ அவதாரம் பற்றி அதர்வ
வேதம் விஞ்ஞான பூர்வமாக விளக்குகிறது பிரஹலாதனுக்கும் ஹிரண்ய
கசிபுவுக்கும் நடந்த விவாதத்தை விவரித்துக் காட்டும் அதர்வ வேதம், நரசிம்ஹ
அவதாரத்தை மின்சக்தி என்கிறது. பிரஹலாதன் அஸ்தி (உண்டு) என்று சொல்கிறான். ஹிரண்ய கசிபு நேதி (இல்லை) என்கிறான்
அஸ்தி என்கிற பாஸிட்டிவ் தத்துவனும் நேதி என்கிற நெகடிவ்வும் மோதிக்
கொண்டதாலே ஒளியும் ஒலியும் ஏற்பட்டதாம். ஒளிமயமாய் நரசிம்மன்
தோன்றினானாம். அவனுடைய அட்டகாசம் ஏழு உலகம் தாண்டிப் போய், பிரும்மா
அமர்ந்திருந்த தாமரையை ஓர் அடி அடித்ததாம். பிரும்மாவைக் கீழே
தள்ளியதாம். பிரும்மாவை மட்டும் ஏன் தள்ள வேண்டும்? இருக்கிறவனுக்கெல்லாம்
வரத்தைக் கொடுத்துவிட்டு, நீ மட்டும் ஜபமாலையை உருட்டிக் கொண்டு மனைவியின்
(சரஸ்வதி) வீணா கானத்தைக் கேட்டிண்டிருக்கியே என்றுதான் பிரும்மாவை
தள்ளியதாம்.
ஜெர்மன்
அறிஞர் மாக்ஸ் முல்லர் கூட நரசிம்ம அவதாரத்தை An Electrical Phenomenon
என்றுதான் விவரிக்கிறார் நரசிம்மனின் தேஜஸ் எங்கே இருக்கு என்று
கேட்டால், காயத்ரி மந்திரத்துக்குள்ளே இருக்கு. ஒளியாய் இருக்கக் கூடியவன்
நரசிம்மன் ஆனதாலே அந்த அவதாரத்தின் பெருமையும் சஹஸ்ர நாம தொடக்கத்தில்
இடம் பெற்றிருக்கிறது.
பிரணவத்தோடு
ஆரம்பித்து "விச்வம்" என்று முதல் நாமாவை விஷ்ணு சஹஸ்ர நாமத்தில்
சொல்கிறோம். விச்வம் என்கிற சப்தம் என்ன? அது ஒரு நாமம், ஒரு பதம்
மட்டுமில்லை. வேதத்திலே வரும் பொருள் அது. பகவானே விச்வம் என்று
சொல்வதாக ஆகிறது விச்வம் என்றால் பிரபஞ்சம். நாம் பார்க்கிற உலகம்
பார்க்கப்படுவதால்தான் அதற்கு லோகம் என்று பெயர்.
உபநிஷத் சொல்கிறது: காரணமாகிய பரப்ருஹ்ம்மத்தை நாம் உணர வேண்டும். எதைக் கொண்டு தெரிந்து கொள்வதாம்? சாஸ்திரத்தை கொண்டு தெரிந்து கொள்ளலாம். சாஸ்திரமாகிய உபநிஷத், காரணமாகிய பரப்ருஹ்ம்மத்தைத் தெரிந்து கொள்ள, காரியமாகிய பிரபஞ்சத்தைப் பார் என்கிறது.
எதனிடத்திலிருந்து பிரபஞ்ச வஸ்துக்கள் எல்லாம் உண்டாயிற்றோ, எதனால் அவை
ரக்ஷிக்கப்படுகின்றனவோ எதனிடத்தில் அவை லயமடைகின்றனவோ அதுவே இதற்குக்
காரணம் என்று பரப்ருஹ்ம்மத்தைக் குறித்துச் சொல்லப்படுகிறது. காரணம்
காரியம் இரண்டும் ஒன்றே. பரமாத்மா ஒருவன். ஒருவனே பலவாகி நிற்கிறான்,
பலவும் அவன்தான், ஒன்றும் அவன்தான். விச்வம் என்பதற்கு இதுவே பொருள்.
விஷ்ணு
சஹஸ்ர நாமத்திலே ரொம்ப முக்கியமான பகுதி எது என்று சிலர் கேட்கலாம்
இப்படிக் கேட்டால் கீதை பாராயணம் பண்ண முயன்ற ஒருவருடைய கதை நினைவில்
வருகிறது. பகவத் கீதை கற்றுக் கொள்ள போன சிஷ்யர், குருவிடம் "எந்த பகுதி முக்கியம்" என்று கேட்டானாம். "முதல்லேருந்து பதினேழு அத்தியாயங்களை விட்டுவிடு, பதினெட்டை மட்டும் விடாதே. அது மோக்ஷ சந்நியாச யோகம், அதைத் தெரிஞ்சுண்டா போதும்"
என்றார் குரு. பதினெட்டைப் புரட்டிப் பார்த்தவர், அதிலே ஏகமா சுலோகம்
இருக்கே, எந்தெந்த சுலோகம் முக்கியமோ அதை மட்டும் குறிச்சுக் குடுங்களேன்
என்றார். பதினெட்டிலே முன்னேயும் பின்னேயும் விட்டுவிடு, இரண்டு சுலோகம்
மட்டுமே மனனம் பண்ணு, என்று எளிமைப் படுத்தினாராம் குரு. "அதிலேயும்
முக்கியமான சொற்களை மட்டும் சொல்லுங்களேன், எல்லாவற்றையும் மனனம் செய்வது
கஷ்டம்" என்று சிஷ்யர் சலித்துக் கொள்ள, கடைசியில், நீ எதை விட்டாலும்
விடு.. மா சுச என்கிறதை மட்டு விட்டுடாதே என்றாராம் குரு. மா சுச - இதுதான் பகவத் கீதையின் சாரம். ஸ்ரீ பகவானுவாசா மா சுச: பகவான் சொன்னான் "கவலைப்படாதே". நாம்
எப்படியிருந்தால் கவலைப்படாமலிருக்கலாம் என்று பகவான் சொன்னான். அவன்
சொன்னபடி நடந்தால் கவலைப்படாமல் இருக்கலாம் என்றான். எப்படி நடந்து கொள்ள
வேண்டும் என்று அவன் சொன்னான்? என மீண்டும் கேட்டால், அதற்கு கீதையின்
முதல் அத்தியாயத்துக்குத்தான் திரும்பவும் போக வேண்டும்.
ஸ்ரீ
பகவானுவாசா மா சுச: என்பதை கீதையின் சாரமாகச் சொன்னது போல விஷ்ணு சஹஸ்ர
நாமத்தின் சாரமாக எதைச் சொல்லலாம்? நித்தியம் சஹஸ்ர நாமம் பாராயணம்
பண்ணுகிற ஒருவர், ஒரு திடீர் அவசரத்தின் போது நேரமில்ல்லாமல் போனால்
சுலபமாகச் சொல்லலி முடிக்க வழி இருக்கிறதா? இதை அன்றைக்கே பார்வதி
பரமசிவனிடம் கேட்டு விட்டாள். "ஆயிரம் திருநாமங்களை இலகுவான உபாயத்திலே
சொல்வதற்கு வழி உண்டா? அதற்கு ஈச்வரன் அழகாக பதில் சொல்கிறார்.
ஈச்வரோ வாசா:
ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
சஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே
வரானனே
- அழகான திருமுக மண்டலம் கொண்டவளே என்று பார்வதியைக் கொண்டாடுகிறார்
பரமசிவன். "ராமா ராமா ராமா" என்று மூன்று தடவை சொன்னால்,
சஹஸ்ரநாமத்துக்கு அது துல்யமானது என்கிறார். அதற்காக நித்தியமே நாம் "ஸ்ரீ ராம ராம ராம"
என்று சொல்லிவிடலாம்னு வைத்துக் கொள்ளக் கூடாது. நித்யம் சஹஸ்ரநாம
பராயணம் பண்ணணும். அது அபூர்வமாக முடியாமல் போகிற தினத்தில் "மூன்று முறை
ராம நாம சொன்னால் போதும்" என்று ஈச்வரனே பேசுகிறார்.
மூன்று முறை சொல்வது ஆயிரம் நாமங்களுக்கு ஈடாகும்? திருமழிசையாழ்வார் திருச்சந்த விருத்தத்திலே எண்ணில் அடங்கி
மூன்று முறை சொல்வது ஆயிரம் நாமங்களுக்கு எப்படி ஈடாகும்? திருமழிசையாழ்வார்
திருச்சந்த விருத்தத்திலே எண்ணில் அடங்கி உள்ள தத்துவத்தை எடுத்து
சொல்கிறார் வேத சமக மந்திரமும் எண்ணிக்கையைக் கொண்டாடுகிறது. ராமா என்ற
சொல்லை எடுத்துக் கொண்டால், ர வர்க்கத்திலே ரா என்பது இரண்டாவது எழுத்து.
ம என்பது ஐந்தாவது எழுத்து (வடமொழியின் ப ப ப ப ப ம வரிசை) இரண்டை
ஐந்தால் பெருக்கினால் கிடைப்பது பத்து. ஆக ராம என்ற ஒரு சொல்லுக்குரிய
எண் 10, ராம, ராம, ராம என்று மும்முறைகள் சொன்னால், அதற்குரிய எண் 10 x
10x 10 அதாவது ஆயிரம். ஆக, ராம, ராம, ராம என்று மும்முறை சொல்வது ஆயிரம்
திருநாமங்களுக்கு துல்யமானதுதானே. ராம நாமத்தின் மகிமையை கம்பன், வாலி
வதைப் படலத்திலே சொல்கிறான். ராமனின் அம்பில் அவன் நாமத்தை வாலி கண்டதை
விவரிக்கிறான்:
மும்மைசால் உலகுக்கெல்லாம்
மூலமந்திரத்தை முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும்
தனிப் பெரும் பதத்தை தானே
இம்மையே, எழுமை நோய்க்கும்
மருந்தினை இராமன் எண்ணும்
செம்மைசேர் நாமம் தன்னை
கண்களில் தெரியக் கண்டான்
இதனினும் உயர்வு ஒரு நாமத்துக்கு என்ன இருக்க முடியும் சொல்லுங்கள்?
தொடரும் ...
First of all I would like to thank you Mr. Murali. I am saravanan. For a long time I searched this article, probably when I read it in kalki magazine. I don’t know how much amount of work burden you have. But I request you to provide the remaining as soon as possible. Because already 63% of this month went but we had only one post. Actually I tried to contact you through email. But I don’t know where to get it. My email id saravanamoorthymechengg@gmail.com. If you have any other upanyasams please provide that too. Thank you very much to you for this kind of activity.
ReplyDeleteDear Mr Saravana,
DeleteThanks for your comments. I have sent my reply to your gmail account. Kindly check it. With Best Wishes