Thanks to Smt Saraswathi Thyagarajan for sharing !
மஹா பெரியவாளுக்குத் தான் ப்ரம்மத்தில் லயிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது என்பது தெரிந்தே இருந்தது என்று நினைக்கத் தோன்ருகிறது.
1993 டிஸம்பர் 18ஆம்தேதி. எனக்கு ஒரு கனவு.
பெரியவா ஒரு மண்டபத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள் வடலூர் ஸத்சங்கப் பணி
பற்றி என்னிடம் கேட்கிறார்கள். பிடியரிசித்திட்டம்,இலவச பாட புஸ்தகம்,ஆடை
வழங்குதல், கூட்டு வழிபாடு, கண்தானம், ரத்ததானம்,தேவாரம், திவ்ய ப்ரபந்தம்
சொல்லிக் கொடுத்து போட்டினடத்துவது, கோவில் இல்லாமல் வெட்டவெளியில்
நிற்கும்தெய்வச் சிலைகளுக்கு மாதம் ஒரு முறை ஆராதனை, அபிஷேகம் எல்லாம்
பற்றிச் சொன்னேன். பெரியவா சொன்னார்கள்..பொது வாழ்வில் ஈடுபட்டிருக்கிறாய்
சிலர் குறை சொல்வார்கள். அதற்காக இந்த சேவையை நிறுத்தாதே. அதுபோல்
புகழ்ந்தாலும் கர்வமடையக் கூடாது” என அறிவுரை சொன்னார்கள். புகழ்,இகழ்
இரண்டையும் சமமாகப் பாவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள்.
பேசிக்கொண்டிருக்கும்போதே திடீரென ”எனக்குத் தூக்கம் வருகிறது.க்ஷேமமா இரு, போயிட்டு வா” ..
எனக்குத் துணுக்கென்றது. இதுவரை பெரியவா தனக்குத் தூக்கம் வருவதாகச்
சொன்னதே இல்லையே.. ஒரு புறத்தில் நெய்வேலி சத்சங்க அன்பர்கள் ஜயராமனும்
மற்றவர்களும் பெரிய குழி தோண்டிக் கொண்டிருக்கிறார்கள்.
”ஏன்”என்று கேட்கிறேன்.’‘தெரியாது..மடத்தில் தோண்டச் சொன்னார்கள்”
கனவு கலைந்துவிட்டது .பின் பெரியவா பூதவுடல் தாங்கி இருந்தது வெகு சில நாட்களே.
பெரியவா என்னிடம் சூசகமாகச் சொல்லியும் போய் தரிசனம் செய்யாமல் இருந்த வருத்தம் இன்னம் நீங்கவில்லை.
பெரியவா என்னிடம் சூசகமாகச் சொல்லியும் போய் தரிசனம் செய்யாமல் இருந்த வருத்தம் இன்னம் நீங்கவில்லை.
பெரியவா இன்னும் மறையவில்லை. அவர் படத்தின் முன் நிற்கும்போது அருளமுதமாகப் புன்னகை செய்கிறார்களே அதுதான் நிஜம்.
பகிர்ந்தவர் பழையனூர் தேவராஜ சர்மா.
ஜய ஜய சங்கரா….
கனவு கண்டது 22 வருஷங்களுக்கு முன் இதே 18ஆம் தேதி - ஆகையால் இந்தப் பகிர்வு.