குறையொன்றுமில்லை (முதல் பாகம்)
அத்தியாயம் 28
ஒரு சமயம் மனசுக்கும், வாக்குக்கும் இடையே பெரிய சண்டை வந்தது. வாக்கு, மனசைக் கேட்டது "சதா என்னை சச்சரவு பண்றியே. கொஞ்சம் யோசனை பண்ணிப் பாரு நீ... நான் இல்லன்னா உனக்குப் பிரயோஜனம் உண்டா ? என் உதவியினால் தானே நீ வெளியில் வர முடியறது"?
மனசிலே ஆயிரம் எண்ணங்கள் இருக்கும். அடியேன் இங்கே வந்து உட்காருகிறேன். ராத்திரி 9 மணி வரைக்கும் வாயைத் திறக்காமலே உட்கார்ந்திருந்தால், என் மனத்திலே என்னதான் விஷயங்கள் ஓடினாலும், அது எதிரே இருப்பவர்களுக்கு ஏதாவது புரியுமோ?
வாக்தேவதை இல்லாத மனத்தினாலே பிரயோஜனமில்லை - என்று வேதமே சொல்கிறது. இன்னொரு இடத்தில், மனிதர்கள் ஒருத்தரோடு ஒருத்தர் தொடர்பு கொண்டு எதனாலே மேன்மையுறுகிறார்கள் என்றால், வாக்கினாலேதான் அவ்வாறு மேன்மையுறுகிறார்கள் என்கிறது வேதம்.
உலகிலே மனிதர்கள் வாக்கினால் பரிமாறிக் கொண்டுதான் உறவு முறையை வளர்த்துக் கொள்கிறார்கள். வாக்கு கேட்ட கேள்விக்கு வருவோம்... அதற்கு மனசு சொன்னது: "நான் மட்டும் இல்லாவிட்டால் நீ தனியாக பேசிவிட முடியுமா? நான் விஷய தானம் பண்ணினால்தானே நீ பேச முடியும்?"
வாக்கு வாதம் தொடர்ந்தது. ஏகமாய்ச் சண்டை. கடைசியில், இரண்டுமே, "பிரும்மாவிடம் போய்க் கேட்போம்" என்று நியாயம் கேட்கக் கிளம்பிப் போயின.
வாதி - பிரதிவாதி இரண்டுமே பிரும்மாவிடம் போய் நின்றன. "எங்களுக்குள் யார் பெரியவன்" என்று கேட்டன. இந்த பிரும்ம பாவம். லௌகிகமே தெரியாதவர். உலகம் முழுவதையும் படைக்கிறார் என்றாலும் அவருக்கு லௌகிகம் தெரியவில்லை.
"என்னுடைய படைப்பை சொல்கிறேன் - நீங்கள் சண்டை போடக் கூடாது" என்றார்.
"மனசை முன்பு சிருஷ்டி பண்ணினேன் - வாக்கை பின்பு சிருஷ்டி பண்ணினேன்"
பிராணனை முன்பு சிருஷ்டி பண்ணினேன். அபானனை பின்பு சிருஷ்டி பண்ணினேன். ஆகவே மனசுதான் பெரிது. வாக்கு சிறியது! "ஏ வாக்கே, மனசுடன் சண்டை போடதே" என்று சொல்லிவிட்டார்.
வாக்குக்கு ஏகமாய்க் கோபம். "என்னையும் படைத்து, மனசையும் படைத்து.. இப்படி நாங்கள் மத்யஸ்தம் கேட்க வந்த நேரத்தில் என்னை மட்டம் என்று சொல்லி விட்டீரே... அதுவும் அந்த மனசை பக்கத்திலே வைத்துக் கொண்டே சொல்லி விட்டீரே..என்னால் உமக்குப் பிரயோசனமே இல்லாமல் போகக் கடவது!" என்று சாபம் கொடுத்து விட்டது வாக்கு!
இந்தச் சாபம் காரணமாகத்தான் பிரும்மாவுக்கு என்ன மந்திரம் சொன்னாலும் உரக்கச் சொல்லக்கூடாது என்று வழக்கம் ஏற்பட்டுள்ளது. உரக்கச் சொல்லப்படும் மந்திரம் பிரும்மவுக்குப் போய்ச் சேரவே சேராது!
சபித்துவிட்டுப் போன வாக்தேவதை அதோடு விட்டு விடவில்லை. கோபத்துடன் ஒரு மூலையிலே போய் உட்கார்ந்து அழுதது. இந்த மனசு சும்மா இருக்கலாமல்லவா! அது தான் இல்லை! அங்கேயிருந்து வந்து வாக்தேவதையை முதுகிலே ஒரு தட்டு தட்டியது. "பெரிசா பேசினியே.. பிரும்மா என்ன சொன்னார் பார்த்தியா...அதுக்கப்புறமும் உனக்குத் தெளிவு வரலை. இப்படி விசாரப்பட்டுக் கொண்டு அழுதுகொண்டு உட்கார்ந்திருக்கியே..? என்னைப் பெரியவன் என்று ஒப்புக் கொள்வதில் உனக்கென்ன கஷ்டம்? என்று கிண்ட ஆரம்பித்தது.
"சரி, பிரும்மா சொன்னதை விட்டுடு: இப்போ உனக்கும் எனக்கும் போட்டி. நான் பரப்ரும்மத்தைப் பார்க்கப் போறேன். உனக்கு சக்தி இருந்தால் ஓடி வா பார்ப்போம்".. என்று மேலும் சொல்லிவிட்டு குடுகுடுவென்று ஓட ஆரம்பித்து விட்டது.
வாக்குக்கு அந்த கணத்தில் ரொம்ப பௌருஷம் வந்துவிட்டது. அப்படியா சங்கதி! நானும் வருகிறேன் என்று மனசோடு சேர்ந்து ஓடியது. மனசு ரொம்ப ரொம்ப வேகமாகப் போயிற்று. அந்த வேகத்தில் போக முடியாமல் வாக்கு ஏதோ தன் வேகத்திலே ஓடிப் போனது. ஆனால் இரண்டும் எத்தனை வேகமாய்ப் போய்த் தேடியும் அந்த பரப்ரும்மத்தைக் காண முடியவில்லை!
வேகமாய் வந்து கொண்டிருந்த வாக்கு திரும்பி ஓடி வந்து கொண்டிருந்த மனசைப் பார்த்துக் கேட்டது.
"ஏ மனசே, என்னைக் காட்டிலும் அதிவேகமாய் ஓடினாயே.. அந்த பரப்ரும்மத்தைக் கண்டாயா..? இல்லை..! என்று கையை விரித்து விட்டது மனசு. வாக்குக்கு ஒரே சந்தோசம். ஒரு எகிறு எகிறி மனசினுடைய தோள் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டு, "நீயும் நானும் கூட்டாளி தான்; நீயும் நானும் ஒண்ணு தான்.. வா! என்றதாம்.
இப்படி ஒப்புவமை சொல்லிக்கறதுலே சிலர் சமர்த்தர்கள். ஒருத்தர் சொல்கிறார் "அந்த சதுர்முக பிரும்மாவும் நானும் ஒண்ணுதான்" என்று. "எப்படி"? ஒருவிதத்துலே சமம்.. எந்த விதத்திலே? "அந்த சதுர்முக பிரும்மாவுக்கும் பரப்ரும்மத்தைக் குறித்துப் பிரமாணமாய்த் தெரியாது. எனக்கும் தெரியாது" என்றார். அந்த மாதிரிதான். மனம் ஓடியதையும் வாக்கு ஓடியதையும் அட்டவணை போட்டுப் பார்த்தால், மனம் ஓடிய தூரம் ரொம்ப அதிகம். ஆனால், வாக்கு, மனம் இரண்டுக்கும் வாய்த்த பலன் ஒன்று தான்! ஓடிய தூரம்தான் வேறுபட்டது.
இப்படி மனசும் வாக்கும் தேடி ஓடிய திருவடி, அவை தேடியும் காண மாட்டாத திருவடி, தம்மை நாடி வந்ததே என்று பிரும்மவுக்கு ஒரே சந்தோசம். சத்ய லோகத்தில், அவர் பக்கத்தில் பகவானின் திருவடி தெரிய பிரும்மா அதைத் தம் கமண்டல தீர்த்தத்தால் அலம்புகிறார். அந்த திருவடி தீர்த்தம், பகவானின் பாதம் துளைத்துக் கிழித்த ஆவரண தீர்த்தம், பலி சக்ரவர்த்தி பகவானின் கையிலே விடுகிற தீர்த்தம் என இந்த மூன்றும் ஏக தாரையாக - ஒரே நேர்க்கோடாக விழுந்ததாம்.
அவ்வாறு விழுந்ததென்றால், பகவான் எத்தனை வேகத்தில் உலகளந்தான் என்பதை நாம் யோசனை செய்து பார்க்க வேண்டும். கற்பனைக்கெட்டாத வேகம் அது.
உலகளந்த சேவடியை உயர்த்திய நிலையில் பகவானை சீர்காழியில் பார்க்கலாம். அந்த காட்சியை திருஞானசம்பந்தர் முன்னிலையில் பாடியிருக்கிறார் திருமங்கை ஆழ்வார்.
சின்னக் குறள் உருவாய் வந்தான். இந்த இரு நிலத்திலும் மூன்றடி கேட்டான். இரண்டாவது அடியால் அளந்து முடித்துவிட்டு, மூன்றாவது அடியை "எங்கே வைக்க" என்றான்.
ஆழ்வார் இதைப் பாடிய உடனே திருஞானசம்பந்தர் தம் கையில் இருந்த வேலை அவரிடம் கொடுத்து விட்டாராம். ஒரு வித்வானுக்குத்தானே இன்னொரு வித்வானின் சிரமம் தெரியும்!
இந்த சீர்காழிப் பெருமான் ஒரு காலை உயர்த்தி இருப்பதுடன் ஒரு விரலையும் உயர்த்தி, மூன்றாவது அடியை எந்த இடத்தில் வைக்க? என்று கேட்கிறான். அந்த மூன்றாவது அடிக்குத்தான் மகாபலி தன தலையைக் காட்டிவிட்டானே. பிறகு ஏன் விரல் இன்னும் உயர்த்திய நிலையிலேயே இருக்க வேண்டும்.
நாமும் பலியைப் போல் அவனுக்கு தலைதாழ்த்த வேண்டும் என்பதை நினைவுப்படுத்தத்தான். ஆளவந்தார் அப்படித்தான் பகவானிடம் போய்க் வேண்டிக் கொண்டார். "ஹே பிரபு! நாராயணா! திரிவிக்ரமா! மறுபடி உன் திருவடியை என் சிரசில் வையேன்..
மறுபடி என்ற சொல் கவனிக்கத்தக்கது. "முதலில் நீ திரிவிக்கிரமனாய் இந்த உலகை அளந்தபோது நான் என்ன வஸ்துவாக இருந்தேனோ தெரியாது. அப்போது என்னையும் சேர்த்து தானே அளந்திருப்பாய்.. எனவே இப்போது இரண்டாவது முறையாக".. என்று ஆளவந்தார் உட்பொருள் வைத்து வேண்டுகிறார்.
ஆகையினாலே, பகவான் எல்லா இடத்தையும் சமமாக அளந்து எடுத்துக் கொண்ட அவதாரம் வாமன அவதாரம். விச்வமாகிற பரமாத்மா, தன்னையே தான் கேட்டுப் பெற்றுக் கொண்டான்! கேட்டால் பலி சக்ரவர்த்தி கொடுக்கிறானா இல்லையா என்று பரீட்சித்து பார்த்தான்.
அதே போல் தான் நமது ஆத்மாவும் அவனுடையது. அதை நாம் அவனிடம் கொடுக்கிறோமே என்றுதான் அவன் சோதித்துக் கொண்டிருக்கிறான். நமது ஆத்மா அவன் சொத்து. அதைப் பெற வேண்டும் என்கிற முயற்சியிலேயே அவன் இருப்பான். அதைத்தான் இந்த விச்வம் என்கிற சப்தத்தினால் உணர்த்தப்படும் வாமன அவதாரமும் காட்டிக் கொடுக்கிறது.
ஒருவர் கையிலே ஒரு சவரன் மோதிரம் போட்டுக் கொண்டு இருக்கிறார். மோதிரம் காணாமல் போய்விடுகிறது. தொலைத்தவருக்கு ரொம்ப விசாரம். ஆனால், விரலைப் பிரிந்தோமே என்று மோதிரம் விசனப்படுகிறதா என்ன...
அந்த மோதிரத்தின் நிலைமை தான் நம்முடையது! பகவான் நமக்காக விசனப்படுகிறார். எப்போது நாம் நற்கதி அடைவோம் என்பது அவருக்குக் கவலை. நாமோ, கீழே விழுந்த மோதிரம் மாதிரி எதையம் லட்சியம் பண்ணாமல் உட்கார்ந்திருக்கிறோம். ஆனால் நம்மை விட்டு விடுவானா பரமாத்மா...? நம்மைக் கரை சேர்ப்பதே காரியமாய் இருப்பான்.
(தொடரும்)...